1. பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை எவ்வாறு குறிப்பிடுகின்றன?
Answer : சமணம்
2. இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் காலம் எது?
Answer : கி.மு. ஆறாம் நூற்றாண்டு
3. அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூலில் குறிப்பு உள்ளது?
Answer : மணிமேகலையில்
4. நட்சத்திரங்களின் மழை என்று வர்ணிக்கப்படும் காலம் எது?
Answer : கி.மு.ஆறாம் நூற்றாண்டு
5. எந்த மலையில் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் காணப்படுகின்றன.
Answer : சமணர் மலையில்
6. புத்தரின் போதனைகள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?
Answer : தம்மா
7. மகாவீரரை பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Answer : சமணர் (Jaits)
8. சாக்கிய முனி என்று அழைக்கப்பட்டவர்?
Answer : புத்தர்
9. சுவேதாம்பர பிரிவைச் சேர்ந்த துறவிகள் எந்த நிற ஆடைகளை அணிகின்றனர்?
Answer : வெள்ளை நிறம்
10. முதல் தீர்த்தங்கரர் யார்?
Answer : ரிஷபர்
1
11. சமணம் எத்தனை தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது?
Answer : 24
12. எந்த பிரிவைச் சேர்ந்த சமணத் துறவிகள் ஆடைகள் அணிவதில்லை?
Answer : திகம்பரர் பிரிவு
13. பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு அமைந்துள்ளன?
Answer : கலிஞ்சமலையில்
14. கடைசித் தீர்த்தங்கரர் யார்?
Answer : மகாவீரர்
15. பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?
Answer : கௌதம புத்தர்
16. அஜந்தா குகை ஓவியங்கள் எங்கு உள்ளன?
Answer : மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்
17. சத்யா என்பதன் பொருள் என்ன?
Answer : உண்மையை மட்டுமே பேசுதல்
18. வர்த்தமானர் என்பதன் பொருள் யாது?
Answer : செழிப்பு
19. மோட்சம் என்றால் என்ன?
Answer : பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல்
20. ஆகம சித்தாந்தம் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
Answer : மகாவீரரின் தலைமை சீடரான கௌதமசுவாமி
2
21. அகிம்சை என்பதன் பொருள் என்ன?
Answer : எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
22. மகாவீரரின் இயற்பெயர் யாது?
Answer : வர்த்தமானர்
23. மகாவீரரின் பெற்றோர் யாவர்?
Answer : சித்தார்த்தர், திரிசலா
24. மகாவீரர் எங்கு பிறந்தார்?
Answer : வைசாலிக்கு அருகேயுள்ள குந்த கிராமம், பீகார்
25. அபரிக்கிரகா என்பதன் பொருள் என்ன?
Answer : பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது
26. மகாவீரர் போதித்த ஐந்து கொள்கைகள் யாவை?
Answer : அகிம்சை, சத்யா, அஸ்தேய, அபரிக்கிரகா, பிரம்மச்சரியா
27. வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள் சமண மதத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்?
Answer : திகம்பரர்
28. அஸ்தேய என்பதன் பொருள் என்ன?
Answer : திருடாமை
29. மகாவீரர் எவற்றின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்?
Answer : சிரமானிய மரபுகளின் அடிப்படையில்
30. சமண மதம் எத்தனை பிரிவுகளாக பிரிந்தது?
Answer : இரண்டு பிரிவுகள்(திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்)
3
31. மகாவீரர் எத்தனை ஆண்டு கால கடுமையான தவத்திற்கு பின்னர் கைவல்ய எனும் எல்லையற்ற அறிவு நிலையை அடைந்தார்?
Answer : பன்னிரண்டரை ஆண்டுகாலம்
32. பிரம்மச்சரியா என்பதன் பொருள் என்ன?
Answer : திருமணம் செய்து கொள்ளாமை
33. திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் யாவை?
Answer : நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்
34. சித்தார்த்தர் கயாவில் தவமிருந்து எத்தனையாம் நாளில் ஞானம் பெற்று புத்தர் ஆனார்?
Answer : 49ம் நாள்
35. ஹீனயான பௌத்த பிரிவினர் எதனை தங்களின் நோக்கமாக கருதினர்?
Answer : தனிமனிதர்கள் முக்தி அடைவது
36. புத்தரின் உருவங்களை வணங்கியவர்கள் யார்?
Answer : மகாயான பௌத்த பிரிவு
37. ஹீனயான பௌத்த பிரிவினர் எந்த மொழியை பயன்படுத்தினர்?
Answer : பிராகிருதம்
38. புத்தரின் சிலை சிலையையோ உருவப் படங்களையோ வணங்காதவர்கள் யார்?
Answer : ஹீனயான பௌத்த பிரிவு
39. ஆசான் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?
Answer : Preceptor
40. அஜந்தா குகை ஓவியங்கள் எங்கு உள்ளன?
Answer : மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்
4
41. புத்தர் எங்கு பிறந்தார்?
Answer : லும்பினி தோட்டம், நேபாளம்
42. விகாரைகள் என்றால் என்ன?
Answer : மடாலயங்கள் அல்லது துறவிகள் வாழும் இடம்
43. புத்தர் எவற்றை எதிர்த்தார்?
Answer : சடங்குகள் மற்றும் வேள்விகள்
44. புத்தர் என்ற சொல்லின் பொருள் யாது?
Answer : ஞானம் பெற்ற ஒருவர்
45. பௌத்த மதம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது?
Answer : இரண்டு பிரிவுகள்(ஹீனயானம், மகாயானம்)
46. எந்த நிலையை அடைவதே வாழ்க்கையின் இறுதி 'நோக்கம் என்று புத்தர் வலியுறுத்தினார்?
Answer : நிர்வாண நிலை
47. புத்தர் தன்னுடைய எத்தனையாம் வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் மேற்கொண்டார்?
Answer : 29 ம் வயது
48. ஸ்தூபி என்றால் என்ன?
Answer : புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம்
49. புத்தர் தனது கருத்துக்களை பரப்புவதற்காக எவற்றை நிறுவினார்?
Answer : சங்கம்
50. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?
Answer : புத்தர்
5
51. பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?
Answer : கௌதம புத்தர்
52. புத்தர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : தர்ம சக்ர பரிவர்த்தனா அல்லது தர்ம சக்கரத்தை நகர்த்துதல்
53. பௌத்த கோயில் அல்லது தியான கூடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer : சைத்தியம்
54. எந்த மலையின் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன?
Answer : கலிஞ்சமலை
55. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு செல்லும் வழியில் எந்த சமணப் பெண் துறவியால் அவர்கள் ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது?
Answer : கவுந்தியடிகள்
56. எங்கு சமணர்மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது?
Answer : மதுரை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கீழக்குயில்குடி கிராமம்
57. துன்பம் மற்றும் பிறப்பில் இருந்து விடுதலை (நிர்வாண நிலை) என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?
Answer : Nirvana
58. பௌத்தமதம் எந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது?
Answer : கர்மா
59. கான்பூசியஸின் (குங் பு த்சே) கொள்கைகள் எந்த நாட்டில் பின்பற்றப்பட்டது?
Answer : சீனா (கான்பூசியனிசம்)
60. புத்தர் எங்கு தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்தினார்?
Answer : வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள மான் பூங்கா
6
61. கௌதம புத்தர் எந்த அரச வம்சத்தை சேர்ந்தவர்?
Answer : சாக்கிய அரச வம்சம்
62. மகாயானம் எந்தெந்த நாடுகளுக்கு பரவியது?
Answer : மத்திய ஆசியா, இலங்கை, பர்மா, நேபாளம், திபெத், சீனா, ஜப்பான்
63. காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கிராமம் முன்னர் ஜைனக் காஞ்சி என அழைக்கப்பட்டுள்ளது?
Answer : திருப்பருத்திக்குன்றம்
64. பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஜைனம் என்ற வார்த்தை எதனை குறிப்பிடுகிறது?
Answer : சமணம்
65. மணிமேகலையில் தமிழகத்தின் எந்த நகரம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது?
Answer : காஞ்சிபுரம்
66. ஜெராஸ்டரின் கொள்கைகள் எந்த நாட்டில் பின்பற்றப்பட்டது?
Answer : பாரசீகம் (ஜெராஸ்டிரியனிசம்)
67. மகாயான பௌத்த பிரிவினர் எந்த மொழியைப் பயன்படுத்தினர்?
Answer : சமஸ்கிருத மொழி
68. சடலம் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?
Answer : Corpse
69. புத்தர் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் எந்த விதிகளை நம்பினார்?
Answer : பிரபஞ்ச விதிகள்
70. தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் சமண மடாலயங்கள் இருந்துள்ளன?
Answer : புகார், உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்), காஞ்சிபுரம்
7
71. முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?
Answer : இராஜகிருகம்
72. ஹீனயான பௌத்த பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer : தேரவாதம்
73. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை எந்த மத இலக்கியம்?
Answer : பௌத்தமதம்
74. மூடநம்பிக்கைகள் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?
Answer : Superstitious beliefs
75. எந்த அரசரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள எந்த அரசரால் ஸ்தூபியை காஞ்சிபுரத்தில் பார்த்ததாக யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார்?
Answer : அசோகர்
76. ஜாதகக் கதைகள் எந்த மதத்துடன் தொடர்புடையது?
Answer : பௌத்தமதம்
77. பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் ஆகியோர் எந்த ஊரை சேர்ந்தவர்கள்?
Answer : காஞ்சிபுரம்
8