அறத்துப்பால் - பிறன்இல் விழையாமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

விளக்கம் : அடுத்தவர் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளும் அறியாமை, அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில் இல்லை.

2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

விளக்கம் : அறம் கடந்து இருப்பவர்களை காட்டிலும், பிறரைச் சார்ந்து நிற்கும் அறிவிலிகள் இல்லை.

3. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்துதொழுகு வார்.

விளக்கம் : ஏசப்பட வேண்டியவர் வேறு ஒருவர் இல்லை, நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.

4. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

விளக்கம் : எத்தனை துணைகளைப் பெற்றிருந்தால் என்ன, தினையளவு எஞ்சாது அடுத்தவர் பொருள் மேல் பற்றுகொண்டால்.

5. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

விளக்கம் : எளிதாக இருக்கிறது என்று இல்லத்தைத் துறப்பவன், எய்தும் ஒன்று அழியாது இருக்கும் பழி மட்டுமே.

6. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

விளக்கம் : பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் பிரியாமல் இருக்கும், இல்லறத்தை துறந்தவனிடத்தில்.

7. அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்
பெண்மை நயவா தவன்.

விளக்கம் : உண்மையான குடும்பத்தான் என்பவன், பிறருக்கு உரிமையான பெண்ணை நாடாதவனாக இருப்பான்.

8. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.

விளக்கம் : அடுத்த வீட்டை ஆராயாத ஆண்மையே, முன்மாதிரியாக வாழும் மனிதர்க்கு அறமும் நல்ல ஒழுக்கமும் ஆகும்.

9. நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

விளக்கம் : நலமுடன் இருக்க உரியவர் யாரென்றால், தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோல் தொட்டு தராதவர்.

10. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

விளக்கம் : அறமாக வரையறுத்தவற்றுக்கு எதிராகச் செய்தாலும், பிறருக்காக வரையறுக்கப்பட்டவளின் பெண்மையை நாடாமல் இருப்பதே நன்று.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share