1. எந்த நூற்றாண்டில் புதிய பிராந்திய அரசுகள் உருவானதன் விளைவாக கங்கைச் சமவெளியில் வாழ்ந்த மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன?
Answer : கி.மு ஆறாம் நூற்றாண்டு
2. இரும்பை பயன்படுத்துவதில் ஏற்பட்ட நிபுணத்துவம் மற்றைய மகாஜனபதங்களை விட எந்த அரசு எழுச்சிபெற முக்கிய காரணமாயிற்று?
Answer : மகதம்
3. கி.மு ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் செயல்பட்ட இரண்டு வகையான அரசுகள் எவை?
Answer : கண சங்கங்கள் மற்றும் முடியாட்சி அரசுகள்
4. கங்கை சமவெளியில் எதன் காரணமாக வேளாண் உற்பத்தி அதிகரித்தது?
Answer : இரும்பினாலான கொழுமுனையின் பயன்பாடு
5. முடியாட்சி என்றால் என்ன?
Answer : ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதாகும்
6. மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : ஜனபதங்கள்
7. சங்கா என்ற சொல்லின் பொருள் யாது?
Answer : மன்றம்
8. கணா என்ற சொல்லின் பொருள் யாது?
Answer : சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்ட மக்களை குறிக்கும்
9. ஹரியங்கா வம்சத்தை ஏற்படுத்தியவர் யார்?
Answer : பிம்பிசாரர்
10. கடைசி நந்த அரசர் யார்?
Answer : தனநந்தர்
1
11. மௌரிய பேரரசுக்கு சான்றாக விளங்கும் மதம் சார்ந்த இலக்கியங்கள் எவை?
Answer : சமண, பௌத்த நூல்கள் மற்றும் புராணங்கள்
12. மகதத்தின் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் யார்?
Answer : காலசோகா
13. ஜூனாகத் கல்வெட்டு எந்த பேரரசிற்குரிய கல்வெட்டு சான்றாகும்?
Answer : மௌரிய பேரரசு
14. அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்?
Answer : கி.மு 261
15. பிந்துசாரரின் இயற்பெயர் என்ன?
Answer : சிம்ஹசேனா
16. எந்தப் பெயரிலான அமைச்சரவை ஒரு புரோகிதர், ஒரு சேனாபதி, ஒரு மகா மந்திரி மற்றும் இளவரசரைக் கொண்டதாகும்?
Answer : மந்திரிபரிஷத்
17. கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவர் யார்?
Answer : மெகஸ்தனிஸ்
18. பண்டைய மகதத்தை எத்தனை அரச வம்சங்கள் ஆட்சி செய்தன?
Answer : நான்கு அரச வம்சங்கள்
19. அசோகரின் எத்தனையாவது தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது?
Answer : இரண்டாம் தூண் கல்வெட்டு
20. காந்தகார் பகுதியில் அசோகரின் கல்வெட்டுகள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன?
Answer : கிரேக்கம் மற்றும் அராபிக்
2
21. இரண்டாவது பௌத்த மாநாட்டை கூட்டியவர் யார்?
Answer : காலசோகா
22. அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் எவ்வாறு அழைக்கப்படும்?
Answer : பேராணை
23. நாளந்தா எனும் சமஸ்கிருதச் சொல் எந்த மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது?
Answer : நா + அலம் + தா
24. வெள்ளி நாணயங்களில் (பணம்) எந்தெந்த வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன?
Answer : மயில், மலை மற்றும் பிறைச்சந்திரன்
25. பண்டைய மகத நாட்டில் இருந்த பௌத்த மடாலயம் எது?
Answer : நாளந்தா
26. பாகா வரிமுறையில் மொத்த விளைச்சலில் எத்தனை பங்கு நில வரியாக வசூல் செய்யப்பட்டது?
Answer : 1/6 பங்கு
27. பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் எத்தனை?
Answer : 33
28. மௌரிய பேரரசுக்கு சான்றாக விளங்கும் வெளிநாட்டு சான்றுகள் எவை?
Answer : தீபவம்சம். மகாவம்சம், இண்டிகா
29. கலிங்கப் போரின் பயங்கரத்தை அசோகர் தன்னுடைய எத்தனையாவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்?
Answer : 13 வது பாறை கல்வெட்டு
30. மௌரிய பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகரம் எத்தனை நுழைவாயில்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை கொண்டிருந்தது?
Answer : 64 நுழைவுவாயில்கள் மற்றும் 570 கண்காணிப்பு கோபுரங்கள்
3
31. மௌரியர்களின் நிர்வாகத்தில் நீதித் துறையின் தலைவராக இருந்தவர் யார்?
Answer : அரசர்
32. இந்தியாவின் முதல் பேரரசு எது?
Answer : மௌரியப் பேரரசு
33. மௌரியப் பேரரசை மகதத்தில் நிறுவியவர் யார்?
Answer : சந்திரகுப்த மௌரியர்
34. இந்தியாவில் முதன் முதலாக பேரரசை உருவாக்கியவர்கள் யார்?
Answer : நந்த வம்சத்தினர்
35. பிம்பிசாரரின் மகன் யார்?
Answer : அஜாதசத்ரு
36. ராஜகிரகத்தில் முதல் பௌத்த சமய மாநாட்டை கூட்டியவர் யார்?
Answer : அஜாதசத்ரு
37. அசோகர் எந்த போருக்குப்பின் பௌத்த மதத்தை தழுவினார்?
Answer : கலிங்கப்போர்
38. சாரநாத் கற்றூணிண் சிகர பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும் வட்ட வடிவ அடிப் பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசிய கொடியின் மையமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
Answer : (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது. (வடக்கே) சிங்கம்
39. கரோஸ்தி எழுத்துக்கள் அசோகரின் எந்தப் பகுதியில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் இடம் பெற்றிருந்தது?
Answer : வடமேற்கு பகுதி
40. மௌரியர்களின் நிர்வாகத்தில் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்?
Answer : அரசர்
4
41. மௌரிய பேரரசின் தலைநகர் எது?
Answer : பாடலிபுத்திரம்
42. அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் எத்தனையாவது பௌத்த மத மாநாட்டை கூட்டினார்?
Answer : மூன்றாவது பௌத்த மத மாநாடு
43. நகர நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?
Answer : நகரிகா
44. பிந்துசாரர் தனது மகனான அசோகரை எந்த பகுதியின் ஆளுநராக நியமித்தார்?
Answer : உஜ்ஜையினி
45. பிந்துசாரரை கிரேக்கர்கள் எவ்வாறு அழைத்தனர்?
Answer : அமிர்தகதா
46. அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும், மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தை பரப்புவதற்காக எங்கு அனுப்பி வைத்தார்?
Answer : இலங்கை
47. லும்பினியிலுள்ள அ அசோகரது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வரிமுறைகள் எவை?
Answer : பாலி மற்றும் பாகா
48. அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது எது?
Answer : நிலங்கள்
49. சந்திரகுப்த மௌரியர் சரவணபெலகோலாவில் (கர்நாடகா) எந்த சமய சடங்கு செய்து உயிர் துறந்தார்?
Answer : சல்லேகனா
50. மௌரியர்களின் படை எத்தனை குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
Answer : 6 குழுக்கள்
5
51. முதல் நந்த வம்ச அரசர் யார்?
Answer : மகாபத்ம நந்தர்
52. நான்கு முக்கிய மகாஜனபதங்கள் யாவை?
Answer : மகதம் , அவந்தி , கோசலம், வத்சம்
53. சாஞ்சியில் இருந்த அசோகரின் கல்வெட்டுகள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன?
Answer : பிராமி
54. கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கை சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?
Answer : 16 மகாஜனபதங்கள்
55. தம்ம அசோகர் என்பதன் பொருள் யாது?
Answer : நீதிமான் அசோகர்
56. பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தை பரப்புவதற்காக அசோகர் எந்த புதிய அதிகாரிகளை நியமித்தார்?
Answer : தர்ம மகாமாத்திரர்கள்
57. அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தை எவ்வாறு வழங்கியது?
Answer : பணமாக வழங்கியது
58. தர்மத்தின் கொள்கையை நாட்டு மக்களுக்கு பரப்புவதற்காக அசோகர் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் பெயர் என்ன?
Answer : தர்மயாத்திரைகள்
59. யாருடைய காலத்தில் நாளந்தா புகழ்பெற்ற கல்வி மையமாக திகழ்ந்தது?
Answer : குப்தர்கள் காலம்
60. மௌரிய பேரரசுக்கு சான்றாக விளங்கும் மதச்சார்பற்ற இலக்கியங்கள் எவை?
Answer : கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், விசாகதத்தரின் முத்ராராட்சஷம், மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்
6
61. எந்த நாணயங்கள் மாஸாகாஸ் என அழைக்கப்பட்டன?
Answer : செப்பு நாணயங்கள்
62. அசோகர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Answer : தேவனாம்பிரியர்
63. எங்கு அமைந்துள்ள அசோகரின் தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், இந்தியாவின் தேசிய கொடியின் மையம் சக்கரம் ஆகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது?
Answer : சாரநாத் கற்றூண்
64. காசி (பனாரஸ்), வங்கா (வங்காளம்), காமரூபா (அஸ்ஸாம்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை ஆகிய இடங்களில் சிறப்புமிக்க துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்று எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer : அர்த்தசாஸ்திரம்
65. மௌரியர்கள் காலத்தில் எந்தெந்த நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது?
Answer : கிரேக்கம் (ஹெலனிக்), மலேயா, இலங்கை, பர்மா
66. அசோகருடைய எந்த இரண்டு பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரள புத்திரர் ஆகியோரையும், சத்திய புத்திரர்களையும் குறிப்பிடுகின்றது?
Answer : 2 மற்றும் 13 ஆம் பாறை கல்வெட்டுகள்
67. மௌரியர்களின் நகர நிர்வாகம் எத்தனை உறுப்பினர்களை கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டது?
Answer : 30 உறுப்பினர்கள்
68. எந்த பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பழங் காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டை சுவர்களை இணைத்து சீன பெருஞ்சுவரை உருவாக்கினார்?
Answer : குன்-சி-ஹங்
69. 'அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார்'என்று கூறிய வரலாற்று அறிஞர் யார்?
Answer : H.G.வெல்ஸ்
70. மடாலயம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் யாது?
Answer : Monastery
7
71. சாஞ்சி எங்கு அமைந்துள்ளது?
Answer : மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு அருகில்
72. நாகார்ஜுனா பராபர் குன்றுகளில் உள்ள 3 குகைகளில் யாருடைய அர்ப்பணிப்பு கல்வெட்டுகள் உள்ளன?
Answer : அசோகர்
73. மௌரியர்கள் காலத்தில் முக்கிய இறக்குமதி பொருட்கள் எவை?
Answer : குதிரைகள், தங்கம், கண்ணாடி பொருட்கள், பட்டு (லினன்)
74. மௌரியர் கால கலை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டு இருந்தது?
Answer : இரண்டு வகைகள்(உள்ளூர் கலை, அரச கலைகள் )
75. சமத்துவம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் யாது?
Answer : Egalitarian
76. ஆய்வுநூல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் யாது?
Answer : Treatise
77. ராஜகிரகம் என்பதன் தற்போதைய பெயர் என்ன?
Answer : ராஜ்கிர்
78. நாகார்ஜுன கொண்டாவிலுள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன?
Answer : தசரத மெளரியர்
79. கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் எந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?
Answer : ஜியஸ்
8