7 ம் வகுப்பு - விஜயநகர் பாமினி அரசுகள்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. விஜநகர பேரரசு, கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் புரிந்து, இறுதியில் பிரதாபருத்திரன் தனது மகளை யாருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக உறுதி கூறினர்?

Answer : கிருஷண தேவராயர்

2. கிருஷ்ண தேவராயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அவரின் முதற்கட்ட தலையாய பணியாக இருந்தது?

Answer : துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்கு பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவது

3. மதுரை சுல்தானியத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்தவர் யார்?

Answer : குமார கம்பணா

4. பாமினி அரசு நிறுவப்பட்ட ஆண்டு?

Answer : 1347

5. விஜயநகர கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் அதிகம் இடம் பெற்றுள்ள விலங்கு?

Answer : குதிரை

6. பெல்காமில் நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் வெடி மருந்தை பயன்படுத்தியவர்?

Answer : முகமது கவான்

7. ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவரும் குருவுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் விஜயநகர பேரரசு ஒரு குறிப்பிட்ட காலம் வரை எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : வித்யா நகர்

8. கிருஷ்ணதேவராயர் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலை எந்த மொழியில் எழுதினார்?

Answer : சமஸ்கிருதம்

9. கிருஷ்ணதேவராயர் அமுக்கத்மால்யதா என்னும் காவியத்தை எந்த மொழியில் இயற்றினார்?

Answer : தெலுங்கு

10. கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்தாக கூறியவர்?

Answer : அப்துர்ரஸாக்

1

11. பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுருந்தார். அவரை மீட்டு அரியணையில் அமர வைத்த விஜயநகர அரசர்?

Answer : கிருஷ்ண தேவராயர்

12. விஜயநகர் அரசு உருவாகி எத்தனை ஆண்டுகள் கழித்து பாமினி அரசு தோன்றியது?

Answer : பத்து ஆண்டு

13. அமுக்கத்மால்யதா என்பதன் பொருள்?

Answer : தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்

14. அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் எந்த அரசரின் அவையை அலங்கரிந்தனர்?

Answer : கிருஷ்ண தேவராயர்

15. கிருஷ்ண தேவராயர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?

Answer : 20 ஆண்டுகள்

16. சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர்?

Answer : வித்யாரண்யர்

17. போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்திய கோவில்களுக்கு வழங்கி, அதன் மூலம் கோவில்களின் நுழைவுவாயில்களில் கோபுரங்களை நிறுவியவர்?

Answer : கிருஷ்ண தேவராயர்

18. பாமினி அரசு எத்தனை முடியரசர்களால் ஆளப்பட்டது?

Answer : பதினெட்டு

19. ஆரவீடு வம்சத்தார் எங்கு புதிய தலைநகரை உருவாக்கினர்?

Answer : பெனுகொண்டா

20. எந்த விஜயநகர அரசர் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சியளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை தொடங்கி வைத்தவர்?

Answer : இரண்டாம் தேவராயர்

2

21. விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள், ஓடிசாவை சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமான பகுதி?

Answer : துங்கபத்திரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதியும், கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதி

22. பாமினி அரசை நிறுவியவர்?

Answer : அலாவுதீன் ஹசன் (அ) ஹசன் கங்கு

23. விஜய நகரம் எத்தனை அரச மரபுகளால் ஆளப்பட்டது?

Answer : நான்கு சங்கம வம்சம் - 1336 to 1485 சாளுவ வம்சம் - 1485 to 1505 துளுவ வம்சம் - 1505 to 1570 ஆரவீடு வம்சம் - 1570 to 1646

24. கிருஷ்ண தேவராயர் இரண்டாம் இலக்கு?

Answer : குல்பர்காவை கைப்பற்றுவது

25. நரசிம்மருக்குப் பிறகு திறமை மிகுந்த படைத்தளபதி நரசநாயக்கர அரியணையை கைப்பற்றியவர் எந்த வம்சத்தை தொடங்கிவைத்தார்?

Answer : துளுவ வம்சம்

26. கோல்கொண்டா கோட்டை எங்குள்ளது?

Answer : ஹைதரபாதிலிருந்து 11 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் 120 மீட்டர் உயரத்தில் உள்ளது

27. துக்ளக் அரசர்களிடம் பணி செய்துவந்து ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவம் யார் அறிவுறுத்தலின் படி அப்பணியை கைவிட்டு நாட்டை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்கும்மாறு அறிவுறுத்தியதாக ஒரு வாய் மொழி வரலாற்று மரபு கூருகிறது?

Answer : வித்யாரண்யர்

28. சங்கம வம்சத்தின் கடைசி அரசர்?

Answer : இரண்டாம் விருபாக்சிராயர்

29. அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?

Answer : குல்பர்கவிற்க்கு

30. ராக்சச தங்கடி (தலைக்கோட்டை போர்) நடைபெற்ற ஆண்டு?

Answer : 1565

3

31. பாமினி பேரரசின் தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு?

Answer : 1429

32. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்?

Answer : கிருஷ்ண தேவராயர்

33. விஜயநகரத்தின் பொருள் என்ன?

Answer : வெற்றியின் நகரம்

34. விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதை தெளிவாக கூறும் நூல்?

Answer : மதுரா விஜயம்

35. விஜயநகரம் கர்நாடகத்தின் தென்பகுதியில் யாரால் நிறுவப்பட்டது?

Answer : ஹரிஹரர், புக்கர்

36. கிருஷ்ண தேவராயர் எந்த நாட்டு பீரங்கிப்படை வீர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை எளிதாக தோற்கடித்தார்?

Answer : போர்த்துகீசியர்

37. மழை நீரை சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனம் குளங்களையும், நீர்த்தேக்ககளையும் உருவாக்கியவர்?

Answer : கிருஷ்ண தேவராயர்

38. பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் சூழ்ச்சியால் விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சியுற்ற ஆண்டு?

Answer : 1646

39. பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை எழுதியவர்?

Answer : தெனாலிராம கிருஷ்ணா

40. குல்பர்காவில் இரு மசூதிகளை எழுப்பியவர்?

Answer : முதலாம் முகமது ஷா

4

41. சங்கம வம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்?

Answer : இரண்டாம் தேவராயர்

42. சங்கம வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் விருபாக்சிராயரை கொலை செய்துவிட்டு தம்மையே பேரரசராக அறிவித்த தளபதி?

Answer : சளுவ நரசிம்மர்

43. பாரசீக வேதியியல் வல்லுநர்களை அழைத்து வந்து வெடிமருந்து தயாரிப்பதிலும் அவற்றை பயன்படுத்துவதிலும் படையினருக்கு பயிற்சியளித்தவர்?

Answer : முகமது கவான்

44. விஜயநகர பேரரசர்கள் எந்த பெயரில் அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களை வெளியிட்டனர்?

Answer : வராகன்

45. கிருஷ்ண தேவராயர் அவரது பெயருக்கு புகழை சேர்க்கும் வண்ணம் கோவில்களின் நுழைவுவாயில்களில் கோபுரங்களை எவ்வாறு அழைக்கப்பட்டன?

Answer : ராயகோபுரம்

46. பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் ஆட்சிபுரிந்தது?

Answer : 180 ஆண்டு

47. பாமினி அரசில் எட்டு அமைச்சர் கொண்ட குழுவை ஏற்படுத்தியவர்?

Answer : முதலாம் முகமது

48. யாரின் மரணத்துடன் சாளுவ வம்சம் முடிவுக்கு வந்தது?

Answer : சளுவ நரசிம்மர்'

49. கோல்கொண்டா கோட்டையின் மிக உயரமான இடம்?

Answer : பால ஹிசார்

50. ஓடிசாவை சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களை தோற்கடித்த விஜயநகர (சங்கம வம்சம்) அரசர் யார்?

Answer : முதலாம் தேவராயர்

5

51. ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவரும் எந்த அரசர்களிடம் பணி செய்தனர்?

Answer : துக்ளக் அரசர்களிடம்

52. மதுரா விஜயம் என்னும் நூலை எழுதியவர்?

Answer : கங்காதேவி

53. அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டு ஆட்சி புரிந்தார்?

Answer : 11 ஆண்டு

54. விஜயநகர பேரரசின் திறமை மிக்க படைத்தளபதி?

Answer : சாளுவ நரசிம்மர்

55. விஜயநகர கோவில் கட்டுமான பணி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : விஜயநகரப்பாணி

56. திருமலை தேவராயர் எங்கு ஆரவீடு வம்சத்தை தொடங்கினார்?

Answer : சந்திரகிரியில்

57. கிருஷ்ணதேவராயரின் அமுக்கத்மால்யதா யாரைப்பற்றி கூறுகிறது?

Answer : பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியை (ஆண்டாள்) பற்றியது

58. கிருஷ்ணதேவரையரைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்?

Answer : இளைய சகோதரர் அச்சுதராயர்

59. விஜயநகரம் இருந்த இடம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : ஹம்பி

60. பாமினி அரசு பதினாறாம் நூற்றாண்டின் எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது?

Answer : ஐந்து (பீஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா, பீடார், பீரார்)

6

61. விஜயநகரில் போர்த்துகீசிய கட்டுமான கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரிய ஏரி கட்டப்பட்டதாக கூறிய பயணி யார்?

Answer : பாரசீக பயணி அப்துர்ரஸாக்

62. பாமினி அரசர்களிடமிருந்து பெல்காம், கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றிய விஜயநகர (சங்கம வம்சம்) அரசர் யார்?

Answer : இரண்டாம் ஹரிஹரர்

63. அலாவுதீன் ஹசன் தமது அரசை நான்கு மகாணங்களாக பிரித்தார் அவை எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : தராப்

64. குமார கம்பணாவின் மனைவி பெயர்?

Answer : கங்காதேவி

65. எந்த தொழில்சார் அமைப்புகள் கைவினை, குடிசைதொழில்களை முறைப்படுத்தின ?

Answer : கில்டுகள் என்றழைக்கப்பட்ட தொழில்சார் அமைப்புகள் கைவினை குடிசைதொழில்களை முறைப்படுத்தின

66. பாமினி அரசில் ஏற்கனவே இருந்த நான்கு மாகாணங்களை எட்டாக மாற்றியவர்?

Answer : முகமது கவான்

67. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சம்களுக்கு பெயர் பெற்ற இடம்?

Answer : கோல்கொண்டா கோட்டை

68. 1368 வாரங்கல் அரசோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ண கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செலவத்தை பெற்ற பாமினி அரசர்?

Answer : முதலாம் முகமது ஷா

69. குல்பர்காவில் ஒரு மசூதியை முதலாம் முகமது ஷாவால் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?

Answer : 1367

70. அலாவுதீன் ஹசன் தௌலதாபாத் நகரை கைப்பற்றி, எந்த பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக்கொண்டார்?

Answer : பாமன்ஷா

7

71. ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா ராமசாமி கோவில், விட்டலா சுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களை கட்டியவர்?

Answer : கிருஷ்ண தேவராயர்

8

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share