பொருட்பால் - காலமறிதல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

விளக்கம் : பகலில் வெற்றி பெரும் கூகையைக் காகம், இரவில் வெற்றி பெரும் காகத்தை கூகை, ஆகையால், வெற்றி வேண்டுவோர் காலத்தை கருத்திக் கொள்ளவேண்டும்.

2. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

விளக்கம் : பருவ காலத்தை அறிந்து ஏற்றபடி வாழ்தலே உயர்ந்த செயல்களைத் தடையற்று நடத்தும் கயிறைப் போன்றது.

3. அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

விளக்கம் : செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

4. ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

விளக்கம் : உலகமே தனக்குரிதாக நினைப்பினும் கைக்கூடும் காலத்தையும் இடத்தையும் கவனித்துச் செயல்பட்டால்.

5. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

விளக்கம் : உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

6. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

விளக்கம் : ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

7. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம் : அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

8. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

விளக்கம் : பகைவரைக் பார்க்க நேரிடும் பாரத்தை சுமக்கவேண்டும் அவர்களின் அழிவால் கிழக்கின் தன்மைப் போல் துன்ப இருள் அகலும்.

9. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

விளக்கம் : கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம் : பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share