12 ஆம் வகுப்பு - செய்யுள் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஐந்து - நாடென்ப-நாட்டின்-தலை - தேவாரம்

  Play Audio

1. திருவிழாக்கள் நிறைந்த ஊர் "திருமயிலை"என்று அழைக்கப்படும் ஊர்?

Answer: மயிலாப்பூர்

2. முத்துப் பல்லாக்கில் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சுவரோவியம் எங்கு உள்ளது?

Answer: திருநெல்வேலி

3. மலிவிழா என்பதன் பொருள் என்ன?

Answer: விழாக்கள் நிறைந்த

4. மடநல்லார் என்பதன் பொருள் என்ன?

Answer: இளமை பொருந்திய பெண்கள்

5. கலிவிழா என்பதன் பொருள் என்ன?

Answer: எழுச்சி தரும் விழா

6. பலிவிழா என்பதன் பொருள் என்ன?

Answer: திசைதோறும் பூசைகள் உத்திரவிழா

7. ஒலிவிழா என்பதன் பொருள் என்ன?

Answer: ஆரவார விழா

8. மாமயிலை என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

Answer: உரிச்சொற்றொடர்

9. திருமுறைகள் மொத்தம் எத்தனை?

Answer: 12

10. தேவாரத்தில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யார்?

Answer: திருஞானசம்பந்தர்

1

11. தேவாரத்தை தொகுத்தவர் யார்?

Answer: நம்பியாண்டார் நம்பி

12. மயிலை பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்?

Answer: ஓண விழா, விளக்குத் திருவிழா, திவாதிரை விழா, தைப்பூச விழா, கடலாட்டு விழா, பங்குனி உத்திர விழா

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்