12 ஆம் வகுப்பு - செய்யுள் - மனிதம்-ஆளுமை - இயல் எட்டு - எல்லா-உயிரும்-தொழும் - சிறுபாணாற்றுப்படை

  Play Audio

1. வளமலை என்பதன் பொருள்?

Answer: வளமான மலை (மலைநாடு) இன்று பழனிமலை என்று அழைக்கப்படுகிறது

2. கவாஅன் என்பதன் பொருள்?

Answer: மலைப்பக்கம்

3. கலிங்கம் என்பதன் பொருள்?

Answer: ஆடை

4. சுரும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வண்டு

5. நாகம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: சுரபுன்னை, நாகப்பாம்பு

6. பிறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: விளங்கும்

7. பறம்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: பறம்பு மலை

8. கறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: ஒலிக்கும்

9. வாலுளை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வெண்மையான தலையாட்டம்

10. மருள என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வியக்க

1

11. நிழல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: ஒளிவீசும்

12. நீலம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: நீலமணி

13. ஆலமலர் செல்வன் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: சிவபெருமான் (இறைவன்)

14. அமர்ந்தனன் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: விரும்பினான்

15. சாவம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வில்

16. மால்வரை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: பெரியமலை

17. கரவாது என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: மறைக்காது

18. துஞ்சு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: தங்கு

19. நளிசினை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: செறிந்த கிளை (பெரிய கிளை)

20. போது என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: மலர்

21. கஞலிய என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: நெருங்கிய

2

22. நாகு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: இளமை

23. குறும்பொறை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: சிறு குன்று

24. கோடியர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கூத்தர்

25. மலைதல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: போரிடல்

26. உறழ் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: செறிவு

27. நுகம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: பாரம்

28. பேகன் ஆட்சி செய்த மலை?

Answer: பொதினிமலை

29. பேகனின் ஊர்?

Answer: ஆவினன்குடி

30. பொதினிமலைக்கு தலைவன் யார்?

Answer: பேகன்

31. மயிலுக்கு ஆடையை கொடுத்தவன் யார்?

Answer: பேகன்

3

32. பேகன் எந்த குலத்தில் தோன்றியவன்?

Answer: ஆயவர்

33. பொதினிமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: பழனிமலை

34. பாரி ஆட்சி செய்த மலை?

Answer: பறம்பு மலை

35. வெள்ளிய அருவிகளை கொண்ட மலை எது?

Answer: பறம்பு மலை

36. தேனை மிகுதியாக கொண்ட சுரபுன்னை மரங்கள் நிறைந்த பகுதி எது?

Answer: பறம்புமலை

37. முல்லைக்கு தன் தேரினை தந்தவன் யார்?

Answer: பாரி

38. பறம்பு மலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: பிரான்மலை

39. பிரான்மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது

40. நாடு எது?

Answer: மலையமான் நாடு

41. மலையமான் நாடு எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி

4

42. குதிரைகளும் ஏனைய செல்வங்களையும் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுத்தவர் யார்?

Answer: காரி

43. பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பை போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன் யார்?

Answer: காரி

44. தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன் யார்?

Answer: காரி

45. ஆய் ஆட்சி செய்த பகுதி?

Answer: பொதியமலை

46. பொதியமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: அகத்தியர் மலை

47. பொதியமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த குற்றாலம், பாபநாசம் ஆகிய பகுதி

48. ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த அடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்கு கொடுத்தவன் யார்?

Answer: ஆய்

49. வில் ஏந்தியும், சந்தனம் பூசியும் உலர்ந்த தோள்களை உடையவன் யார்?

Answer: ஆய்

50. அதியமான் ஆட்சி செய்த பகுதி?

Answer: தகடூர்

51. தகடூர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தருமபுரி

5

52. "பூரிக்க" மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தவர்?

Answer: அதியமான்

53. கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவன் யார்?

Answer: அதியமான்

54. நள்ளியின் நாடு எது?

Answer: நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி

55. நெல்லியின் நளிமலை நாடன் பகுதி தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: உதகமண்டலம்

56. தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இனிய வாழ்விற்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன்?

Answer: நள்ளி

57. காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன் யார்?

Answer: நள்ளி

58. போர்த்தி தொழிலில் வல்லமையுடையவன் யார்?

Answer: நள்ளி

59. மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன் யார்?

Answer: நள்ளி

60. ஓரியின் நாடு எது?

Answer: கொல்லிமலை

61. கொல்லிமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: நாமக்கல்

6

62. தன் நாட்டை கூத்தர்க்கு பரிசாக வழங்கியவன் யார்?

Answer: ஓரி

63. காரி என்னும் வலிமைமிக்க குதிரையை கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன்?

Answer: ஓரி

64. நல்லியக்கோடனது நாடு?

Answer: ஒய்மா நாடு

65. ஒய்மா நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: திண்டிவனத்தை சார்ந்தது

66. தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தை தாங்கி இழுத்து செல்லும் வலிமை உடையவன்?

Answer: நல்லியக்கோடன்

67. ஈகையின் பெருமை சேர்க்கும் வரி "அறிமடமும் சான்றோர்க்கு அணி" என்ற வரி இடம் பெற்ற நூல்?

Answer: பழமொழி நானூறு

68. புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல்?

Answer: குமணன்

69. குமணன் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்த மலை?

Answer: முதிர மலை

70. குமணன் தன் நாட்டை யாரிடம் கொடுத்துவிட்டு காட்டில் மறைந்து வாழ்ந்தான்?

Answer: தன் தம்பியாகிய இளங்குமணனிடம்

71. குமணன் தலையை கொய்து வருவோருக்கு பரிசு என அறிவித்தவன் யார்?

Answer: இளங்குமணன் (குமணன் தம்பி)

7

72. புலவர்க்கு கொடுப்பதற்கு தன்னிடம் பொருள் இல்லாமையால் குமணன் "தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு" யாரை கேட்டுக்கொண்டார்?

Answer: பெருந்தலைச்சாத்தனார்

73. குமணனை எவ்வாறு போற்றுகின்றனர்?

Answer: தமிழுக்கு தலை கொடுத்த குமண வள்ளல்

74. குமண வள்ளல் பற்றி எந்த நூலில் குறிப்பு உள்ளது?

Answer: புறநானூறு

75. இலக்கணக்குறிப்பு: வாய்ந்த, உவப்ப, கொடுத்த, ஈந்த -

Answer: பெயரெச்சங்கள்

76. கவாஅன் -

Answer: செய்யுளிசையளபெடை

77. தடக்கை -

Answer: உரிச்சொல் தொடர்

78. நீலம் -

Answer: ஆகுபெயர்

79. அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு -

Answer: பண்புத்தொகை

80. அரவக்கடல் -

Answer: இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

8

81. விரிகடல் -

Answer: வினைத்தொகை

82. சிறுபாணன் பயணம் முடித்த இடம்?

Answer: கிடங்கில்

83. சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்?

Answer: நல்லூர்

84. சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?

Answer: நல்லூர் நத்தத்தனார்

85. சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்?

Answer: நல்லியக்கோடன்

86. சிறுபாணாற்றுப்படையின் மொத்த அடிகள் எத்தனை?

Answer: 269

9

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்