1. காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
Answer: EPIC
2. EPIC என்ற சொல் எந்த மொழியில் இருந்து தோன்றியது?
Answer: கிரேக்க சொல்
3. EPOS என்பதற்கு பொருள்?
Answer: சொல் அல்லது பாடல்
4. காப்பியம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: காவியம்
5. ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய இலக்கிய நூல்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளன?
Answer: பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம்
6. நன்னூலுக்கு எழுதியவர்?
Answer: மயிலைநாதர்
7. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற சொற்றொடரை தம் உரையில் கூறியவர் யார்?
Answer: மயிலைநாதர்
8. பஞ்ச காப்பியம் என்று எந்த நூலில் ஆசிரியர் கூறியுள்ளார்?
Answer: தமிழ்விடு தூது ஆசிரியர்
9. பெருங்காப்பியம் ஐந்து என்று அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்ட நூல்கள் எவை?
Answer: பெருந்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா
10. சிறுகாப்பியங்கள் ஐந்து என்னும் முறை யார் காலத்திற்கு முன்பே இருந்தது?
Answer: சி. வை. தாமோதரனார்
1
11. சூளாமணியை பதிப்பித்தவர் யார்?
Answer: சி. வை. தாமோதரனார்
12. காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள்?
Answer: பொருட்தொடர்நிலைச்செய்யுள், கதைச் சொல்லல், தொடர்நடை செய்யுள், விருத்தச்செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகவியம்
13. நூல்கள் பிரிவு : காதை -
Answer: சிலப்பதிகாரம்
14. சருக்கம் -
Answer: சூளாமணி
15. இலம்பகம் -
Answer: சீவகசிந்தாமணி
16. படலம் -
Answer: கந்தபுராணம், கம்பராமாயணம்
17. காண்டம் -
Answer: சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
18. வடமொழியில் "காவ்யதரிசம்" என்ற நூலை தழுவி தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்?
Answer: தண்டியலங்காரம்
19. "பாவியம் என்பது காப்பிய பண்பே" என்ற வரியை கூறிய நூல்?
Answer: தண்டியலங்காரம்
20. பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்?
Answer: சீவகசிந்தாமணி
2
21. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது?
Answer: சிறுகாப்பியம்
22. "பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப" என்பது எந்த நூலின் பாவியம்?
Answer: கம்பராமாயணம்
23. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது எந்த நூலின் பாவிகம்?
Answer: சிலப்பதிகாரம்
24. அணிகளின் இலக்கணத்தை கூறும் முதன்மையானது?
Answer: தண்டியலங்காரம்
25. ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிப்பது?
Answer: தொடர்நிலை
26. பொருள்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?
Answer: சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
27. சொல்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?
Answer: அந்தாதி இலக்கியங்கள்
28. விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை?
Answer: சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
29. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை செய்யுளில் அமைந்தது?
Answer: சிலப்பதிகாரம்
30. இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலாக்கணங்களுள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டதைக் ----- என்பர்?
Answer: குறுங்காப்பியம் அல்லது குறுங்கவியம்
3
31. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்?
Answer: பாரதியார்
32. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி போன்ற நூல்களை எழுதியவர்?
Answer: பாரதிதாசன்
33. ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம் போன்ற நூல்களை எழுதியவர்?
Answer: கண்ணதாசன்
34. பராசக்தி மகா காவியம் என்ற நூல் எழுதியவர்?
Answer: கவியோகி சுத்தானந்த பாரதியார்
35. இராவண காவியம் என்ற நூலை எழுதியவர்?
Answer: புலவர் குழந்தை
4