1. உவரி எங்கே உள்ளது?
Answer : கொற்கைக்கு அருகில்
2. பூம்புகார் யாருடைய துறைமுகம்?
Answer : சோழர்கள்
3. காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் சிலர் பெயர்களை கூறுக?
Answer : தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர்
4. சாணக்கியர் எழுதிய நூல் எது?
Answer : அர்த்தசாஸ்திரம்
5. காஞ்சி நகரைச் சுற்றிலும் காணப்படும் நீர்நிலைகள் எது?
Answer : ஏரி
6. உலகின் மிக தொன்மையான நாகரிகம் எது?
Answer : மெசபடோமியா
7. காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் எது?
Answer : கைலாசநாதர் கோயில்
8. தொண்டியில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்ட நறுமணப் பொருள்கள் யாவை?
Answer : அகில், சந்தனம்
9. தமிழகத்தில் பண்டைய காலத்தில் பள்ளிகள் முதன்முதலில் ஏராளமாக அமைக்கப்பட்ட நகரம் எது?
Answer : காஞ்சி
10. மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் என்ன?
Answer : சந்தனம்
1
11. கோவலனின் தந்தை பெயர் என்ன?
Answer : மாசாத்துவன்
12. தரைவழித் தடங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள் எது?
Answer : கருமிளகு
13. பூம்புகார் வணிக ரீதியாக எத்தகைய நகரம்?
Answer : துறைமுக நகரம்
14. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நகரம் எது?
Answer : மதுரை
15. சோழநாடு தற்போது எந்தப் பகுதிகளை குறிக்கும்?
Answer : தஞ்சை, திருவாரூர், நாகை
16. தொண்டை நாட்டில் பழமையான நகரம் எது?
Answer : காஞ்சி
17. புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்புகளில் இடம் பெற்றுள்ள ஊர் எது?
Answer : மதுரை
18. கண்ணகியின் தந்தை பெயர் என்ன?
Answer : மாநாய்கன்
19. தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் மிகவும் புகழ் பெற்றவை எவை?
Answer : மதுரை, காஞ்சி, பூம்புகார்
20. பாண்டியர்கள், சோழர்கள், களப்பிரர்கள் ஆட்சி செய்த நகரம் எது?
Answer : மதுரை
2
21. பூம்புகார் நகரத்து வணிகர்கள் பொருளை அதிக விலைக்கு விற்பதை தவறான செயல் என கருதினர்- எனக் கூறும் நூல் எது?
Answer : பட்டினப்பாலை
22. கிழக்குப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் என்ன?
Answer : பவளம்
23. 'கல்வியில் கரையிலாத காஞ்சி' என்று கூறிய நாயன்மார் யார்?
Answer : திருநாவுக்கரசர்
24. பொதுவாக பூம்புகாரின் சிறப்பைப் பேசும் நூல் எது?
Answer : சிலப்பதிகாரம்
25. காஞ்சியில் ஏரிகள் எதனுடன் இணைக்கப்பட்டுள்ளது?
Answer : கால்வாய்
26. பட்டினப்பாலையின் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?
Answer : 2 ம் நூற்றாண்டு
27. சந்திரகுப்தரின் அமைச்சர் யார்?
Answer : சாணக்கியர்
28. பிறநாட்டு நாணயங்களும் அச்சடிக்கப்பட்டது என்ற புகழுக்குரிய ஊர் எது?
Answer : மதுரை
29. அல்லங்காடி என்பது எந்த பொழுதில் உள்ள அங்காடி?
Answer : இரவு நேரத்து
30. சங்க இலக்கிய நூலான பட்டினப்பாலையிலிருந்து பூம்புகார் துறைமுகத்தின் எச்சிறப்பினை தெரிந்துகொள்ளலாம்?
Answer : வணிகம்
3
31. இரட்டை காப்பிய நூல்கள் எவை?
Answer : சிலப்பதிகாரம், மணிமேகலை
32. நகரங்களில் சிறந்தது காஞ்சி' என்று கூறிய கவிஞர் யார்?
Answer : காளிதாசர்
33. வேளாண்மைச் சமூகத்தில் முக்கியமான மேலாண்மை எது?
Answer : நீர் மேலாண்மை
34. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?
Answer : பல்லவமன்னன் ராஜசிம்மன்
35. காஞ்சிக்கு கூடுதல் படிப்பு படிக்க வந்த சீனப் பயணி யார்?
Answer : யுவான் சுவாங்
36. மாநாய்கன் என்பதன் பொருள் என்ன?
Answer : பெருங்கடல் வணிகன்
37. நாயன்மார்களுள் முதன்மையானவர் யார்?
Answer : திருநாவுக்கரசர்
38. இந்திய புனிதத் தலங்கள் எத்தனை ?
Answer : 7
39. துறைமுக நகரம் எது?
Answer : புகார்
40. வணிக நகரம் எது?
Answer : மதுரை
4
41. தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
Answer : மதுரை
42. பூம்புகாரின் வேறு பெயர்கள் என்ன?
Answer : புகார், காவிரிபூம்பட்டினம்
43. கல்வி நகரம் எது?
Answer : காஞ்சிபுரம்
44. கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் எவை?
Answer : குதிரை
45. பொ.ஆ. 200 வரை சிறப்புற்றுத் திகழ்ந்த புகார் நகரம் எதனால் அழிந்து போனதாகக் கூறப்படுகிறது?
Answer : கடல்கோள் அல்லது கடல் சீற்றம்
46. கல்லணை எந்த மன்னர்களால் கட்டப்பட்டது?
Answer : சோழர்கள்
47. தென்கடல் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் என்ன?
Answer : முத்து
48. தமிழர்களின் நீர் மேலாண்மைத் திறனை பற்றி அறிய உதவும் ஏரிகள் மற்றும் கால்வாய்கள் எந்த நகரத்தைச் சுற்றி உள்ளன?
Answer : காஞ்சிபுரம்
49. பூம்புகார் தொடர் வணிகத்தின் காரணமாக வெளிநாட்டவர் பலர் நகரத்திலேயே வசித்ததால் ஏற்பட்ட இடத்தின் பெயர் என்ன?
Answer : வெளிநாட்டவர் குடியிருப்பு
50. பண்டைய தமிழகத்தில் ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எங்கிருந்தது?
Answer : மதுரை
5
51. சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்ற நகரம் எது?
Answer : மதுரை
52. கோவலன், கண்ணகி பிறந்த ஊர் எது?
Answer : பூம்புகார்
53. சேரநாடு தற்போது எந்தப்பகுதிகளைக் குறிக்கும்?
Answer : கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரளா பகுதிகள்
54. பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள் எவை?
Answer : ஹரப்பா & மொகஞ்சதாரோ
55. வடமலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் என்ன?
Answer : தங்கம்
56. மதுரையில் எத்தனை வகை அங்காடிகள் இருந்தன?
Answer : இரண்டு
57. மதுரைக்கு அருகே அகழாய்வு நடைபெறும் இடம் எது?
Answer : கீழடி
58. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப்பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?
Answer : 49 பேர்
59. பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?
Answer : கடியலூர் உருத்திரங்கண்ணனார்
60. பௌத்த மத்துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்கு கழித்தார்?
Answer : காஞ்சியில்
6
61. மாசாத்துவன் என்பதன் பொருள் என்ன?
Answer : பெருவணிகன்
62. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களில் காஞ்சியும் ஒன்று எனக் கூறியவர் யார்?
Answer : யுவான்சுவாங்
63. பூம்புகார் எந்த காலம் வரை சிறப்புற்று விளங்கியது?
Answer : பொ.ஆ. 200 வரை
64. பூம்புகார் துறைமுகத்தில் நடைபெற்ற வணிகம் குறித்து கூறும் இலக்கியங்கள் எவை?
Answer : பட்டினப்பாலை, மணிமேகலை,சிலப்பதிகாரம்
65. பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்த இடம் எது?
Answer : உவரி
66. சிலப்பதிகாரத்தின் நாயகன், நாயகி யார்?
Answer : கோவலன், கண்ணகி
67. ஈழத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் யாது?
Answer : உணவுப்பொருட்கள்
68. நாளங்காடி என்பது எந்த பொழுதின் அங்காடி ஆகும்?
Answer : பகல் பொழுது
69. கோயில்களின் நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
Answer : காஞ்சி
70. பாண்டியர்களின் துறைமுகம் எது?
Answer : கொற்கை
7
71. மெசபடோமியா நாகரிகம் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?
Answer : 6500
72. பூம்புகார் எங்குள்ளது?
Answer : வங்காள விரிகுடாவில் காவிரி கலக்கும் இடத்தில் (தற்போதைய மயிலாடுதுறை அருகே)
73. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட எண்ணற்ற கோயில்கள் யாவை?
Answer : குடைவரைக் கோயில்கள்
74. எந்த நகரை சுற்றியுள்ள அகழியில் யானைகள் செல்லும் அளவுக்கு அகலமான சுரங்கப்பாதைகள் இருந்தன?
Answer : மதுரை
75. ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுவது எது?
Answer : காஞ்சிபுரம்
76. பாண்டிய நாடு தற்போது எந்த பகுதிகளைக் குறிக்கும்?
Answer : இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி தென்மாவட்டங்கள் உள்ளிட்ட மதுரை, தூத்துக்குடி
77. தொண்டைநாடு தற்போது எந்தப் பகுதிகளைக் குறிக்கும்?
Answer : காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி
8