1. நவீன காலம் வரை தொடர்ந்து செழிப்படைந்த சமயங்கள் யாவை?
Answer : சமணம் மற்றும் பௌத்தம்
2. கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்த பலவகைப்பட்ட சமயங்களில் இடைக்காலத்தில் பிற்பகுதி வரை செயல்பாட்டில் இருந்த சமயம் எது?
Answer : ஆசீவகம்
3. கி.மு ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ சமயப் பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாக கூறும் நூல் எது?
Answer : பிகநிதியா (பழமையான பௌத்த நூல்)
4. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எங்கு கூடிய சமணப் பேரவை கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது?
Answer : வல்லபி
5. தங்களது அற போதனைகளில் வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர்கள் யாவர்?
Answer : மகாவீரர் மற்றும் புத்தர்
6. எதை வரையறுப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட முடியாமல் போனதால் முதல் சமண பேரவை கூட்டம் தோல்வியில் முடிந்தது?
Answer : சட்ட விதிகள்
7. ஆகம சூத்திரங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
Answer : அர்த்த-மகதி பிராகிருத மொழி
8. ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள், தனி நபர்களால் எழுதப்பட்டு துறவிகளாளும், அறிஞர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்களை உள்ளடக்கியது எது?
Answer : ஆகமங்கள் அல்லாத நூல்கள்
9. கி.பி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் ஏற்பட்ட இரு பெரும் பிரிவுகள் யாவை?
Answer : 1. திகம்பரர் 2. சுவேதாம்பரர்
10. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது?
Answer : 84
1
11. பஞ்சதந்திரம் என்ற நூலில் பெருமளவில் எந்த சமயத்தின் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது?
Answer : சமணம்
12. ஆகம சூத்திரத்தில் தொலைந்து போனதாக கருதப்படும் நூல் எது?
Answer : 12 வது நூல்
13. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை சூத்திரங்கள் இடம் பெற்றுள்ளன?
Answer : 41
14. ஆகம சூத்திரம் எத்தனை நூல்களைக் கொண்டது?
Answer : 12
15. 11 அங்கங்களை பின்பற்றியவர்கள் யார்
Answer : ஸ்வேதாம்பரர்கள்
16. சமணத்தின் அடிப்படை கோட்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : ஐந்து மூலங்கள்
17. ஆகம சூத்திரங்கள் யாருடைய நேரடி போதனைகளை உள்ளடக்கியது ஆகும்?
Answer : மகாவீரர்
18. ஆகம சூத்திரம் யாரால் தொகுக்கப்பட்டதாகும்?
Answer : மகாவீரரின் நேரடி சீடர்களால்
19. அறிஞர்கள் சமண சமயத்தின் கொள்கைகளை உறுதிபட விளக்க ஊக்குவித்த சமணப் பேரவை கூட்டம் எது?
Answer : வல்லபி
20. ஆகம சூத்திரங்கள் எவற்றை உள்ளடக்கியது?
Answer : சமண சமய புனித நூல்களை
2
21. சமண மதத்தின் துறவிகளுக்கான நடத்தை விதிகளை கூறுவது எது?
Answer : ஐந்து சேடாக்கள்
22. 12 உப அங்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : நெறிமுறை குறிப்பேடுகள்
23. திகம்பரர், சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே எதை தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொண்டனர்?
Answer : ஆகம சூத்திரங்களை
24. 11 அங்கங்களையும், 12 உப அங்கங்களையும், 5 சேடாக்களையும், 5 மூலங்களையும், பத்திர பாகுவின் கல்பசூத்திரா போன்ற எட்டு பல்வகைப்பட்ட நூல்களையும் கொண்டது எது?
Answer : 41 சூத்திரங்கள்
25. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை மாபெரும் உரை ( மகா பாஷ்யா) இடம்பெற்றுள்ளது?
Answer : 1
26. சமண இலக்கியங்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
Answer : இரண்டு 1. ஆகம சூத்திரங்கள் 2. ஆகமங்கள் அல்லாத சூத்திரங்கள்
27. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை உரைகள் இடம் பெற்றுள்ளன?
Answer : 12
28. நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகத்திற்கும் அடுத்த உலகத்திற்கும் இடையே பாதை அமைப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Answer : தீர்த்தங்கரர்கள்
29. கல்பசூத்ராவின் ஜைனசரிதா என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer : பத்திரபாகு
30. பார்சவ நாதர் மற்றும் மகாவீரரின் வரலாறுகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Answer : கல்பசூத்ராவின் ஜைனசரிதா
3
31. சமண சமயத்தின் கடைசி மற்றும் 24 ஆவது தீர்த்தங்கரர் யார்?
Answer : மகாவீரர்
32. சமண சமயத்தை நிறுவிய முதல் தீர்த்தங்கரர் யார்?
Answer : பார்சவநாதர்
33. கி.மு 296 இல் சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்கு புலம் பெயர்ந்து பின் அங்கேயே குடியமர்ந்தவர் யார்?
Answer : பத்திரபாகு
34. சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கமாகக் கொண்ட நூல் எது?
Answer : கல்பசூத்ராவின் ஜைனசரிதா
35. நாலடியார் என்ற நூலை இயற்றியவர்கள் யார்?
Answer : சமண துறவிகள்
36. சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : கொங்கு பகுதிகள்
37. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : பாண்டிய நாடு
38. தன்சொந்த முயற்சியால் மேநிலையை அடைந்து சமயப்பற்றுடைய, இறுதியில் துறவுபூண்ட ஒரு அரசனின் வாழ்க்கையை வர்ணிக்கும் நூல் எது?
Answer : சீவக சிந்தாமணி
39. பொதுவாக தமிழர்கள் சமணத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தனர்?
Answer : திகம்பரர்
40. சீவக சிந்தாமணி நூலின் ஆசிரியர் யார்?
Answer : திருத்தக்க தேவர்
4
41. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சமண நூல் எது?
Answer : சீவக சிந்தாமணி
42. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என நம்பப்படுகிறது?
Answer : சமணம்
43. களப்பிரர்கள் எந்த மதத்தின் ஆதரவாளர்களாக இருந்ததாக நம்பப்படுகிறது?
Answer : சமணம்
44. சமணர்கள் எங்கிருந்து கொங்கு பகுதிக்கும், காவிரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டை பகுதிக்கும், பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர்?
Answer : கர்நாடகாவில் இருந்து
45. திருச்சிராப்பள்ளி, தெற்கு முகமாக புதுக்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : காவிரியின் கழிமுகப்பகுதி
46. எந்த குகையின் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு குடைவரைக்கோவிலும் உள்ளன?
Answer : சித்தன்னவாசல்
47. சித்தன்னவாசல் குகையில் வேலி அமைக்கப்பட்டுள்ள குகையின் பின்னே தரையில் எத்தனை சமணப் படுக்கைகள் அமைந்துள்ளன?
Answer : 17
48. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எந்த குகை நிலப்பகுதியிலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும் பாறை ஒன்றில் அமைந்துள்ளது?
Answer : சித்தன்னவாசல்
49. சித்தன்னவாசலில் வரிசையாக அமைந்துள்ள எது சமணர்களின் தங்கும் இடங்களாக இருந்ததாக நம்பப்படுகிறது?
Answer : சமணப் படுகைகள் எனப்படும் கல்தூயிலிடங்கள்
50. சித்தன்னவாசல் குகை கோவிலில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோவில் எது?
Answer : அறிவர் கோவில்
5
51. சித்தன்னவாசலில் அளவில் பெரியதாக உள்ள கற்படுகையில் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த எம்மொழியிலான கல்வெட்டுக்கள் உள்ளன?
Answer : தமிழ்-பிராமி
52. அறிவர் கோவில் எந்த நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும்?
Answer : ஏழாம் நூற்றாண்டு
53. எந்த கோவிலின் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பதாக உள்ள மண்டபத்தின் இடப்புற சுவரில் தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்களும் வலப்புறச் சுவரில் ஆச்சாரியார்களின் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன?
Answer : அறிவர் கோவிலில்
54. அறிவர் கோவிலில் காணப்படும் சுவரொவியங்கள் எந்த சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன?
Answer : அஜந்தா சுவரோவியங்களுடன்
55. அறிவர் கோவில் எந்த அரசர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்?
Answer : முற்கால பாண்டியர்கள்
56. அறிவர் கோவிலை மத்திய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை எந்த ஆண்டு தனது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தது?
Answer : 1958
57. அறிவர் கோவிலை ASI தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் அதை சுற்றி வேலி அமைக்கவும் பார்வையாளரின் வருகையை முறைப்படுத்தவும் எத்தனை ஆண்டுகள் ஆனது?
Answer : 20 ஆண்டுகள்
58. விஜயநகர ஆட்சியின் போது புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடர் யார்?
Answer : இருகப்பா
59. காஞ்சிபுரத்தில் எத்தனை சமண கோவில்கள் உள்ளன?
Answer : இரண்டு
60. திரிலோக்கியநாத ஜைனசாமி கோவில் மற்றும் சந்திர பிரபா கோவில் ஆகிய இரண்டு கோவில்களும் யாருடைய கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது?
Answer : பல்லவர்கள்
6
61. விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயரின் காலம் யாது?
Answer : 1377-1404
62. தமிழகத்தில் யாருடைய ஆட்சி காலத்தில் சமண மதம் செழித்தோங்கியது?
Answer : பல்லவர்கள்
63. பல்லவ அரசர் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் எந்த மதத்தை பின்பற்றினார்?
Answer : சமணம்
64. திரிலோக்கியநாத ஜைனசாமி கோவில் மற்றும் சந்திர பிரபா கோவில்களின் சங்கீத மண்டபம் ஒன்றைக் கட்டி கோவிலை விரிவு படுத்தியவர்கள் யாவர்?
Answer : இருகப்பா மற்றும் இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சர்
65. காஞ்சிபுரத்தில் உள்ள சமண கோவில்களில் யாருடைய காலத்தில் அழகுமிக்க சுவர் ஓவியங்கள் வரையப்பட்டது?
Answer : இருகப்பா மற்றும் இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சர்
66. கி.பி ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீன பயணி யார்?
Answer : யுவான் சுவாங்
67. பெரும்பாலான பல்லவ அரசர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்?
Answer : சமணம்
68. கி.பி ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த சமண துறவிகளின் கற்படுகைகள் எங்கு காணப்படுகிறது?
Answer : பைரவ மலையில் ( வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா)
69. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சமணர்கள் எத்தனை விழுக்காடு உள்ளனர்?
Answer : 0.12
70. தமிழ்நாட்டில் சமணம் புத்துயிர் பெற்றதை குறிக்கும் கோவில் எங்கு உள்ளது?
Answer : கழுகு மலையில் உள்ள சமண கோவில் (தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம்)
7
71. எந்த சமண மத கோவில் புதுப்பித்தல் பணியின்போது வண்ணங்கள் பூசப்பட்டு விட்டதால் பாழாகிவிட்டன?
Answer : திருப்பருத்தி குன்றத்தில் உள்ள திரிலோக்கியநாதர் கோவில்
72. திருலோக்கியனாக ஜைனசாமி கோவில் மற்றும் சந்திர பிரபா கோவில்களில் உள்ள யாருடைய வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளை சித்தரிக்கின்றன?
Answer : தீர்த்தங்கரர்கள்
73. எந்த கோவிலில் பஞ்சவர் படுக்கை என்றழைக்கப்படும் பாறையில் செதுக்கி மெருகேற்றப்பட்ட கற்படுகைகள் உள்ளன?
Answer : கழுகுமலை சமண கோவில்
74. கழுகுமலையில் உள்ள சமண கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்ததாகும்?
Answer : கி.பி எட்டாம் நூற்றாண்டு
75. திருப்பருத்தி குன்றத்தில் உள்ள திருலோக்கியநாதர் கோவிலின் எப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன?
Answer : திரிகூட பஸ்தி எனப்படும் இரண்டாவது கருவறையில்
76. மதுரைக்கு அருகே உள்ள எந்த கிராமத்தில் சமணர்களின் குகைகள், கற்படுகைகள், கல்வெட்டுகள் ஆகியவை அதிகம் காணப்படுகிறது?
Answer : கீழக்குயில்குடி கிராமம்
77. எந்த சமயத்தில் கல்வி நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்றுத் தரப்பட்டது?
Answer : சமணர்களின் கல்வி நிறுவனங்களில்
78. புத்தரின் உண்மையான பெயர் யாது?
Answer : சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர்
79. மதுரை நகருக்கு மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குன்று எது?
Answer : கீழக்குயில்குடி குன்று
80. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை யாது?
Answer : 83,359
8
81. கீழக்குயில்குடி கிராமத்தின் குன்றுகளில் உள்ள சிற்பங்கள் எந்த பாண்டிய அரசரின் காலத்தை சேர்ந்தவையாகும்?
Answer : பராந்தக வீரநாராயண பாண்டியன்
82. கழுகு மலைக் குகை கோவிலில் தீர்த்தங்கரர்களின் உருவங்களைத் தவிர யாருடைய உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன?
Answer : யக்சர்கள் மற்றும் யக்சிகள் ( ஆண் பெண் பணியாளர்கள்)
83. ஏனைய பகுதிகளில் காணப்படும் கற்படுகையில் உள்ள தலையணை பகுதி எங்கு உள்ள கற்படுகையில் காணப்படவில்லை?
Answer : பைரவ மலையில் உள்ள சமணர் படுகையில்
84. மூன்று சமண குகைகளும், இரண்டு சமண கோவில்களும், 22 வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய 16 மீட்டர் உயரமுடைய சிலையும் எங்கு அமைந்துள்ளது?
Answer : திருமலை சமணக் கோவிலின்
85. கீழக்குயில் குடி கிராமத்தின் குன்றில் எத்தனை சிற்பங்கள் காணப்படுகின்றன?
Answer : 8
86. கழுகுமலை சமண கோவிலை உருவாக்கியவர் யார்?
Answer : பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்செடையான்
87. சமண மடாலயங்களும் கோவில்களும் எவ்வாறு சேவை செய்துள்ளனர்?
Answer : கல்வி கற்றுக் கொடுக்கும் மையங்களாக
88. தூய்மையான நடத்தையைப் பெற எவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்?
Answer : வினய பீடகா
89. புத்தரின் போதனைகள் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
Answer : கி.மு 80
90. கி.பி 860 முதல் 900 ஆண்டு வரை ஆட்சி புரிந்த பாண்டிய அரசன் யார்?
Answer : பராந்தக வீரநாராயண பாண்டியன்
9
91. சமணர்களின் கல்வி நிலையங்களில் அவற்றோடு இணைக்கப்பட்ட எதைக் கொண்டிருந்தன?
Answer : நூலகங்களை
92. பைரவ மலை எந்த கிராமத்தின் அருகே அமைந்துள்ளது?
Answer : குக்கரப்பள்ளி
93. அரச வாழ்வு என்பது?
Answer : மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்
94. துறவு வாழ்வு என்பது?
Answer : தன்னடக்க நிலையை எய்துவது
95. அரச வாழ்வு மற்றும் துறவு வாழ்வு ஆகிய இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வழியாக புத்தர் கூறிய வழி எது?
Answer : எண்வகைவழி
96. கௌதம புத்தரின் தந்தை இன்றைய நேபாளத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியில் எந்த இனக்குழுவின் தலைவராக ஆட்சி புரிந்து வந்தார்?
Answer : சாக்கிய
97. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின் அருகே ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ள சமண கோவில் எது?
Answer : திருமலை சமணக் கோவில்
98. விவாதங்களை சான்றுகளாக கொண்டு பௌத்தத்தின் மூலக்கோட்பாடுகளை கூறுவது எது?
Answer : சுத்த பீடகா
99. பெண்கள் துறவறம் பூணவும், பெண்களிடையே கல்வியை கொண்டு செல்லவும் ஊக்கம் அளித்த சமயம் எது?
Answer : சமணம்
100. சமணர்களின் கல்வி மையம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer : பள்ளி
10
101. தமிழ்நாட்டில் உள்ள சமண சிலைகளில் மிகவும் உயரமானதாக கருதப்படும் சிலை எது?
Answer : திருமலை சமணக் கோவிலில் காணப்படும் நேமிநாதர் சிலை
102. திருமலை சமண கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
Answer : கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு
103. எதன் சுற்று வட்டார பகுதிகளில் 26 குகைகளும், 200 சமண கற்படுகைகளும், 60 கல்வெட்டுகளும், 100க்கும் மேற்பட்ட சிலைகளும் உள்ளன?
Answer : மதுரை
104. துறவு வாழக்கையை மேற்கொண்ட பின்னரும் எங்கிருந்தும் உண்மையான பொருளை உணர முடியாதவராய் இருந்தவர் யார்?
Answer : கௌதமர்
105. மானுட துயரங்கள் குறித்த புதிரையும், அதற்கான காரணங்களையும் களைவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்வதில் வெற்றி பெற்றவர் யார்?
Answer : கௌதம புத்தர்
106. அரச வாழ்வு, துறவு வாழ்வு ஆகிய இரண்டுமே தவறு என உறுதிப்படக் கூடியவர் யார்?
Answer : கௌதம புத்தர்
107. ரிஷபநாதர் அல்லது ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி ஆகியோரின் சிற்பங்கள் மதுரைக்கு அருகே எந்த கிராமத்தில் உள்ள குன்றில் காணப்படுகிறது?
Answer : கீழக்குயில்குடி
108. பௌத்த துறவிகளுக்கான விதிகள் எதில் இடம் பெற்றுள்ளன?
Answer : வினய பீடகா
109. திரிபிடகா என்ற பௌத்த பொது விதிகள் எத்தனை பிரிவுகளை கொண்டுள்ளது?
Answer : மூன்று
110. திரிபிடகா என்ற பௌத்த பொது விதிகள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
Answer : பாலி மொழியில்
11
111. புத்தரின் போதனைகள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
Answer : பாலி மொழியில்
112. கௌதம புத்தர் யாருடைய சமகாலத்தவர் ஆவார்?
Answer : மகாவீரர்
113. பௌத்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றார்கள்?
Answer : பிச்சுகள்
114. திரிபிடகா என்பதன் பொருள் யாது?
Answer : மூன்று கூடைகள்
115. சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர் என்பதன் ஆங்கில மொழியாக்கம் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது?
Answer : கௌதமர் சாக்கிய இனக் குழுவை சேர்ந்தவர் மேலும் அவர் முழு நிறைவு எனும் இலக்கை எட்டியவர்
12