12 ஆம் வகுப்பு - செய்யுள் - மொழி - இயல் ஒன்று - உயிரினும்-ஓம்பப்படும் - இளந்தமிழே

  Play Audio

1. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் - பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை எங்குள்ளது?

Answer: மாங்குளம் மதுரை

2. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பவன் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்! என்ற கவிதையை பாடியவர்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

3. எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே! என்ற கவிதை வரியை எழுதியவர்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

4. இளந்தமிழே! என்ற கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer: நிலவுப்பூ

5. நிலவுப்பூ என்ற கவிதை தொகுப்பை எழுதியவர்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

6. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

7. பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றியவர் யார்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

8. மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலுக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

9. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எந்த எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?

Answer: ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி

10. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூல்கள் எவை?

Answer: ஒளிப்பறவை, சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி

1

11. மலையாளக் கவிதை என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

12. சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்?

Answer: சிற்பி பாலசுப்பிரமணியம்

13. செந்தமிழே, செந்நிறம், செம்பரிதி?

Answer: பண்புத்தொகை

14. சிவந்து?

Answer: வினையெச்சம்

15. வியர்வைவெள்ளம்?

Answer: உருவகம்

16. முத்துமுத்தாய்?

Answer: அடுக்குத்தொடர்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்