12 ஆம் வகுப்பு - செய்யுள் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - சிலப்பதிகாரம்

  Play Audio

1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்?

Answer: இளங்கோவடிகள்

2. பேருந்தோள் மடந்தை தாது அவிழ புரிகுழல் என்ற வரி யாரைப்பற்றி கூறுகிறது?

Answer: மாதவி

3. புரிகுழல் என்பதன் பொருள்?

Answer: சுருண்ட கூந்தல்

4. கழை என்பதன் பொருள்?

Answer: மூங்கில்

5. கண் என்பதன்பொருள்?

Answer: கணு

6. விரல் என்பதன் பொருள்?

Answer: ஆடவர் கை பெருவிரல்

7. உத்தர பலகை என்பதன் பொருள்?

Answer: மேல் இடும் பலகை

8. நித்திலம் என்பதன் பொருள்?

Answer: முத்து

9. விருந்து என்பதன் பொருள்?

Answer: புதுமை

10. நாவளம்பொலம் என்பதன் பொருள்?

Answer: சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்

1

11. தலைக்கோல் என்பதன் பொருள்?

Answer: நாடகக் கணிகையர் பெறும் பட்டம்

12. ஓடை என்பதன் பொருள்?

Answer: முக படாம்

13. அரசு உவா என்பதன் பொருள்?

Answer: பட்டத்து யானை

14. பல்இயம் என்பதன் பொருள்?

Answer: இன்னிசைக் கருவி

15. குயிலுவ மாக்கள் என்பதன் பொருள்?

Answer: இசைக் கருவிகள் வாசிப்போர்

16. வாரம் என்பதன் பொருள்?

Answer: தெய்வப்பாடல்

17. ஆமந்திரிகை என்பதன் பொருள்?

Answer: இடக்கை வாத்தியம்

18. இலைப்பூங்கோதை என்பதன் பொருள்?

Answer: அரசன் அணிந்துள்ள பச்சை மாலை

19. கழஞ்சு என்பதன் பொருள்?

Answer: ஒரு வகை எடை அளவு

20. மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கற்பதற்காக சடங்குகளை செய்தாள்?

Answer: 5

2

21. மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கலை கற்றாள்?

Answer: 7

22. மாதவி எந்த வயதில் ஆடல் அரங்கேற்றத்தை அரங்கேற்ற விரும்பினாள்?

Answer: 12 வயதில்

23. மாதவி மற்றும் ஆடல் ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணும்மை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோருடன் எந்த அரசவைக்கு சென்றாள்?

Answer: வீரக் கழல் பூண்ட சோழ மன்னர் அரசவைக்கு

24. மாதவி அரங்கேற்றத்திற்கு எந்த நிலத்தை தேர்ந்தெடுத்தாள்?

Answer: நன்னிலம்

25. மாதவி அரங்கேற்றத்திற்கு எதைக் கொண்டு அரங்கம் அமைத்தனர்?

Answer: மூங்கில்

26. அரங்கில் மேல்நிலை மாடத்தில் எதை வைத்தனர்?

Answer: ஐம்பூதங்கள்

27. தூணின் நிழல் விழாமல் இருக்கும்படி இருக்க எதை அமைத்தனர்?

Answer: நிலை விளக்குகள்

28. அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகள்களுக்கு தரும் பட்டம்?

Answer: தலைக்கோல் பட்டம்

29. தலைக்கோல் எதனால் செய்யப்படுகிறது?

Answer: தோற்ற மன்னனின் வெண்கொற்றக் குடையின் காம்பில்

30. தலைக்கோலை யாராக நினைத்து வழிபாடு செய்வர்?

Answer: இந்திரன் மகள் சயந்தன்

3

31. அரங்கில் ஆடுபவர் எந்த இடத்தில் நிற்பது மரபு?

Answer: வலது தூணின் அருகே

32. அரங்கில் எந்த இடத்தில் ஆட்டத்தில் சிறந்து விளங்குபவர் நிற்பது மரபு?

Answer: இடது தூணின் அருகே

33. யாழின் வகைகள் 21 நரம்புகளைக் கொண்டது -

Answer: பேரியாழ்

34. 17 நரம்புகளைக் கொண்டது -

Answer: மகர யாழ்

35. 16 நரம்புகளைக் கொண்டது -

Answer: சகோட யாழ்

36. 7 நரம்புகளைக் கொண்டது -

Answer: செங்கோட்டியாழ் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னனிடம் பரிசாகப் பெற்றவள்?

37. இலக்கண குறிப்பு ஆடலும் பாடலும் -

Answer: எண்ணும்மை

38. தொல்நெறி -

Answer: பண்புத்தொகை

39. தமிழரின் காலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை கருவூலமாக திகழ்வது?

Answer: சிலப்பதிகாரம்

4

40. மூவேந்தர் காப்பியம் என அழைக்கப்படுவது எது?

Answer: சிலப்பதிகாரம்

41. முதன் முதலாக பெண்ணை முதன்மை பாத்திரமாக வைத்ததால் சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: புரட்சிக்காப்பியம்

42. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் உள்ளதால் முத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படுவது?

Answer: சிலப்பதிகாரம்

43. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அழைக்கப்படுவது?

Answer: சிலப்பதிகாரம்

44. பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்று காப்பியம் யானா அழைக்கப்படுவது?

Answer: சிலப்பதிகாரம்

45. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி எது?

Answer: மணிமேகலை

46. இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுவது?

Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை

47. சேரன் செங்குட்டுவனின் தம்பி யார்?

Answer: இளங்கோவடிகள்

48. சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்ற வரியை கூறியவர் யார்?

Answer: பாரதியார்

49. இளங்கோவடிகள் தனைப் பற்றிய குறிப்பை செங்குட்டுவன் தம்பி என்று எதில் குறிப்பிட்டுள்ளார்?

Answer: வரந்தரு காதையில்

5

50. சிலப்பதிகாரம் அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்து பாடியதால் இது?

Answer: குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுகிறது

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்