1. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் ----- வீடே பள்ளிக்கூடமாக இருந்தது?
Answer: உபாத்தியாயாருடைய
2. உபாத்தியாயாருடைய வீடு ----- என்பார்கள்?
Answer: குருகுலம்
3. கணக்காயரென்பது?
Answer: உபாத்தியாயாருக்கு பெயர்
4. கணக்கு என்பது?
Answer: நூலின் பெயர்
5. மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவர் யார்?
Answer: வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
6. திருநெல்வேலி தெற்கு தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடம் படித்தவர் யார்?
Answer: வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
7. வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர். மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வி கற்றார்?
Answer: மௌனகுரு
8. நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்?
Answer: பின்னத்தூர் நாராயணசாமி
9. பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?
Answer: பின்னத்தூர் நாராயணசாமி
10. சுப்பிரமணிய பாரதியாரின் நண்பர் யார்?
Answer: நாவலர் சோமசுந்தர பாரதியார்
1
11. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?
Answer: நாவலர் சோமசுந்தர பாரதியார்
12. சிலப்பதிகார உரையாசிரியர் யார்?
Answer: வேங்கடசாமி
13. வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தவர் யார்?
Answer: வேங்கடசாமி
14. மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் யார்?
Answer: டாக்டர் வ. சுப. மாணிக்கம்
15. மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளியில் படித்தவர் யார்?
Answer: டாக்டர் வ. சுப. மாணிக்கம்
16. இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற கட்டுரையின் ஆசிரியர்?
Answer: பேராசிரியர் அ. கா. பெருமாள்
17. மரத்தடியில் உள்ள திண்ணையின் பெயர் என்ன?
Answer: மன்றம் அல்லது அம்பலம்
18. ----- எனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்?
Answer: பள்ளி
19. வித்தியாரம்பம் என்ற சொல்லின் பொருள்?
Answer: கல்வித் தொடக்கம்
20. பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் உரைநடையின் ஆசிரியர்?
Answer: உ. வே. சாமிநாதர்
2
21. உபாத்தியாயர் என்ற சொல்லின் பொருள்?
Answer: ஆசிரியர்
22. குழிமாற்று என்ற சொல்லின் பொருள்?
Answer: பெருக்கல் வாய்ப்பாடு
23. நவத்வீபம் என்ற சொல்லின் பொருள்?
Answer: வங்காளத்தில் உள்ள ஒரு ஊர்
24. கீழ்வாயிலக்கம் என்ற சொலின் பொருள்?
Answer: பின்ன எண்ணின் கீழ்த்தொகை
25. மேல்வாயிலக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: பின்ன எண்ணின் மேல்தொகை
26. வித்தியாப்பியசம் செய்யும்போது குழந்தையின் வயது என்ன?
Answer: 5 வயது
27. உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல சொல்வதை ----- என்று கூறுவர்?
Answer: முறை வைப்ப
28. மை தடவிப் புத்தகத்தை வாசிக்க தொடங்குவதனால் அஷராப்பியாசத்தை ----- விழா என்று கூறுவார்கள்?
Answer: மையாடல் விழா
29. "ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்"என்பது?
Answer: சிந்தாமணி
3
30. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தையென்று கூறும் நூல்?
Answer: தமிழ் விடு தூது
31. பிள்ளைகள் முதலில் எதில் எழுதுவார்கள்?
Answer: மணலில்
32. கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல் அம்புபோல் கால்கள் அசையாமல் தம்பி எழுதினால் நம்மை யுண்டு என்று கூறும் நூல்?
Answer: பழைய வெண்பா
33. அக்காலத்தில் கணிதத்தில் எவை மாணாக்கர்களுக்கு பாடமாக இருந்தது?
Answer: கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று
34. அக்காலத்தில் எந்த நூல்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு பாடமாக இருந்தன?
Answer: தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
35. சிறுவர்கள் படிக்கும் அகராதி வரிசை பாடல்கள்?
Answer: ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
36. சுவடிகள் எதனால் செய்யப்பட்டன?
Answer: ஓலை
37. சுவடியில் எத்தனை துளையிடுவர்?
Answer: 1அல்லது 2
38. இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியை செருகிக் காட்டுவார்கள் அதற்கு ----- என்று பெயர்?
Answer: நாராசம்
39. அக்காலத்தில் போதித்த நீதி நூல்கள் யாவை?
Answer: ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
4
40. எழுத்தாணியின் வகைகள் யாவை?
Answer: மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி
41. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் இருந்தன. இது?
Answer: மடக்கெழுத்தாணி என்று பெயர்
42. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதேபோல் எழுதிவரச் சொல்வார்கள். இதற்கு ----- என்று பெயர்?
Answer: சட்டமென்று
43. சுவடிகளை வைப்பதற்கும், எடுத்து செல்வதற்கும் உபயோகப்படும் கருவியின் பெயர் என்ன?
Answer: தூக்கு
44. மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வி திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பாரென்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?
Answer: மதுரைக்காஞ்சி
45. "வினாதல் வினாயயை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மாதானணி இகக்கும்" வாதம் பற்றி கூறும் நூல்?
Answer: நன்னூல்
46. அக்காலத்தில் காலையில் 5 மணிக்கே பள்ளிக்கு வேண்டும். அப்படி முதலில் வருவனின் பெயர்?
Answer: வேந்தான்
47. வேந்தான் என்றால் என்ன?
Answer: மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்
48. "என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு" எனக் கூறும் நூல் எது?
Answer: திருக்குறள்
5
49. ஒருவன் இறக்குமளவு படிக்க வேண்டும் எனக் கூறியவர்?
Answer: திருவள்ளுவர்
50. இல்லறம் நடத்தும் காலத்திலும் கூட பிற நாட்டிற்கு சென்று கல்வியை போதித்தும், கற்றும், வாதம் புரியும் காலம்?
Answer: ஓதர் பிரிவு
51. ஓதர் பிரிவின் காலம் என்ன?
Answer: 3ஆண்டுகள்
52. தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய ----- என்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கல்வி பயின்றனர்?
Answer: சர்வசிவ பண்டிதர்
53. இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றில் யாரைப்பற்றி குறிப்பு உள்ளது?
Answer: சர்வசிவ பண்டிதர்
54. தமிழக கல்லூரியாகவும், வடமொழிக்கு கல்லுரியாகவும் விளங்கிய மடங்கள் எவை?
Answer: திருவாடுதுறை, மடம், தருமபுரம் மடம்
55. உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட இலக்கிய கட்டுரை எழுதியவர் யார்?
Answer: உ. வே. சா
56. தமிழ் தாத்தா என அழைக்கப்பட்டவர் யார்?
Answer: உ. வே, சா
57. பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர் யார்?
Answer: உ. வே. சா
58. ஓதர் பிரிவு பற்றி கூறும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
6
59. மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாஷீணாத்திய கலாநிதி போன்ற பட்டங்களை பெற்றவர்?
Answer: உ. வே. சா
60. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும், சென்னை மாநில கல்லூரியிலும் தமிழ�� ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
Answer: உ. வே. சா
61. 1932ல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் "டாக்டர்"பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் யார்?
Answer: உ. வே. சா
62. உ. வே. சா என்ற பெயரில் நூலகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
Answer: சென்னை திருவான்மியூர்
7