1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் கருவறை எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
Answer : இரண்டு
2. தமிழக கோவில் கட்டடக்கலையில் முற்காலச் சோழர்கள் காலம் என்ன?
Answer : கி.பி.850- 1100
3. பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் லிங்கங்கள் எந்தப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவை?
Answer : தாய்ப் பாறையிலிருந்து
4. கோவில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் (மாடக் குழிகள்) இருந்தால் அதை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
Answer : செம்பியன் மகாதேவி பாணி
5. பிரகதீஸ்வரர் கோவிலின் உயரம் என்ன?
Answer : 55 மீட்டர்
6. தமிழக கோவில் கட்டடக்கலையில் பல்லவர்கள் காலம் என்ன?
Answer : கி.பி.600- 850
7. 'தேசிவிநாயகம்' என எங்குள்ள குகைக்கல்வெட்டில் கணபதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer : பிள்ளையார்பட்டி
8. ஏறத்தாழ எந்த ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரிலுள்ள சிவன் கோவில் ராஜராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்?
Answer : கி.பி.1009
9. ஆதிநாதர் கோவில் மண்டபம் எங்கு அமைந்துள்ளது?
Answer : ஆழ்வார்திருநகரி
10. தமிழக கோவில் கட்டடக்கலையின் பிற்காலச் சோழர்கள் காலம் என்ன?
Answer : கி.பி.1100 -1350
1
11. சமணத்துறவிகள் வாழ்ந்த குகை எது?
Answer : சித்தன்னவாசல்
12. பிள்ளையார்பட்டி என்ற குடைவரைக்கோவில் எதற்கு அருகே அமைந்துள்ளது?
Answer : காரைக்குடி
13. எந்த இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக் குழிகளாலும் பூவாணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன?
Answer : அர்ச்சுன, பீம, தர்மராஜா
14. ராஜசிம்மன் என்று அறியப்பட்ட பல்லவ அரசர் யார்?
Answer : இரண்டாம் நரசிம்மவர்மன்
15. குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த பல்லவ அரசர் யார்?
Answer : மகேந்திரவர்மன்
16. திருமலை நாயக்கர் அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
Answer : மதுரை
17. வானமாமலையார் கோவில் எங்கு அமைந்துள்ளது?
Answer : நாங்குநேரி
18. காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டிய பல்லவ அரசர் யார்?
Answer : இரண்டாம் நரசிம்மவர்மன்
19. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் மொத்தமாக உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு?
Answer : 1984
20. பல்லவ அரசர் மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் எது?
Answer : மண்டகப்பட்டு
2
21. துவாரபாலகர்கள் என்பவர்கள் யார்?
Answer : வாயிற்காப்போர்
22. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்குபுறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் யாருடைய காலத்தில் கட்டப்பட்டன?
Answer : விஜயநகர, நாயக்கர்
23. தஞ்சாவூர் பெரிய கோவில் மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் அதன் சிகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : தட்சிண மேரு
24. பாண்டியப் பேரரசின் குகைக்கோவில்களில் எந்த கடவுளர்களுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளன?
Answer : சிவன் ,விஷ்ணு, பிரம்மா
25. தமிழக கோவில் கட்டடக்கலையின் நவீன காலம் என்ன?
Answer : கி.பி 1600க்கு பின்னர்
26. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
Answer : திருக்குறுங்குடி
27. தஞ்சாவூர் பெரிய கோவில் விமானம் கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம் எத்தனை அடிகள் உயரம் கொண்டது?
Answer : 216 அடி உயரம்
28. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் கொண்ட கோவில் எது
Answer : இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில்
29. ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் எது?
Answer : மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள்
30. ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிகச் சிறந்த எ.கா?
Answer : முற்றுப்பெறாத வெட்டுவான் கோவில், கழுகுமலை
3
31. இந்திரனின் யானை வழிபட்ட கடவுள்?
Answer : ஐராவதீஸ்வரர்
32. காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவிலில் உள்ள இரு கருவறைகள் எந்த கடவுளுக்கு படைத்தளிக்கப்பட்டுள்ளது?
Answer : ஒன்று சிவபெருமானுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளது
33. இராமேஸ்வரம் கோவிலின் வடக்கிலும் தெற்கில் உள்ள பிரகாரத்தின் நீளம் எவ்வளவு?
Answer : 195 மீட்டர் நீளம்
34. நந்தியின் உருவம் எந்தப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவை?
Answer : தாய்ப்பாறையிலிருந்து
35. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?
Answer : இரண்டாம் இராஜராஜன்
36. கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?
Answer : இராஜேந்திர சோழன்
37. பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ண கோவில் எங்கு உள்ளது?
Answer : திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில்
38. இராமேஸ்வரம் கோவில் பிரகாரச் சுற்றுகள் எத்தனை?
Answer : 3
39. ஜலகண்டேஸ்வரர் கோவில் கல்யாண மண்டபம் எங்கு அமைந்துள்ளது?
Answer : வேலூர்
40. காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டிய பல்லவ அரசர் யார்?
Answer : இரண்டாம் நந்திவர்மன்
4
41. பாண்டியர் கால கோவில் கருவறையின் இருபுறத்திலும் எந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன?
Answer : துவாரபாலகர்
42. ஜலகண்டேஸ்வரர் கோவில் கல்யாண மண்டபம் எங்கு அமைந்துள்ளது?
Answer : வேலூர்
43. பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களில் அமைந்துள்ள புகுமுக மண்டபம் எங்கு உள்ளது?
Answer : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் முகப்பில் மேற்கூரையுடன் அமைந்துள்ளது.
44. பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களில் அமைந்துள்ள திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில் எங்கு உள்ளது?
Answer : திருநெல்வேலி மாவட்டம்
45. தங்கள் குடைவரைக் கோவில்களின் கருவறையில் கடவுளர்களின் சிலைகளை நிறுவியவர்கள் யார்?
Answer : பாண்டியர்கள்
46. சுமார் எத்தனை ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராக விளங்கியது?
Answer : 250 ஆண்டுகள்
47. பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களில் அமைந்துள்ள தெற்குவிழா மண்டபம் எங்கு உள்ளது?
Answer : ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் கோவிலில
48. குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை எந்த ஆண்டுக்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது?
Answer : கி.பி.700
49. அர்ச்சுனன் தவமிருக்கும் பிரம்மாண்டமான கருங்கல் பாறை ஏறத்தாழ எத்தனை அடி நீளமும் எத்தனை அடி உயரமும் கொண்டது?
Answer : 100 அடி நீளம் 45 அடி உயரம்
50. இராமேஸ்வரம் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் உயரம் என்ன?
Answer : 7 மீட்டர் உயரம்
5
51. தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்கள் எவை?
Answer : மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்கள்
52. பல்லவர்களின் சம காலத்தவர் கள் யார்?
Answer : முற்காலப் பாண்டியர்கள்
53. இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு மேற்கு பிரகாரங்களின் நீளம் எவ்வளவு?
Answer : 120 மீட்டர் நீளம்
54. பாறை குடைவரைக் கோவில்களும் கட்டுமானக் கோவில்களும் யாருடைய கட்டக் கலையின் சிறப்புமிக்க அம்சங்கள்?
Answer : பாண்டியர்கள்
55. முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலைக்கு தமிழ்நாட்டில் திண்டிவனத்திற்கு அருகேயுள்ள எந்தக் கோவிலைக் குறிப்பிடலாம்?
Answer : தாதாபுரம் கோவில்
56. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிள்ளையார்பட்டியிலுள்ள குடைவரைக் கோவில் யாருடைய கலைக்கு சிறந்தச் சான்று?
Answer : பிற்காலப் பாண்டியர்கள்
57. இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் மூன்று பிரகாரங்களில் எந்தப் பிரகாரம் மிகப் பழமையானது?
Answer : உட்புறப் பிரகாரம்
58. யாருடைய காலத்தில் கோவில் கட்டடக் கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது?
Answer : பல்லவர்கள்
59. ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோவில்களைக் கட்டிய பல்லவ அரசர் யார்?
Answer : இரண்டாம் நரசிம்மவர்மன்
60. கி.பி. 850 இல் விஜயாலய சோழன் காலத்தில் முக்கியத்துவம் பெறத்துவங்கிய சோழர்கள் தொடர்ந்து அப்பகுதியில் எத்தனை ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர்?
Answer : 400
6
61. தஞ்சாவூர் பெரிய கோவிலில் எத்தனை அடி நீளமும் எத்தனை அடி உயரமும் கொண்ட மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்?
Answer : 16 அடி நீளமும் 13 அடி உயரமும்
62. வரதராஜ பெருமாள் கோவில் எங்கு அமைந்துள்ளது?
Answer : காஞ்சிபுரம்
63. எந்தக் கோவிலின் ஒட்டுமொத்த வடிவம் ஒரு தேர்போலக் காட்சியளிக்கும்?
Answer : ஐராவதீஸ்வரர் கோவில்
64. தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு இல் உள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்?
Answer : மகாபலிபுரம்
65. காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவிலில் எத்தனை கருவறைகள் உள்ளன?
Answer : இரு கருவறைகள்
66. தென்னிந்தியக் கலைக்கு யாருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது?
Answer : பிற்காலப் பாண்டியர்கள்
67. மகாபலிபுரத்திலுள்ள ஏழு கோவில் குடைவரைக் கோவில்களாக அமைக்கப்படாமல், வெட்டியெடுக்கப்பட்ட கற்களைக்கொண்டு கட்டப்பட்ட கோவில் எது?
Answer : காஞ்சி வைகுண்டப் பெருமாள்
68. முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை எந்த பாணியைப் பின்பற்றி அமைந்தது?
Answer : செம்பியன் மகாதேவி பாணி
69. 1000- கால் மண்டபம் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் கோவில் எது?
Answer : மதுரை மீனாட்சி
70. தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி எத்தனை கட்டங்களாக நடைபெற்றது?
Answer : ஐந்து
7
71. தமிழக கோவில் கட்டடக்கலையின் விஜயநகர நாயக்கர் காலம் என்ன?
Answer : கி.பி.1350-1600
72. இராமேஸ்வரம் கோவிலின் வெளிப்பிரகாரத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் எத்தனை?
Answer : 1200க்கும் மேல் உள்ளன
8