12 ஆம் வகுப்பு - செய்யுள் - பண்பாடு - இயல் மூன்று - சுற்றத்தார்-கண்ணே-உள - கம்பராமாயணம்

  Play Audio

1. "யாவரும் கேளிர்"என்பது?

Answer: தமிழர் நற்பண்பின் வளர்ச்சி

2. "சிறியோரை இகழ்தல் இலமே"என்பது?

Answer: அந்நற்பண்பின் மலர்ச்சி

3. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"என்பது?

Answer: அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி

4. காக்கை குருவி எங்கள் ஜாதி என்பது?

Answer: அத்தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி

5. வேட்டுவர் தலைவன்?

Answer: குகன்

6. காட்டிற்குள் செல்லும் இராமன், கங்கையை கடக்க உதவியவன்?

Answer: குகன்

7. அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவும் வகையில் யாரின் நட்பு திகழ்கிறது?

Answer: இராமன் மற்றும் குகன்

8. பரதன் "எனக்கு மூத்தோன்"என யாரைக் கூறுகிறான்?

Answer: குகன்

9. அமலன்

Answer: இராமன்

10. இளவல்

Answer: தம்பி

1

11. நளிர்க்கடல்

Answer: குளிர்ந்தகடல்

12. இராமன் "என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி, இலக்குவன் உன் தம்பி, அழகிய நெற்றியை கொண்ட சீதை உன் அண்ணி" என யாரிடம் கூறினார்?

Answer: குகன்

13. இராமன்"நன் உன்னுடைய ஏவலுக்கேற்ப பணிபுரிபவன்" என்று யாரிடம் கூறினார்?

Answer: குகன்

14. உன்னேல்

Answer: எண்ணாதே

15. யாருடன் சேர்ந்து ஐவர் ஆனோம் என்று இராமன் கூறினார்?

Answer: குகனோடு

16. இராமன் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள்?

Answer: சவரி

17. இராவணன் சீதையை சிறையெடுத்த பொது அவனை தடுத்து சண்டையிட்ட பறவை?

Answer: கழுகு வேந்தன் சடாயு

18. ராமன் தந்தையின் நண்பன் யார்?

Answer: கழுகு வேந்தன் சடாயு

19. ராமன் யாரை தந்தையாகவே கருதி அவனுக்கு இறுதிச்சடங்குகளை செய்தார்?

Answer: கழுகு வேந்தன் சடாயு

20. `சீதையை தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள்?

Answer: சவரி

2

21. காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்குபவள்?

Answer: சவரி

22. இராமன் தாயிடம் காட்டும் அன்பை யாரிடம் காட்டினார்?

Answer: சவரி

23. இராமன் "இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா" என்று பரிவுடன் யாரிடம் கேட்டார்?

Answer: சவரி

24. "என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நன் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது, என் பிறவி ஒழிந்தது" என்று கூறியவள்?

Answer: சவரி

25. இராமன் யாரை நண்பனாக ஏற்றார்?

Answer: சுக்ரீவன்

26. அனகன்

Answer: இராமன்

27. உவா

Answer: அமாவாசை

28. உடுபதி

Answer: சந்திரன்

29. ஆசையை அறவே அளழித்த சிந்தையான் யார்?

Answer: இராமன்

30. வானரத் தலைவன் யார்?

Answer: சுக்ரீவன்

3

31. செற்றார் -

Answer: பகைவர்

32. கிளை

Answer: உறவினர்

33. சீதையை கவர்ந்து வந்தது தவறென இராவணனிடம் கூறியவர்?

Answer: வீடணன்

34. வீடணன் யாரிடம் அடைக்கலம் வேண்டினார்?

Answer: இராமனிடம்

35. இராமன் இலங்கை அரசை யாருக்கு உரிமை ஆக்கினார்?

Answer: வீடணன்

36. ஆணைச் சக்கரத்தை உடையவன் யார்?

Answer: இராமன்

37. ஆழமான கடல் நடுவே உள்ள அரசாட்சி எது?

Answer: இலங்கை

38. மேருமலையை சுற்றி வருபவர்?

Answer: கதிரவன்

39. கதிரவன் மகன் யார்?

Answer: சுக்ரீவர்

40. ராமன் யாருடன் சேர்த்து அறுவர் ஆனார்?

Answer: சுக்ரீவர்

4

41. ராமன் யாருடன் சேர்த்து எழுவர் ஆனார்?

Answer: வீடணன்

42. உளது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: இடைக்குறை

43. மாதவம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: உரிச்சொற்றொடர்

44. தாழ்கடல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினைத்தொகை

45. செற்றவர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினையாலணையும் பெயர்

46. நுந்தை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: நும் தந்தை என்பதன் மரூஉ

47. கம்பராமாயணத்தை இயற்றியவர்?

Answer: கம்பர்

48. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்?

Answer: இராமாவதாரம்

49. கம்பர் காலம்?

Answer: 12ம் நூற்றாண்டு

50. கவிச்சக்கரவர்த்தி எனப்படுபவர்?

Answer: கம்பர்

51. கம்பர் எழுதிய வேறு நூல்கள்?

Answer: ஏர் எழுபது, சிலை எழுபது, சடகோபர் அந்தாதி

5

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்