12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - பண்பாடு - இயல் மூன்று - சுற்றத்தார்-கண்ணே-உள - பரிதிமாற்கலைஞர்

  Play Audio

1. திராவிட சாஸ்திரி என்று போற்றப்படுபவர்?

Answer: பரிதிமாற்கலைஞர்

2. பரிதிமாற்கலைஞரை திராவிட சாஸ்திரி என்று போற்றியவர் யார்?

Answer: சி. வை. தாமோதரனார்

3. பரிதிமாற்கலைஞர் யாரிடம் தமிழைக் கற்றார்?

Answer: மகாவித்துவான் சபாபதியார்

4. பரிதிமாற்கலைஞர் யாரிடம் வடமொழி கற்றார்?

Answer: தன தந்தையிடம்

5. எந்த தேர்வில் முதலாவதாக வெற்றி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவி பெற்றார்?

Answer: F. A First Examination in Arts

6. பரிதிமாற்கலைஞர் எந்த கல்லூரியில் பி. ஏ. பயின்றார்?

Answer: சென்னை கிறித்துவ கல்லூரி

7. ரூபாவதி, காலாவதி நூல்களை இயற்றியவர் யார்?

Answer: பரிதிமாற்கலைஞர்

8. களவழி நாற்பது நூலை தழுவி மான விஜயம் என்னும் நூலை எழுதியவர்?

Answer: பரிதிமாற்கலைஞர்

9. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக கொண்டு நாடகவியல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்?

Answer: பரிதிமாற்கலைஞர்

10. பரிதிமாற்கலைஞரின் எந்த நூல் ஜி. யு. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது?

Answer: தனிப்பாசுரத்தொகை

1

11. பரிதிமாற்கலைஞர் மு. சி. பூர்ணலிங்கனாருடன் இணைந்து நடத்திய அறிவியல் இதழ்?

Answer: ஞானபோதினி

12. தமிழை உயர்தனி செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்த ஆண்டு?

Answer: 2004

13. தமிழை உயர்தனி செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் முதலாக மெய்ப்பித்தவர் யார்?

Answer: பரிதிமாற்கலைஞர்

14. பெற்றோர் இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரை பெயர் மாற்றம் செய்தவர்?

Answer: பரிதிமாற்கலைஞர்

15. பரிதிமாற்கலைஞர் இறந்தபோது அவரது வயது?

Answer: 33

16. தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்து செயலாற்றுவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தவர்?

Answer: பரிதிமாற்கலைஞர்

17. பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னல் தள்ளி பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க என்ற வரியை பாடியவர்?

Answer: நாமக்கல் கவிஞர்

18. "எங்களுக்கு ஓர் ஆறுண்டு வெறுமணல் பரப்பாய் விரிந்து கிடக்க" என்ற வரியை எழுதியவர்?

Answer: இளங்கோ கிருஷ்ணன்

19. lobby ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: ஓய்வறை

20. checkout ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: வெளியேறுதல்

21. tips ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: சிற்றீகை

22. mini meals ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

Answer: சிற்றுண்டி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்