1. உன்னலிர் என்பதன் பொருள் என்ன?
Answer: எண்ணாதீர்கள்
2. பிணித்தமை என்பதன் பொருள் என்ன?
Answer: கட்டியமை
3. நீச என்பதன் பொருள் என்ன?
Answer: இழிந்த
4. நேசம் என்பதன் பொருள் என்ன?
Answer: அன்பு
5. வள்ளியதை என்பதன் பொருள் என்ன?
Answer: உறுதியை
6. ஒர்மின் என்பதன் பொருள் என்ன?
Answer: ஆராய்ந்து பாருங்கள்
7. பாதகர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கொடியவர்
8. குழுமி என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: ஒன்றுகூடி
9. பொழிப்புரை என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: இகழ்ச்சியுறை
10. ஏதமில் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: குற்றமில்லாத
1
11. ஊன்றஎன்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: அழுந்த
12. மாற்றம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: சொல்
13. நுவன்றிலர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கூறவில்லை
14. ஆக்கினை என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: தண்டனை
15. நிண்ணயம் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: உறுதி
16. கூவல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கிணறு
17. ஒண்ணுமோ என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: முடியுமோ
18. உததி என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கடல்
19. ஒடுக்க என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: அடக்க
20. களைந்து என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கழற்றி
2
21. திகழ என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: விளங்க
22. சேர்த்தினர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: உடுத்தினர்
23. சிரத்து என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: தலையில்
24. பெய்தனர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: வைத்து அழுதனர்
25. கைதூறும் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கையில் கொடுத்திருந்த
26. கண்டகர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கொடியவர்கள்
27. வெய்துற என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: வலிமை மிக
28. வைதனர் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: திட்டினர்
29. மறங்கொள் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: முரட்டுத் தன்மையுள்ளவர்
30. மேதினி என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: உலகம்
3
31. கீண்டு என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: பிளந்து
32. வாரிதி என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கடல்
33. சுவறாதது -
Answer: வற்றாதது
34. வல்லானை என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: வலிமை வாய்ந்தவரை
35. நிந்தை என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: பழி
36. பொல்லாங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?
Answer: கெடுதல், தீமை
37. இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர்?
Answer: எச். ஏ. கிருட்டிணனார்
38. இறைமகனை கொள்ள யார் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள்?
Answer: போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரிடம்
39. இறைமகனை இழுத்து சென்ற அக்கொடியவர்கள், அவர் அணிந்திருந்த வெள்ளாடையை கழற்றிவிட்டு எந்த அங்கியை அவருக்கு போர்த்தினர்?
Answer: முருக்க மலர் போன்று சிவந்த அங்கி
40. கருத்தடம், வெங்குருதி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: பண்புத்தொகை
4
41. வெந்து, சினந்து, போந்து என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினையெச்சங்கள்
42. உன்னலிர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: முன்னிலைப் பன்மை வினைமுற்று
43. ஒர்மின் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: ஏவல் பன்மை வினைமுற்று
44. சொற்ற, திருந்திய என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: பெயரெச்சங்கள்
45. பாதகர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினையாலணையும் பெயர்
46. ஊன்ற ஊன்ற என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: அடுக்குத்தொடர்
47. எந்த மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?
Answer: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த "நற்போதகம்"
48. இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
Answer: 1894 ஆண்டு மே திங்கள்
49. ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்க்ரிம்ஸ புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக தமிழில் படைக்கப்பட்ட நூல்?
Answer: இரட்சணிய யாத்திரிகம்
50. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களை கொண்டது?
Answer: 3766பாடல்கள்
5
51. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களை கொண்டது?
Answer: 5 பருவம்
52. போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களை எழுதியுள்ளவர்?
Answer: எச். ஏ. கிருட்டிணனார்
53. கிறித்துவ கம்பர் என அழைக்கப்படுபவர்?
Answer: எச். ஏ. கிருட்டிணனார்
6