1. ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்?
Answer : மத்திய ஆசியா
2. ஆரியர்களின் மொழி எது?
Answer : இந்தோ-ஆரிய மொழி
3. யாருடைய வருகையால் வேதகாலம் எனும் காலகட்டம் தொடங்கியது?
Answer : ஆரியர்கள்
4. ஆரியர்களின் முதன்மைத் தொழில் எது?
Answer : கால்நடை மேய்தல்
5. இந்திய வரலாற்றில் வேதகாலத்தின் காலம் எது
Answer : கி.மு. 1500- 600
6. ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடப் பகுதி எது?
Answer : பஞ்சாப்
7. ஆரியர்களின் நாகரிக இயல்பு எது?
Answer : கிராம நாகரிகம்
8. ஆரியர்களின் காலப்பகுதி எது?
Answer : இரும்புக் காலம்
9. ரிக் வேதகாலத்தில் 'விஸ்' என்ற தொகுப்பிற்கு தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Answer : விசயபதி
10. நான்கு வேதங்கள் எவை?
Answer : ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வன
1
11. சுருதி என்பதன் பொருள் என்ன?
Answer : கேட்டல் , எழுதப்படாதது
12. 'சத்யமேவ ஜெயதே'(வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer : முண்டக உபநிடதம்
13. ரிக் வேதகாலத்தில் கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Answer : கிராமணி
14. ரிக் வேத காலத்தில் இருந்த இனக்குழு அரசுகள் எவை?
Answer : பரதர், மத்சயர், புரு
15. ரிக் வேத காலத்தில் குலத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Answer : குலபதி
16. விஸ் என்பது என்ன?
Answer : குலம்
17. வேதகாலத்தின் கட்டங்கள் எவை?
Answer : தொடக்க வேத காலம் , பின்வேதகாலம்
18. ஏறத்தாழ கி.மு. 1000 -இல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து எந்த சமவெளியில் குடியமர்ந்தனர்?
Answer : சிந்து கங்கை
19. இனக்குழு அரசுகள் என்பது என்ன?
Answer : ராஷ்டிரம்
20. ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடப் பகுதியான பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer : சப்த சிந்து
2
21. வேத கால இலக்கியங்களின் பிரிவுகள் எத்தனை?
Answer : இரண்டு
22. 'சப்த சிந்து'நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer : ஏழு ஆறுகள்
23. ஜனா என்பது என்ன?
Answer : இனக்குழு
24. சுருதிகளின் பண்புகள் எவை?
Answer : புனிதமானவை, நிலையானவை , கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை
25. தொடக்க வேத காலத்தின் ஆண்டு என்ன?
Answer : கி.மு..1500- 1000
26. சுருதிகள் எதனை உள்ளடக்கியது?
Answer : நான்கு வேதங்கள் , பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்கள்
27. ஸ்மிருதிகள் எதனைக் கொண்ட நூல்களாகும்?
Answer : ஆகமங்கள் , தாந்திரீகங்கள் ,புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்
28. வேத கால இலக்கியங்களின் பிரிவுகள் எவை?
Answer : சுருதிகள் ,ஸ்மிருதிகள்
29. ரிக் வேத காலத்தில் பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer : விஸ்
30. ஜனஸ்யகோபா என்பது எதைக் குறிக்கிறது?
Answer : மக்களின் பாதுகாவலர்
3
31. வேதகாலத்தில் 'ஜனா' வின் தலைவர் ராஜன் ஆவார். அவர் எவ்வாறு புகழப்பட்டார்?
Answer : ஜனஸ்யகோபா
32. ரிக் வேதகாலத்தில் 'ஜனா' வின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Answer : ராஜன்
33. ரிக் வேத கால அரசியலின் அடிப்படை அலகு எது?
Answer : குலம்
34. வேதகாலத்தின் கட்டங்கள் எத்தனை?
Answer : இரண்டு
35. 'ஸ்மிருதி' என்பதன் பொருள் என்ன?
Answer : எழுதப்பட்ட பிரதி
36. வேதகாலத்தில் ராஜனின் அதிகாரம் எந்த அமைப்புகளால் கட்டுப் -படுத்தப்பட்டது?
Answer : விதாதா ,சபா, சமிதி மற்றும் கணா
37. மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு எது?
Answer : சமிதி
38. இனக்குழு மன்றங்களின் பழமையான இனக்குழு எது?
Answer : விதாதா
39. மூத்தோர்களைக் கொண்ட மன்றம் எது?
Answer : சபா
40. வேதகாலத்தில் மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கை எது?
Answer : பாலி
4
41. பின்வேதகாலத்தின் இறுதியில் உருவான ஆஸ்ரமங்கள் எவை?
Answer : பிரம்மச்சரியம், கிரகஸ்தம் , வனப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம்
5