பொருட்பால் - அரண்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

விளக்கம் : பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கு அரண் செல்வம்; அஞ்சி உள்ளே இருந்து தம்மை காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம்.

2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.

விளக்கம் : நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மர நிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்.

3. உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

விளக்கம் : உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் இந்நான்கும் சிறப்பாக அமைந்ததே அரண் என்று போரியல் நூல்கள் கூறும்.

4. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.

விளக்கம் : காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிய பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றிலும் அழிக்கவல்லதே நல்ல அரண் ஆகும்.

5. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெள்தாம் நீரது அரண்.

விளக்கம் : பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருட்களை உடையதாயும், அகத்தாரது போர் நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண்.

6. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

விளக்கம் : அகத்தாருக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய் விளங்குவதே அரண்.

7. ணிற்றியும் ணிற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

விளக்கம் : சூழ்ந்து ணிற்றியும், திடீரெனத் தாக்கியும் வஞ்சனைகளாலே உள்ளிருப்பபோரை வசப்படுத்தியும் பகைவரால் கைப்பற்ற இயலாத அருமையுடையதே அரண்.

8. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

விளக்கம் : வந்து சூழந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம் விட்டு பெயராமல் நிலைத்து நின்று வெல்லும் அமைப்பை உடையதே அரண்.

9. முனைமுகத்து மாற்றவர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.

விளக்கம் : முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்துபோகுமாறு, போர்த் தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொணடதே அரண்.

10. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

விளக்கம் : எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண் காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share