12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - நாடு-அரசு-சமூகம்-நிருவாகம் - இயல் ஏழு - அருமை-உடைய-செயல் - சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும்

  Play Audio

1. கடந்த காலத்தை காட்டும் கண்ணாடி?

Answer: தொல்லியல்

2. கடந்த காலத்தின் பக்கங்கள் எது?

Answer: கல்வெட்டு

3. கல்வெட்டுகளின் களஞ்சியம் எது?

Answer: தென்னிந்தியா

4. சங்ககாலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதை கண்டறிந்த ஆய்வு முன்னோடி?

Answer: ஐராவதம் மகாதேவன்

5. கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு யாரைப் பற்றி கூறுகிறது?

Answer: சேரல் இரும்பொறை

6. 1962ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநராக பணியாற்றியவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

7. தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு நூற்பு ஆலை அமைக்கும் பொறுப்பை ஏற்றவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

8. ஒய்வு கிடைக்கும்பொழுது மலைச் சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப்படும் பிராம்மி கல்வெட்டுகளை சேகரிக்கும் சொந்த முயற்சியில் ஈடுபட்டவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

9. இந்திய தொல்லியல் துறை ஆண்டு அறிக்கையில் எந்த ஆண்டு புகளூர் பற்றிய கல்வெட்டு அறிக்கை வெளிவந்தது?

Answer: 1927 - 28ஆம் ஆண்டு

10. புகளூர்க்கல்வெட்டில் எந்த பெயர் இருந்தது?

Answer: ஆதன் (சேரமன்னன்)

1

11. ஐராவதம் மகாதேவன் புகளூர் கல்வெட்டை நாள்?

Answer: 1965 பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று

12. தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள வரிவடிவம்?

Answer: பிராம்மி

13. பிராம்மி வரிவடிவத்துடன் வேறுபட்ட வரிவடிவங்கள் யாவை?

Answer: திமிலி, தரமிழி, திராவிடி

14. தமிழ் வரிவடிவம் எத்தனிலிருந்து வேறுபாட்டுடன் காணப்பட்டது?

Answer: அசோகரது காலத்து பிராம்மி

15. கல்வெட்டு ஆய்வு நூலான "எர்லி தமிழ் எபிகிராபி" என்ற நூலை எழுதியவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

16. பழந்தமிழ் வரிவடிவத்தை தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் தமிழி என்றோ பழந்தமிழ் என்றோ அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

17. புகளூர் கல்வெட்டின் வரியை தந்தவர் யார்?

Answer: யாற்றூர் என்னும் இடத்தை சார்ந்த செங்காயாபன் என்னும் சமணத்துறவி

18. "கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்" என்ற வரி எந்த கல்வெட்டில் குறிப்பு உள்ளது?

Answer: புகளூர் கல்வெட்டு

19. புகளூர் கல்வெட்டின் 3 - ம் வரியில் இடம் பெற்ற பெயர்கள் யாவை?

Answer: பெருங்கடுங்கோன், இளங்கடுகோன், இளங்கோ என்ற பெயர்கள்

20. இரும்பொறை மன்னர்கள் எந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்?

Answer: கருவூர்

2

21. புகளூர் கல்வெட்டு எந்த நூற்றாண்டை சார்ந்தது?

Answer: கி. பி. 2 - ம் நூற்றாண்டு

22. ஐராவதம் மகாதேவன் சென்னை சென்று எதை வரலாற்று பேராசிரியரை சந்தித்தார்?

Answer: திரு. நீலகண்ட சாஸ்திரி

23. புகளூர் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6 - வது, 7 - வது, 8 - வது பாட்டுடைத் தலைவர்கள் என்று எழுதியவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

24. ஐராவதம் மகாதேவன் எந்த மாநாட்டில் மாணவர் கூறியது சரியென்று ஒப்புக்கொண்டார்?

Answer: முதல் உலகத் தமிழ் மாநாடு

25. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டு யாரை பற்றி கூறுகிறது?

Answer: பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்

26. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்தவர் யார்?

Answer: ஐராவதம் மகாதேவன்

27. ஐராவதம் மகாதேவன் மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்த ஆண்டு?

Answer: 1965ஆம் ஆண்டு நவம்பர் 3 - ம் நாள்

28. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டு எந்த நூற்றாண்டை சேர்ந்தது?

Answer: கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

29. மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டு பற்றிய செய்தி எந்த நூலில் வெளிவந்தது?

Answer: நூற்றாண்டு மாணிக்கம்

30. ஐராவதம் மகாதேவன் கூறிய புகளூர் கல்வெட்டில் பதிற்றுப்பத்தின் 6வது, 7வது, 8வது பாட்டுடைத் தலைவர்கள் தவறு என்று கூறிய அவரது மாணவர் கூறியது?

Answer: முறையே 7வது, 8வது, 9வது பாட்டுடைத்தலைவர்கள்

3

31. ஐராவதம் மகாதேவன் ஆறுநாட்டான் கல்வெட்டு செய்திகளை எந்த நாளிதழில் வெளியிட்டார்?

Answer: தி ஹிந்து

32. தமிழ்நாட்டில் பிரம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்?

Answer: திரு. கே. வி. சுப்பிரமணியனார்

33. தமிழுக்கே உரிய எழுத்துக்களான ள, ழ, ற, ன ஆகியவை வருவதை முதன் முதலாக சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று கூறிய ஆராய்ச்சியாளர்?

Answer: திரு. கே. வி. சுப்பிரமணியனார்

34. திரு. கே. வி. சுப்பிரமணியனார் "நீங்கள் கொடுத்து வைத்தவர்"என்று யாரை கூறினார்?

Answer: ஐராவதம் மகாதேவன்

35. ஐராவதம் மகாதேவன் எழுதிய சங்ககால கல்வெட்டும் என் நினைவுகளும் இந்த கட்டுரை எந்த இதழில் வெளியானது?

Answer: கல்வெட்டு

36. இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

37. தனக்கு விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டவர்?

Answer: ஐராவதம் மகாதேவன்

38. சிந்துவெளி எழுத்துருவை திராவிட எழுத்து என கண்டவர் யார்?

Answer: இரவாதம் மகாதேவன்

39. ஐராவதம் மகாதேவன் ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது பெற்ற ஆண்டு?

Answer: 1970

40. ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது பெற்ற ஆண்டு?

Answer: 1992

4

41. ஐராவதம் மகாதேவன் தாமரைத் திரு விருது பெற்ற ஆண்டு?

Answer: 2009

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்