அறத்துப்பால் - அருள் உடைமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

விளக்கம் : அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்: பொருள்களாகிய பிற வகைச் செயல்கள் எல்லாம் இழிந்தவரிடத்தில் உள்ளனவே.

2. நல்லற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.

விளக்கம் : நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்.

3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

விளக்கம் : இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள பொருந்தியநெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும்.

4. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

விளக்கம் : நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.

5. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

விளக்கம் : அ-ருள் கொண்-ட-வ-ரா-க வாழ்-ப-வர்-க-ளுக்-கு -எந்-தத் துன்--ப-மு-மே இல்-லை; காற்-று உயிர் வழங்-கு--தலால் வா-ழும் வள-மா-ன -ப-ரி-ய உ-ல-க-மே இ-தற்-குச் சான்-று.

6. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

விளக்கம் : அருள்தலிலே, இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே. உறுதிப்பொருளை இழந்து தம் வாழக்கைக் குறிகோளையும் மறந்தவராவர்.

7. அருள்தலிலே, இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே. உறுதிப்பொருளை இழந்து தம் வாழக்கைக் குறிகோளையும் மறந்தவராவர்.

விளக்கம் : பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழக்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லையாகும்.

8. பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

விளக்கம் : பொருள் இழந்தவர்ளும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள்: அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே: மீண்டும் அடைதல் அரிது.

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

விளக்கம் : அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே.

10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியோர்மேல் செல்லும் இடத்து.

விளக்கம் : தன்னைவிட மெலிவானர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share