1. ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என கூறியவர்?
Answer: பாரதியார்
2. இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளை தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் யார்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
3. இதழ் ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
4. மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த ஆண்டு?
Answer: 16. 12. 1900 (சென்னையில்)
5. மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை செய்த பணி?
Answer: சித்த மருத்துவர்
6. தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்கு கிடைத்த சீதனம் என கூறியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
7. மயிலை சீனி. வேங்கடசாமி எதை படித்து ஆராய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் உதித்தது?
Answer: ஏட்டுச்சுவடிகள்
8. மயிலை சீனி. வேங்கடசாமி என்ன பணி செய்தார்?
Answer: ஆசிரியர் பணி (25 ஆண்டுகள்)
9. மயிலை சீனி. வேங்கடசாமி எந்த அறிஞர் பெருமக்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்?
Answer: விபுலானந்த அடிகள், கா. சுப்பிரமணியர், திரு. வி. க. , தெ. பி. மீ. , ச. த. சற்குணர்
10. மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுக் கட்டுரைகள் எந்த இதழில் வெளிவந்தன?
Answer: குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி
1
11. தமிழ் தேனீ என அழைக்கப்பட்டவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
12. மயிலை சீனி. வேங்கடசாமியின் கால்கள் எதனை நோக்கி நடந்தன?
Answer: அறிவின் வாயில்கள்
13. 1934 - ல் சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தியவர்?
Answer: தொ. பொ. மீனாட்சிசுந்தரனார்
14. 1934 - ல் சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்றியவர் யார்?
Answer: ச. த. சற்குணம்
15. மயிலை சீனி. வேங்கடசாமி முதல் நூல்?
Answer: கிருத்துவமும் தமிழும்
16. பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் ஆகிய நூல்களை எழுதியவர்?
Answer: மயிலை. சீனி. வேங்கடசாமி
17. சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் கவனம் செலுத்தியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
18. வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றியிருந்த காரணத்தால் சாசனங்களை யாரால் வாசிக்க முடிந்தது?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
19. கி. பி. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி. 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிப் புரிந்த மன்னர்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
20. மயிலை சீனி. வேங்கடசாமி எந்த மன்னர்களை பற்றி எழுதினார்?
Answer: மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன்
2
21. மூன்றாம் நந்திவர்மனை பற்றி யார் தமிழில் முதன் முதலில் எழுதியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
22. சங்ககால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு மன்னர்கள், களப்பிரர்கள் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
23. சங்ககாலத்திற்கு பிற்பட்ட காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள்?
Answer: களப்பிரர்கள்
24. தமிழர்களின் இருண்ட காலம் யாருடைய காலம்?
Answer: களப்பிரர்கள் காலம்
25. களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை எழுதியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
26. தமிழகத்தில் கலையியல் ஆய்வில் வழிகாட்டியாக இருந்தவர் யார்?
Answer: மயிலை. சீனி. வேங்கடசாமி
27. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூலை எழுதியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
28. கவின்கலைகள் குறித்து வெளிவந்த முழுமையான முதல் நூல்?
Answer: தமிழர் வளர்த்த அழகுகலைகள்
29. மயிலை சீனி. வேங்கடசாமியின் தமிழக அரசின் முதற்பரிசை பெற்ற நூல்?
Answer: தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
30. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் முதலிய கலை நூல்கள் எழுதியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
3
31. தமது நூல்களின் படங்களை தானே வரைந்து வெளியிட்டவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
32. கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரோ அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி என கூறியவர்?
Answer: நாரண. துரைக்கண்ணன்
33. ஆய்வுலகில் தமிழக வரலாற்றினை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
34. தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் யாருடைய மீட்டுருவாக்க முயற்சிக்கு சரியான சான்றாகும்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
35. மயிலை சீனி. வேங்கடசாமி "தமிழ்நாட்டு வரலாறு" என்னும் நூல் எழுத எந்த இலக்கிய தரவுகளைக் கொண்டு எழுதினார்?
Answer: சங்கஇலக்கியங்கள், சிலப்பதிகாரம்
36. மயிலை சீனி. வேங்கடசாமி தமிழுடன் எந்த மொழியை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்?
Answer: துளு
37. தமிழியலுக்கு தேவையான பல ஆவணங்களை தொகுத்து மயிலை சீனி. வேங்கடசாமி எந்த நூலை வெளியிட்டார்?
Answer: சாசன செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ் நூல்கள்
38. ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எது?
Answer: பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்
39. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் என்ற இலக்கிய நூலை எழுதியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
40. மயிலை சீனி. வேங்கடசாமியின் அரிய ஆவணப்பணிகளில் மிக முக்கியமான நூல் எது?
Answer: மறைந்து போன தமிழ் நூல்கள்
4
41. மயிலை சீனி. வேங்கடசாமி எத்தனை மறைந்து போன தமிழ் நூல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்?
Answer: 333நூல்கள்
42. "தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்க்கெட லாற்றா அண்ணல்" மயிலை சீனி. வேங்கடசாமி கவிதை எழுதியவர்?
Answer: பாவேந்தர் பாரதிதாசன்
43. "வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விளைந்தால் இல்லான்"என பாவேந்தர் பாரதிதாசன் யாரை கூறுகிறார்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
44. சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை வரைந்தவர்?
Answer: மயிலை சீனி வேங்கடசாமி
45. மயிலை சீனி. வேங்கடசாமி சொல்லாய்வு கட்டுரைகள் எந்த இதழில் வெளிவந்தது?
Answer: செந்தமிழ்ச்செல்வி
46. மயிலை சீனி. வேங்கடசாமியின் சொல்லாய்வு கட்டுரைகள் "செந்தமிழ்ச்செல்வி" இதழில் என்ன பெயரில் தொகுப்பாக வெளிவந்தது?
Answer: அஞ்சிறை தும்பி
47. "மத்த விலாசம்"என்ற நாடக நூலை இயற்றியவர்?
Answer: மகேந்திரவர்மன்
48. மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழ் ஆக்கியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
49. தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
50. 20 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை மீது திராவிட இயலாக அடையளப்படுத்தியதில் பெரும் பங்கு உடையவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
5
51. தமிழக வரலாற்று கழகத்திலும் தமிழக புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றியவர்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
52. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கிய ஆண்டு?
Answer: 1962
53. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு தமிழ் பேரவை செம்மல் விருது வழங்கியது யார்?
Answer: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
54. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு அறிஞர்கள் குடிச்ச சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து; எந்த பட்டத்தை வழங்கினர்?
Answer: ஆராய்ச்சிப் பேரறிஞர்
55. திருமணமே செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்து, தம் வாழ்வை முழுமையாக தமிழியல் ஆய்வுக்கு ஒதுக்கியவர் யார்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
56. சேரன் கொடியின் மரபான சின்னம் எது?
Answer: வில்
57. சோழன் கொடியின் மரபான சின்னம் எது?
Answer: புலி
58. பாண்டியன்கொடியின் மரபான சின்னம் எது?
Answer: மீன்
59. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தந் கொடியில் யானைச் சின்னத்தை கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலாக அறிந்து வெளிப்படுத்தியவர் யார்?
Answer: மயிலை சீனி. வேங்கடசாமி
6