12 ஆம் வகுப்பு - உரைநடை - இயற்கை-வேளாண்மை-சுற்றுச்சூழல் - இயல் இரண்டு - பெய்யெனப்-பெய்யும்-மழை - பெருமழைக்காலம்

  Play Audio

1. இயற்கையை போற்றுகிற சமூகமாக என்றைக்கும் இருந்து வருவது?

Answer: தமிழ்ச்சமூகம்

2. தமிழ்ச்சமூகம் மழையை எவ்வாறு போற்றுகிறது?

Answer: மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு

3. தமிழ்ச்சமூகத்தின் முன்னோர் மொழி?

Answer: மாரியல்லது காரியமில்லை

4. அண்மைக் காலங்களில் எந்த மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது?

Answer: தமிழ்நாடு, ஜம்மு - காஸ்மீர், உத்தரகாண்ட், கேரளா, பீகார்

5. அண்மைக் காலங்களில் நம் நாட்டை தாக்கிய புயல்கள் எவை?

Answer: நிஷா, தானே, வர்தா, ஓக்கி, கஜா

6. நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது?

Answer: 5முறை

7. மும்பையில் ஒரே நாளில் 994மி. மீ மழை பெய்த ஆண்டு?

Answer: 2005 ஜம்மு - காஸ்மீர் மாநிலம் "லே "பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250மி. மீ வரை மழையளவு பதிவான ஆண்டு?

8. இயற்கை சமநிலையை இழக்கும் போது ஏற்படும் விளைவுகள் யாவை?

Answer: புயல், பெருமழை, வெள்ளம், புவி வெப்பமாதல்

9. "புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக்கொண்ட சிக்கலே" என்று திட்டவட்டமாக கூறியவர்?

Answer: டேவிட் கிங்

1

10. ஆர்டிக் பகுதி கடந்த 30 ஆண்டுகளில் 4லட்சம் சதுர மைல்கள் உருவாகியுள்ளது இதற்கு காரணம்?

Answer: புவி வெப்பமாதல்

11. பசுமைக்குடில் வாயுக்கள் எவை?

Answer: கார்பன் - டை - ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர்வாயு

12. மாற்று ஆற்றலாக விளங்கக்கூடியவை?

Answer: சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நைட்ரஜன் ஆற்றல்

13. காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்ட பேரவை உருவான ஆண்டு?

Answer: 1992

14. UNFCCC விரிவாக்கம்?

Answer: United Nations Framework Convention on Climate Changes

15. UNFCCC தொடக்கத்தில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன?

Answer: 50

16. UNFCCC தற்போது எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்?

Answer: 193

17. பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளை கொண்டுள்ள நாடுகள் கணக்கெடுப்பில் முன்னணியில் உள்ள நாடுகள்?

Answer: சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா

18. இந்திய வானிலை ஆய்வு துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்த ஆண்டு?

Answer: 2009

19. எந்த ஆண்டிற்கு பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது?

Answer: 2001

2

20. வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் எத்தனை கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்?

Answer: 200 கோடி மக்கள்

21. உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்?

Answer: 40%

22. வெள்ளச் சமவெளி என்பது?

Answer: ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண்

23. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருட்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்து விடும். இது?

Answer: ஆற்றங்கரைப்படிவு

24. கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் எதனை சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவை?

Answer: 85%

25. தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, எத்தனை நீர்நிலைகள் இருந்தன?

Answer: 50, 000

26. தமிழக நிலப்பரப்பில் தற்போது எத்தனை நீர்நிலைகள் உள்ளன?

Answer: 20, 000

27. சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களை சுற்றி மட்டும் எதனை ஏரிகள் காணாமல் போய்விட்டன?

Answer: 500

28. நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு?

Answer: 2005, டிசம்பர் - 23

29. தேசிய பேரிடர் மேலாண்மையின் பணிகள்?

Answer: புயல் வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி

3

30. கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைப்பதற்கு கூட்டமைப்பை ஒன்றை உருவாக்கியது?

Answer: சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம்

31. வங்கக்கடலில் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்க எத்தனை நாடுகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது?

Answer: 8

32. உலக சுற்றுச்சூழல் தினம்?

Answer: ஜூன் - 5

33. ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

Answer: குஜராத்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்