அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே ஆகும்.

விளக்கம் : வஞ்சக மனத்தினது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்.

2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்.

விளக்கம் : தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்திலேயும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத் தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?

3. வலியில் நிலைமையான் வல்லுருவன் பெற்றம்
புலியின்தோல் போர்த்தமேய்ந் தற்று.

விளக்கம் : மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு. புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.

4. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

விளக்கம் : தவக் கோலத்திலே மறைந்து கொண்டு, தீய செயல்களைச் செய்தல், கொலை குறித்த வேடன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும்.

5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்.

விளக்கம் : பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், என்ன செய்தோம்? என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும்.

6. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

விளக்கம் : நெஞ்சிலே ஆசையை விடாதரவர்களாய். வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்.

7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.

விளக்கம் : புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும் , உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குபோலக் கரியவரும் உள்ளனர்.

8. மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.

விளக்கம் : மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவர்.

9. கணைகொடிது யாழ்கொடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலாற் கொளல்.

விளக்கம் : நேரானாலும் அம்பு கொடுமை செய்வது: வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது: மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.

10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

விளக்கம் : உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வு தானே வரும். உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்வதும், நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share