1. உத்திரமேரூர் கல்வெட்டு எதைப்பற்றி கூறுகிறது?
Answer: சோழர்கால குடவோலை முறை தேர்தல்
2. வரலாற்று காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது?
Answer: கனவு
3. ஒரு அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கி பணியாற்ற வேண்டும் என்பதற்கு மடியின்மை என்னும் அதிகாரத்தின் வழியே அட்டவணையே தருபவர்?
Answer: திருவள்ளுவர்
4. சோழன் நலங்கிள்ளியை பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றி பேசி வியப்பவர் யார்?
Answer: கோவூர்க்கிழார்
5. ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியாளரும் 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?
Answer: திருநெல்வேலி
6. சீனத்தில் புழங்கும் உருவக் கதையொன்று, எதை பற்றி கூறுகிறது?
Answer: நேர மேலாண்மை
7. கடலுக்கான வேறு பெயர்கள்?
Answer: அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆளி, ஈண்டுநீர்
8. உரோமாபுரிகி சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது?
Answer: சிலப்பதிகாரம்
9. "நீரின் வந்த நிமிர்புரிப் புரவியும்" என்று குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதை கூறும் நூல்?
Answer: பாட்டினப்பாலை
10. பட்டினப்பாலை எந்த துறைமுகத்தில் வழியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சிறப்பாக நடந்ததாக கூறுகிறது?
Answer: காவிரிப்பூம்பட்டினம்
1
11. பல நாடுகளிலிருந்து வந்த பொருள்களுக்கு சுங்கம் வசூலித்து அவற்றின் மீது புலிச்சின்னம் பொறித்து வெளியே அனுப்பும் சுங்க அதிகாரிகளும் இருந்தனர் என்று எந்த நூலில் குறிப்பு உள்ளது?
Answer: பட்டினப்பாலை
12. எந்த நூல் மூலமாக முசிறி துறைமுகம் சிறந்ததாக இருப்பதை நாம் அறிய இயலும்?
Answer: சங்க இலக்கியங்கள் மூலம்
13. யவனர்கள் கப்பலை எங்கு நிறுத்தி வைத்தனர்?
Answer: முசிறித் துறைமுகம்
14. அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று சந்தித்ததாக கூறிய அறிஞர்?
Answer: ஸ்ட்ரேபோ
15. அகஸ்டஸ் சீசரை பாண்டிய நாட்டுத் தூதுக்குழு சந்தித்த ஆண்டு?
Answer: கி. மு. 20ஆம் ஆண்டு
16. தமிழர்களுக்கும் கிரேக்கர்களும் ரோமானியர்களுக்குமிடையே இருந்த வணிக உறவு எதன் மூலம் தெரிகிறது?
Answer: இலக்கியம் மூலம்
17. புறநானூறு எத்தனையாவது பாடலில் யவனரது கப்பல்கள் பற்றி குறிப்பு இடம் பெற்றுள்ளது?
Answer: 56 - வது பாடலில்
18. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனாரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கி கட்டுப்படுத்தினான் என்ற செய்தி இடம் பெரும் நூல்?
Answer: பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில்
19. தம்முடைய வலிமையின் அளவு அறியாமல் மனவெழுச்சியினால் தூண்டப்பட்டு தொடங்கி இடையில் அதனை முடிக்க வகையில்லாமல் அளிந்தவர் பலர் என்று கூறியவர்?
Answer: திருவள்ளுவர்
20. போட்டியாளர்களே நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது?
Answer: மேலாண்மை விதி
2
21. "கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுத் தலைப்படுவர்" என்ற வரி இடம் பெற்ற நூல்?
Answer: நாலடியார்
22. யாருடைய நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் நாடகம்?
Answer: டைமன் பற்றிய ஷேக்ஸ்பியர் நாடகம்
23. "ஆன முதலில் செலவனால் மானம் அழிந்து மதிகெட்டு" என்று நிதியை கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்தியவர்?
Answer: ஒளவையார்
24. 126 ஒற்றை வரிகளில் எழுதி "துளிகள்" என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர்?
Answer: ஹிராக்ளிட்டஸ்
25. "இரண்டுமுறை ஒருவன் ஒரே நதிகளில் இறங்க முடியாது" என்ற கோட்பாட்டை கூறியவர்?
Answer: ஹிராக்ளிடஸ்
26. ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது என்று கூறியவர்?
Answer: ஹிராக்ளிடஸ்
27. அமுதமே கிடைப்பதாயினும் அது நம்மக்கு இனியது எனக் கருதி தாமே தனித்து உன்னதவர் யார்?
Answer: இந்திரன்
28. அவ்வைக்கு நெல்லிக்கனியை தந்தவன்?
Answer: அதியமான்
29. இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலை எழுதியவர்?
Answer: வெ. இறையன்பு
30. தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக பணியாற்றியவர்?
Answer: வெ. இறையன்பு
3
31. இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு தமிழ் மொழியை தேர்ந்தெடுத்தவர்?
Answer: வெ. இறையன்பு
32. வெ. இறையன்பு எந்த ஆண்டு முதல் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்?
Answer: 1990 ஆண்டு முதல்
33. வாய்க்கால் மீன்கள், ஐ. ஏ. எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா போன்ற நூல்கள் எழுதியவர்?
Answer: வெ. இறையன்பு
34. வெ. இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் என்னும் கவிதை நூல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூலுக்கான பரிசினை பெற்ற ஆண்டு?
Answer: 1995
4