1. எந்த போருக்குப்பின் அசோகர் போர் தொடுப்பதை கைவிட்டார்?
Answer : கலிங்கப்போர்
2. முன்னோர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு எதை நாம் தெரிந்து கொள்ளலாம்?
Answer : வாழ்ந்த காலமும், வாழ்க்கை நிகழ்வுகளையும்
3. வரலாறு என்பது எதன் பதிவு?
Answer : கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசை
4. பழங்காலத்தில் மனிதர்கள் எப்படி வேட்டையாடினார்கள் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்கிறோம்?
Answer : பாறை ஓவியங்கள் மூலம்
5. வெற்றிக்குப்பின் போரைத் துறந்த முதல் அரசன் யார்?
Answer : அசோகர்
6. பழங்கால மனிதர்கள் தாங்கள் தங்கள் பாதுகாப்பிற்காகவும் வேட்டையாடுவற்கும் பழகிய விலங்கு எது?
Answer : நாய்
7. நாணயம் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறையின் பெயர் என்ன?
Answer : நாணயவியல்
8. தொல்லியல் அடையாளங்களிலிருந்து நாம் பெறுவது யாது?
Answer : வரலாற்றுத் தரவுகள்
9. அசோகர் எந்தப் போரில் பல உயிர்கள் மடிவதைக் கண்டு மிகவும் வருந்தினார்?
Answer : கலிங்கப் போர்
10. பழங்கால மனிதர்களின் முக்கிய தொழில் என்ன?
Answer : வேட்டையாடுதல்
1
11. பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்றவர் யார்?
Answer : அசோகர்
12. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள சக்கரம் சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்து பெறப்பட்டது எனில் இதன் மூலம் யாருடைய முக்கியத்துவத்தை நாம் அறியலாம்?
Answer : அசோகர்
13. கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறையின் பெயர் என்ன?
Answer : கல்வெட்டியல்
14. அசோகர் புத்த மதத்தை தழுவி அதற்கு தன் வாழ்வையே அர்ப்பணித்ததற்கான காரணமென்ன?
Answer : அமைதியையும், அறத்தையும் பரப்ப
15. தம்மா என்பதன் பொருள் என்ன?
Answer : அறநெறி
16. கற்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம் எது?
Answer : வரலாற்றுக்கு முந்தைய காலம்
17. 'தம்மா'என்பது எம்மொழிச் சொல்?
Answer : பிராகிருதம்
18. இஸ்டோரியா என்பதன் பொருள் என்ன?
Answer : விசாரிப்பதன் மூலம் கற்றல்
19. சாரநாத் கற்றூண் யார் நிறுவியது?
Answer : அசோகர்
20. வரலாற்றின் காலம் எதில் கணக்கிடப்படுகிறது?
Answer : ஆண்டுகளில்
2
21. வரலாறு என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Answer : கிரேக்கம்
22. பாறை ஓவியங்கள் எங்கு வரையப்பட்டுள்ளன?
Answer : குகைச் சுவர்கள்
23. அசோகர் கலிங்கப் போருக்குப் பின் எந்த மதத்தை பின்பற்றினார்?
Answer : புத்த மதம்
24. வரலாறு என்ற சொல் எந்த கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
Answer : இஸ்டோரியா
25. பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளுக்குள் எதிர்பாராமல் நுழைவது?
Answer : கொடிய விலங்குகள்
26. 'தம்மா' என்பது தர்மா என எதில் கூறப்பட்டுள்ளது?
Answer : சமஸ்கிருதம்
27. பாறை ஓவியம் வரையப்பட்டதன் நோக்கம் என்ன?
Answer : வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக
28. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கருவிகளின் பெயர் என்ன?
Answer : கற்கருவிகள்
29. வேட்டைக்குப் போக இயலாதவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பதை எப்படிக் காட்டினார்கள்?
Answer : பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் ஓவியங்களைத் தீட்டி
30. யாருடைய ஆட்சிக் காலத்தின் போது புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவியது?
Answer : அசோகர்
3
31. பண்டைய மனிதர்கள் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக உருவாக்கியவை என கருதப்படுவது எது?
Answer : பாறை ஓவியங்கள்
32. பொ.ஆ.மு என்பதன் விரிவாக்கம் என்ன?
Answer : பொது ஆண்டிற்கு முன்
33. உலகிலேயே விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்?
Answer : அசோகர்
34. அசோகர் உருவாக்கியதில் இன்றும் நாம் பயன்படுத்துவது எது?
Answer : சாலைகள்
35. பழங்கால மனிதர்கள் உடன் எப்போதும் திரியும் விலங்கு எது?
Answer : நாய்
36. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் எந்த கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்து பெறப்பட்டது?
Answer : சாரநாத்
37. அசோகரின் சிறப்புகளை ஆய்வாளர்கள் எதன் மூலம் வெளிக் கொணர்ந்தனர்?
Answer : வரலாற்று ஆய்வுகள்
38. அசோகர் பற்றிய வரலாற்று ஆவணங்களை தொகுத்து வெளியிட்ட ஆங்கிலேய எழுத்தாளர் யார்?
Answer : சார்லஸ் ஆலன்
39. அசோகர் குறித்த தகவல்கள் வரலாற்று பக்கங்களில் எந்த நூற்றாண்டு வரை இடம்பெறவில்லை?
Answer : 20ஆம் நூற்றாண்டு
40. அசோகரின் சிறப்புகளை வெளிக் அசோகரின் சிறப்புகளை வெளிக்கொண்டுவர யாருடைய ஆய்வுகள் பயன்பட்டன?
Answer : வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்
4
41. அசோகரின் பொற்கால ஆட்சி குறித்து செய்திகளின் சான்றுகள் எங்கு காணப்படுகிறது?
Answer : சாஞ்சி ஸ்தூபி, சாரநாத் தூண்கள்
42. அசோகர் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூலின் பெயர் என்ன?
Answer : The Search for the India's Lost Emperor
43. கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்கள், செப்புப் பட்டயங்கள் வெளிநாட்டவர் மற்றும் வெளிநாட்டு பயணக்குறிப்புகள் நாட்டுப்புறக் கதைகள் எதற்காக உதவுகின்றன?
Answer : வரலாற்றைக் கட்டமைக்கவும் மறுசீரமைக்கவும்
44. வரலாற்றில் அரசர்கள் மற்றும் அவர்களின் ஆட்சி பற்றி நாம் எதன் மூலம் தெளிவாக உணரமுடியும்?
Answer : வரலாற்று ஆராய்ச்சிகள்
5