அறத்துப்பால் - புதல்வரைப் பெறுதல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

விளக்கம் : அறிவுடைய குழந்தைகள் தவிர நான் அடைய வேண்டியது வேறு இல்லை.

2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

விளக்கம் : பழி உருவாக்காத பண்புடைய குழந்தைகளைப் பெற்றால் எழுகின்ற பிறப்புக்கு எல்லாம் தீயவை தீண்டாது.

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

விளக்கம் : தான் பெற்றது என்பதே மக்கள்; அவர்கள் பெற்றது அவரவர் வினையால் வரும்.

4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

விளக்கம் : தன் குழந்தை சின்ன கைகளால் கரைத்த கூழ், அமிழ்தைவிடவும் சிறந்த சுவையுடையதாக இருக்கும்.

5. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

விளக்கம் : குழந்தைகள் தன்னை தீண்டுவது உடலுக்கு இன்பம். மேலும் அவர்கள் சொல் கேட்பது காதுக்கு இன்பம்.

6. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

விளக்கம் : மழலைகளின் சொற்களைக் கேட்காதவர்கள்தான் இசைக்கருவிகளில் இருந்து வரும் இசை இன்பமானது என்று சொல்வார்கள்.

7. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

விளக்கம் : தகப்பன் தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய நன்றி, ஞானக் கூட்டங்களில் முன்னோடியாக இருக்கச் செய்வது.

8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

விளக்கம் : தன்னைவிட தனது குழந்தைகள் அறிவுபெறுவது, உலகின் அனைத்து உயிருக்கும் இனிமையானதாகும்.

9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

விளக்கம் : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

10. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

விளக்கம் : மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share