1. தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாக கொள்க! எனக் கூறியவர்?
Answer: பாரதியார்
2. தம்பி நெல்லையப்பருக்கு என்று கடிதம் எழுதியவர்?
Answer: பாரதியார்
3. பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார்?
Answer: பரலி. சு. நெல்லையப்பர்
4. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்று கடிதம் எழுதியவர்?
Answer: பாரதியார்
5. ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது என்று பாரதி யாருக்கு கடிதம் எழுதினார்?
Answer: பரலி. சு. நெல்லையப்பர்
6. எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாற்று நூல் எது?
Answer: வம்சமணி தீபிகை
7. 1879 ஆண்டு வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டவர்?
Answer: கவிகேசரி சாமி தீட்சிதர்
8. பாரதி எந்த நூலை வெளியிட ஆசைப்பட்டார்?
Answer: வம்சமணி தீபிகை
9. வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி வெங்கடேசுவர எட்டயபர்க்கு கடிதம் எழுதிய ஆண்டு?
Answer: 6. 8. 1919
10. வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக யாரால் 2008 - ல் வெளியிடப்பட்டது?
Answer: இளசை மணி
1
11. பரலி சு. நெல்லையப்பர் ஒரு?
Answer: விடுதலை போராட்ட வீரர், கவிஞர், பன்முகத் தன்மை கொண்டவர்
12. கண்ணன் பாட்டு, கட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்?
Answer: பாரதியார்
13. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு நூல்களை பதிப்பித்தவர்?
Answer: பரலி சு. நெல்லையப்பர்
14. பாரதி நடத்திய இதழ்கள்?
Answer: சூரியோதயம், கர்மயோகி
15. பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தவர்?
Answer: பரலி சு. நெல்லையப்பர்
16. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்?
Answer: பரலி சு. நெல்லையப்பர்
17. நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல் எழுதியவர்?
Answer: பரலி சு. நெல்லையப்பர்
18. வ. உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்?
Answer: பரலி சு. நெல்லையப்பர்
19. பாரதியின் கடிதங்கள் என்னும் நூலைப் பதிப்பித்தவர்?
Answer: ரா. அ. பத்மநாபன்
20. பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுர அரசுக்கு கடிதம் எழுதினார்?
Answer: 15 வயதில்
2
21. பாரதி மறைவுக்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார்?
Answer: குத்திகேசவருக்கு
22. பரலி சு. நெல்லையப்பர் பாரதியாரை விட எத்தனை வயது இளையவர்?
Answer: 7ஆண்டுகள்
23. பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே யாரைக் கருதினார்?
Answer: பரலி சு. நெல்லையப்பர்
3