1. எகிப்து நாகரிகத்தின் காலம்?
Answer : 3100-1100 பொ.ஆ.மு
2. தொல் பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொஹஞ்ச தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்த ஆண்டு என்ன?
Answer : 1920
3. சிவிஸ் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
Answer : நகரம்
4. மெசபடோமியா நாகரிகத்தின் காலம்?
Answer : 3500-2000 பொ.ஆ.மு.
5. ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தன் நூலில் விவரித்தவர் யார்?
Answer : சார்லஸ் மேசன்
6. சிந்துவெளி நாகரிகத்தின் காலம்?
Answer : 3300-1900 பொ.ஆ.மு
7. சீன நாகரிகத்தின் காலம்?
Answer : 1700-1122 பொ.ஆ.மு
8. கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படைவீரர் மற்றும் ஆராய்ச்சியாளர் யார்?
Answer : சார்லஸ் மேசன்
9. லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?
Answer : 1856
10. 'அந்த பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது' என ஹரப்பா இருந்ததற்கான முதல் ஆதாரத்தைக் குறிப்பிட்டவர் யார்?
Answer : சார்லஸ் மேசன்
1
11. நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய எந்த மொழி வார்த்தையான 'சிவிஸ்' என்பதிலிருந்து வந்தது?
Answer : இலத்தீன்
12. ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கிய ஆண்டு எது?
Answer : பொ.ஆ.மு 1900
13. ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் எந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது?
Answer : முதிர்ச்சியடைந்த ஹரப்பா
14. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் எது?
Answer : மெஹெர்கர்
15. எஞ்சி தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை எந்த கருவி மூலம் அறிய முடியும்?
Answer : ரேடார் கருவி
16. காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய ஆறுகள் உள்ள நாடு எது?
Answer : பாகிஸ்தான்
17. 'நடனமாது' என்ற வெண்கலத்தால் ஆன சிறிய பெண் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
Answer : மொஹெஞ்ச-தாரோ
18. இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Answer : 1861
19. மக்கள் வெண்கலத்தாலான பொருட்களைப் பயன்படுத்திய காலம்?
Answer : வெண்கலக்காலம்
20. எப்போது குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கிசே பிரமிடு கட்டப்பட்டது?
Answer : பொ.ஆ.மு.2500
2
21. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் எவ்வளவு அளவு வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது?
Answer : 1704 மி.மீ
22. செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று எந்த மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
Answer : ஹரியானா
23. ஒரு பொருளின் வயதை அறியும் முறை எது?
Answer : கார்பன் 14
24. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பம்சம் என்ன?
Answer : திட்டமிட்ட நகர அமைப்பு
25. காவ்ரி, பொருண்ஸ் என்ற ஆறுகள் உள்ள நாடு எது?
Answer : ஆப்கானிஸ்தான்
26. இன்றும், கொற்கை, வஞ்சி தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ள நாடு எது?
Answer : பாகிஸ்தான்
27. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் எங்கு உள்ளன?
Answer : ஆப்கானிஸ்தான்
28. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
Answer : சுமேரியர்கள்
29. இந்திய தொல்லியல் துறை யார் உதவியுடன் நிறுவப்பட்டது?
Answer : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
30. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்?
Answer : சிவப்பு
3
31. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?
Answer : புது தில்லி
32. சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளவர் யார்?
Answer : அரசன் நாரம் - சின்
33. லோதல் என்னும் இடம் குஜராத்தில் எந்த ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
Answer : சபர்மதி
34. லோதல் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு உள்ளது?
Answer : குஜராத்
35. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள் உள்ள இடம் எது?
Answer : அபு சிம்பல்
36. மெசபடோமியா ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் எது?
Answer : ஜிகரட்
37. மெஹெர்கர் என்ற இடம் எங்கு உள்ளது?
Answer : பாகிஸ்தான் நாட்டில் ,பலுச்சிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது
38. மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகிப்படுத்தப்பட்ட உலோகம் எது?
Answer : செம்பு
39. ஹரப்பாவின் காலம் எது?
Answer : வெண்கலக்காலம்
40. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன்பற்றி தெரியாது?
Answer : இரும்பு
4
41. தொல்லியலாளர்கள் நிலத்தடியை ஆய்வு செய்ய எதனைப் பயன்படுத்துகின்றனர்?
Answer : காந்தப்புல வருடி
42. மெஹெர்கரில் எந்த காலத்திலேயே நாகரிகத்துக்கு முந்தை வாழ்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
Answer : பொ.ஆ.மு.7000
5