1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
விளக்கம் : அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம் : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம் : அன்புடன் இணைந்த செயல் என்பது, சிறந்த உயிர்களின் உடம்புடன் உயிர் கொள்ளும் தொடர்பு போன்றது.
4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம் : அன்பு தருகின்ற ஆர்வம் உண்டானால், அது தரும் நல்ல பண்புகள் நாட முடியாத அளவு சிறப்புகளாக இருக்கும்.
5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம் : அன்பினால் அமையும் செயலின் பயனே, இந்த உலகில் இன்பம் பெற்றவர்களின் சிறப்பு.
6. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம் : தர்ம செயல்களுக்கு மட்டுமே அன்பு காரணம் என்பார்கள் அறியாதவர்கள்; வீரத்துக்கும் அன்பே துணையாகும்.
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம் : எலும்பு இல்லாதவற்றை வெயில் தாக்குவதைப்போல, அன்பு இல்லாதவர்களை அறம் தாக்கும்.
8. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம் : வெளியே இருக்கும் உறுப்புகள் தீங்கு செய்யும், உடம்பின் உள் உறுப்பான அன்பு இல்லாதவருக்கு.
9. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம் : அன்பின் பாதையே உயிரின் தன்மை. அன்பு இல்லாதவர்களுக்கு எலும்பு மேல் போர்த்திய தோல் போன்றதே உடம்பு.
10. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
விளக்கம் : அகத்தில் அன்பில்லா உயிர் வாழ்க்கை என்பது, கடினமான பாறையிலும் வெப்பத்திலும் மரம் துளிர்வதைப் போன்றது.
1