1. இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகாரமையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம் எது?
Answer: மதராசப்பட்டினம்
2. மதராசப்பட்டினம் இன்று எந்த நகரமாக வளர்ந்திருக்கிறது?
Answer: சென்னை
3. சமூகத்தின் பண்பாட்டுக்கு கூறுகளுள் முதன்மையானவை என்ன?
Answer: நகரங்கள்
4. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது எது?
Answer: சென்னை
5. தமிழகத்தின் தலைநகரமாக விளங்குவது எது?
Answer: சென்னை
6. சென்னையின் தொன்மையை எந்த அகழாய்வு மூலம்
Answer: அறியலாம்?
7. இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை கண்டுபிடிப்பு எது?
Answer: பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி
8. எந்தப் பகுதியில் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் சென்னையின் பழமையை உணர்த்துகின்றன?
Answer: கூடுவாஞ்சி, பல்லாவரம், புழல்
9. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சென்னை கோவில் தளங்கள் யாவை?
Answer: திருவெற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருமுல்லைவாயில்
10. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாரால் அமைக்கப்பட்டது?
Answer: முதலாம் மகேந்திரவர்மன்
1
11. இன்று சென்னையில் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி. பி. 2ம் நூற்றாண்டில் "மல்லியர்ப்பா "எனும் துறைமுகமாக யாரால் சுட்டிக்காட்டப்பட்டது?
Answer: தாலமி
12. சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எது?
Answer: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் கல்வெட்டு
13. திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டு ஆட்சியில் சிறந்து விளங்கியது?
Answer: பல்லவர் ஆட்சியில்
14. யாருடைய நாட்குறிப்பில் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு உள்ளது?
Answer: வள்ளல் பச்சையப்பர்
15. பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி, வேங்கடசாமி, பஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகு பயணம் செய்தார் என்று கூறும் கவிதை தொகுப்பு?
Answer: மாவலிபுரச் செலவு
16. குறிப்பில் சென்னை குப்பம், நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை கூறுகிறது?
Answer: கி. பி. 1647 - ல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் "தொண்டமண்டலத்து புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் செட்டிப்பட்டினம்"
17. சென்னையில் முதலில் வணிக வெற்றியை
Answer: ? டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள்
18. கிழக்கிந்திய வணிக அலுவலர் யார்?
Answer: பிரான்சிஸ்டே
19. பிரான்சிஸ்டே ஆங்கிலேயர்களின் குடியேற்றத்துக்கு எந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்?
Answer: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள்
20. திருவல்லிக்கேணி ஆறு என்று எதை அழைத்தனர்?
Answer: கூவம் ஆறு
2
21. மயிலாப்பூர்க்கு வடக்கே சில குப்பங்களை பிரான்சிஸ்டே யாரிடமிருந்து வாங்கினார்?
Answer: விஜயநகர ஆளுநர் சென்னப்பன் மகன்களிடமிருந்து
22. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ளே வீடுகள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer: வெள்ளையர் நகரம்
23. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே அமைந்த குடியிருப்புகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer: கருப்பர் நகரம்
24. வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இவ்விரு பகுதிகளையும் இணைக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer: மதராசப்பட்டினம்
25. நெசவாளர்களால் அமைந்த புதிய பகுதி எவை?
Answer: வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை
26. வடச்சென்னப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Answer: மதராசப்பட்டினம்
27. தென் சென்னப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Answer: சென்னைப்பட்டினம்
28. ஆங்கிலேயர்கள் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் இரண்டையும் இணைத்து எவ்வாறு அழைத்தனர்?
Answer: மதராஸ்
29. 1646 ஆண்டு கணக்கெடுப்பு படி சென்னை மக்கள் தொகை எவ்வளவு?
Answer: 19, 000
30. சென்னை எப்போது நகராட்சியாக உருவாக்கப்பட்டது?
Answer: 1688
3
31. சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?
Answer: எலி யோல்
32. யாருடைய ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம்?
Answer: தாமஸ் பிட்
33. எந்த நூற்றாண்டில் சென்னையில் ஐரோப்பிய முறை கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின?
Answer: 18ம் நூற்றாண்டு
34. ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பிய கல்வி முறையிலான பள்ளி?
Answer: 1715ல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி
35. சென்னைக்கோட்டை கல்லூரி தொடங்கிய ஆண்டு?
Answer: 1812
36. கிறித்துவ கல்லூரி தொடங்கிய ஆண்டு?
Answer: 1837
37. பிரசிடென்சி பள்ளி உருவான ஆண்டு?
Answer: 1840
38. பெண்களுக்காக தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி உருவான ஆண்டு?
Answer: 1914
39. அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
Answer: 1857
40. ஆங்கிலேயர் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்?
Answer: பச்சையப்பன் கல்லூரி
4
41. முகலாய பிரித்தானியக் கட்டடக்கலை, இந்திய பாரம்பரிய பாணி ஆகியவை கலந்து உருவான கட்டடக் கலை என்ன?
Answer: இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை
42. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலையில் 1768ல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டிடம் எது?
Answer: சேப்பாக்கம் அரண்மனை
43. "மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்" இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தமிழ்நாடு ஆவணக் காப்பகம்
44. தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் அருங்காட்சியகம் எவை?
Answer: எழும்பூர் அருங்காட்சியகம்< புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்
45. இந்தியாவின் முதல் பொதுநூலகம் எது?
Answer: கன்னிமரா நூலகம்
46. கன்னிமரா நூலகம் எங்கு உள்ளது?
Answer: சென்னை
47. சென்னையின் முக்கிய சாலைகள் எவை?
Answer: அண்ணாசாலை, பூவிருந்தவல்லி
48. 1856 தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எது?
Answer: இராயபுரம்
49. சென்னை நகர வீதிகளில் உலா வந்த வண்டிகள்?
Answer: ட்ராம் வண்டிகள்
50. மின்னணு பொருள்களை உருவாக்கும் மையமாக திகழ்வது?
Answer: சென்னை
5
51. கோட்டைக்கு கல்லூரியின் இணைவாக உருவான நூலகம் சென்னை இலக்கிய சங்கம் உருவான ஆண்டு?
Answer: 1812
52. இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று?
Answer: சென்னை இலக்கிய சங்கம்
53. கன்னிமரா நூலகம் உருவான ஆடு?
Answer: 1860
54. அருங்காட்சியகத்தின் அங்கமாக தொடங்கப்பட்ட நூலகம்?
Answer: கன்னிமரா நூலகம்
55. காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்?
Answer: கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
56. கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவான ஆண்டு?
Answer: 1869
57. அறிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்ட நூலகம்?
Answer: கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
58. அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
Answer: 2010
59. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
Answer: அண்ணா நூற்றாண்டு நூலகம்
6