1. கவிதை துறையில் மிகுதியும் வழங்கிவரும்" குறியீடு"என்ற உத்தி, ஆங்கிலத்தில் ----- என அழைக்கப்படுகிறது?
Answer: symbol (சிம்பல்)
2. சிம்பல் என்பது?
Answer: ஒன்று சேர் என்பது பொருள்
3. பறவையான வெண்புறா?
Answer: சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது
4. கருவியான தராசு எதன் குறியீடு?
Answer: நீதியின் குறியீடு
5. விலங்கான சிங்கம் எதன் குறியீடு?
Answer: வீரத்தின் குறியீடு
6. எந்த நூற்றாண்டில் குறியீட்டியம் ஒரு கோட்பாடாக உருப்பெற்றது?
Answer: 19ஆம் நூற்றாண்டு
7. குறியீட்டத்தை விளக்கியவர் யார்?
Answer: பொதலோ
8. தமிழில் குறியீட்டத்தை யார் காலத்தில் இருந்து நாம் அறியமுடிகிறது?
Answer: தொல்காப்பியர் காலம் முதல்
9. சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடு?
Answer: உள்ளுறை உவமம்
10. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்பு பொருள் கோட்பாடு உருவானது என்று கூறியவர்?
Answer: ஹார்ட்
1
11. புதுக்கவிதைகளில் மிகுதியாக காணப்படுவது?
Answer: குறியீடு மரபு
12. உவமேயத்தை கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது எதன் அடிப்படை?
Answer: உள்ளுறை உவமத்தின் அடிப்படை
13. "இந்த ஆதிரை பருக்கைகள் வீழ்ந்தும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி" என்ற கவிதையை எழுதியவர்?
Answer: அப்துல் ரகுமான்
14. வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்க்காக என்ற கவிதையை எழுதியவர்?
Answer: அப்துல் ரகுமான்
2