1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?
Answer : சேரன் செங்குட்டுவன்
2. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் யாவர்?
Answer : களப்பிரர்கள்
3. அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை?
Answer : பல்லவர்
4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு எது?
Answer : ஊர்
5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
Answer : வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
6. பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் எவ்வாறு அமைந்திருந்தது?
Answer : ஊர் - கூற்றம் -நாடு -மண்டலம்
7. 'தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது' என்றும் 'ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக அது உருபெற்று எழுந்துள்ளது' என்றும் கூறியவர் யார்?
Answer : கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்
8. சங்க காலத்தில் சோழ அரசு எந்த மலை வரை விரிந்திருந்தது?
Answer : வேங்கட மலைகள்
9. சங்ககாலத்தை பற்றி அறிய உதவும் அகழ்வாய்வில் இருந்து பொருட்கள் கிடைத்த இடங்கள் யாவை?
Answer : ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்
10. பாண்டிய அரசர்கள் எந்தவகை பட்டங்களை சூட்டிக் கொண்டனர்?
Answer : மாறன், வழுதி, செழியன், தென்னர்
1
11. பாண்டிய நாடு எதற்கு புகழ் பெற்றது?
Answer : முத்துக்குளித்தல்
12. பனம்பூ மாலை எந்த அரசர்களுக்கு உரிய மாலையாகும்?
Answer : சேர அரசர்கள்
13. முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள் யாவர்?
Answer : நெடியோன், நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி நெடுஞ்செழியன்
14. எந்த பாண்டிய அரசர் பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்?
Answer : முதுகுடுமிப் பெருவழுதி
15. பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் எந்தெந்த விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன?
Answer : ஒருபுறம் யானை, மற்றொருபுறம் மீன்
16. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்கு திருவிதாங்கூர். கொச்சி, தெற்கு மலபார் கொங்கு மண்டலம் ஆகிய பகுதியை ஆட்சி செய்தவர்கள்?
Answer : சேரர்கள்
17. ஆதவன், குட்டுவன், வானவன், இரும்பொறை என்னும் பட்டங்கள் எந்த அரசர்களால் சூட்டிக்கொள்ளப்பட்ட பட்டங்களாகும்?
Answer : சேர அரசர்கள்
18. சங்கம் என்ற சொல் எதனை குறிப்பிடுகிறது?
Answer : தமிழ் புலவர்களின் குழுமம்
19. சங்க காலத்தை பற்றி அறிய உதவும் செப்புப்பட்டயங்கள் யாவை?
Answer : வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடு
20. எந்த அரசர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப் படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார்?
Answer : கரிகால் வளவன் அல்லது கரிகாலன்
2
21. அரசு அதிகாரத்தின் சின்னங்கள் அல்லது அரசுரிமை சின்னங்கள் எனப்படுபவை யாவை?
Answer : செங்கோல் (scepter), முரசு (Drum), வெண்கொற்றக்குடை (White Umbrella)
22. எந்த சேர அரசர் வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று, சிலப்பதிகார காவியத் தலைவியான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையில் இருந்து கற்களை கொண்டு வந்தார்?
Answer : சேரன் செங்குட்டுவன்
23. எந்த அரசர் கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகின்றார்?
Answer : நெடுஞ்செழியன்
24. முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள் யாவர்?
Answer : உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், சேரல் இரும்பொறை
25. சோழ அரசர்களுக்கு உரிய மாலை எது?
Answer : அத்திப்பூ மாலை
26. எந்த பாண்டிய அரசர் தலையாலங்கானம் எனுமிடத்தில் சேரர், சோழர் மற்றும் 5 வேளிர் குல தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தோற்கடித்தார்?
Answer : நெடுஞ்செழியன்
27. பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்கால தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளை செலவிட்டவர்கள் யார்?
Answer : ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்), உ.வே.சாமிநாத அய்யர்
28. எந்த சேர அரசர் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்?
Answer : சேரல் இரும்பொறை
29. சங்ககால தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தை சுட்டிக்காட்டும் நூல் எது?
Answer : தொல்காப்பியம்
30. முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள் யாவர்?
Answer : இளஞ்சேட்சென்னி, கரிகால் வளவன், கோச்செங்கணான். கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி
3
31. எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன?
Answer : பதிற்றுப்பத்து
32. சங்க காலத்தின் கால அளவு யாது?
Answer : கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை
33. கல்லணை கட்டப்பட்டபோது அது எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசன வசதியை வழங்கியது?
Answer : 69,000 ஏக்கர்
34. எந்த பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது?
Answer : பட்டினப்பாலை
35. சென்னி, செம்பியன், கிள்ளி, வளவன் போன்ற பட்டங்கள் எந்த அரசர்களால் சூட்டிக்கொள்ளப்பட்ட பட்டங்களாகும்?
Answer : சோழ அரசர்கள்
4