அறத்துப்பால் - கொல்லாமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

விளக்கம் : அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே: கொல்லும் செயல் பிற தீவினைகள் எல்லாம் கொண்டு வரும்.

2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

விளக்கம் : உள்ள உணவையும் பலரோடு பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அற நூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது.

3. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

விளக்கம் : ஒப்பற்ற நல்லறம் என்பது எந்தவுயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்: அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.

4. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

விளக்கம் : நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால் எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்ல் என்பதை கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்.

5. நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

விளக்கம் : வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்.

6. கொல்லாமை மேற்கொண்டு ஓழுகுவான் வாழ்நாள்மேற்
செல்லாது உயிருணணும் கூற்று.

விளக்கம் : கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது.

7. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

விளக்கம் : தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வாதானாலும்கூட, தான் மற்றொன்றினது இனிய. உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக்கூடாது.

8. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

விளக்கம் : கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோர்க்குக் கொன்றுவரும் ஆக்கம் இழிவானதே யாகும்.

9. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.

விளக்கம் : கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர்.

10. உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

விளக்கம் : நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியரேயாவர்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share