12 ஆம் வகுப்பு - செய்யுள் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஐந்து - நாடென்ப-நாட்டின்-தலை - அகநானூறு

  Play Audio

1. வேட்டம் என்பதன் பொருள் என்ன?

Answer: மீன் பிடித்தல்

2. கழி என்பதன் பொருள் என்ன?

Answer: உப்பங்கழி

3. செறு என்பதன் பொருள் என்ன?

Answer: வயல்

4. கொள்ளை என்பதன் பொருள் என்ன?

Answer: விலை

5. விடர என்பதன் பொருள் என்ன?

Answer: மலைவெடிப்பு

6. கதழ் என்பதன் பொருள் என்ன?

Answer: விரைவு

7. உமணர் என்பதன் பொருள் என்ன?

Answer: உப்பு வணிகர்

8. எல்வளை என்பதன் பொருள் என்ன?

Answer: ஒளிரும் வளையல்

9. தெளிர்ப்ப என்பதன் பொருள்?

Answer: ஒலிப்ப

10. விழிஅறி என்பதன் பொருள்?

Answer: குரல்கேட்ட

1

11. ஞமலி என்பதன் பொருள் என்ன?

Answer: நாய்

12. வெரீஇய என்பதன் பொருள் என்ன?

Answer: அஞ்சிய

13. மதர்க்கயல் என்பதன் பொருள் என்ன?

Answer: அழகிய மீன்

14. புனவன் என்பதன் பொருள் என்ன?

Answer: கானவன்

15. அள்ளல் என்பதன் பொருள் என்ன?

Answer: சேறு

16. பகடு என்பதன் பொருள் என்ன?

Answer: எருது

17. "உப்புக்கு மாற்றாக ----- தந்து உப்பினை பெற்றுக்கொள்ள வாரீரோ"?

Answer: நெல்லை

18. பெருங்கடல் என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

Answer: பண்புத்தொகை

19. உழா அது என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

Answer: செய்யுளிசை அளபெடை

20. வெரீஇய என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

Answer: சொல்லிசை அளபெடை

2

21. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்தி பொருளாக ----- விளங்கியது?

Answer: உப்பு

22. உப்பு விளையும் காலத்திற்கு ----- என்று பெயர்?

Answer: அளம்

23. உப்பு விற்பவர் பெயர் என்ன?

Answer: உமணர்

24. கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு பெயர் என்ன?

Answer: உப்பங்கழி

25. கடல்நீரை பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாகி உப்புப் படுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடத்தை எவ்வாறு அழைக்கின்றோம்?

Answer: உப்பளம்

26. பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் எது?

Answer: அகநானூறு

27. களிற்றியானைநிறை எத்தனை பாடல்களைக் கொண்டது?

Answer: 120

28. மணிமிடைப் பவளம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

Answer: 180 பாடல்களைக் கொண்டது

29. நித்திலக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டது?

Answer: 100 பாடல்களைக் கொண்டது

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்