12 ஆம் வகுப்பு - செய்யுள் - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - இதில்-வெற்றி-பெற

  Play Audio

1. மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது?

Answer: உரைநடை

2. எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது எது?

Answer: கவிதை

3. "கண்வேறு, கல்விக்கண் வேறு, கற்றார் கவிநடையும் உரைநடையும் வேறு வேறு"என்று கவிதை எழுதியவர் யார்?

Answer: சுரதா

4. "ஆக்கும்வரை நாமதனை அரிசி; என்றும், ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்"என்று கவிதை; எழுதியவர் யார்?

Answer: சுரதா

5. "தேமாவும் மரத்தில் காய்க்கும், சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்" என்று கவிதை எழுதியவர் யார்?

Answer: சுரதா

6. "எருவினிலே பயிர்விளையும், சிறந்த கேள்வி எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்"என்று கவிதை எழுதியவர் யார்?

Answer: சுரதா

7. இதில் வெற்றி பெற என்ற கவிதையில் இடம் பெற்ற பா வகை என்ன?

Answer: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

8. துறைமுகம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: சுரதா

9. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: சுரதா

10. சுரதாவின் இயற்பெயர் என்ன?

Answer: இராசகோபாலன்

1

11. இராசகோபாலன் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் என்று யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை மாற்றிக்கொண்டார்?

Answer: பாரதிதாசன்

12. சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கம் என்ன?

Answer: சுரதா

13. முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட "காவியம்"என்ற இதழை நடத்தியவர் யார்?

Answer: சுரதா

14. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர் யார்?

Answer: சுரதா

15. தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்?

Answer: சுரதா

16. தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது போன்ற விருதுகளை வாங்கியவர் யார்?

Answer: சுரதா

17. தஞ்சை பல்கலைக்கழகத்தில் இராஜராஜன் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

Answer: சுரதா

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்