6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-பண்பாடு - இயல் ஐந்து - பாடறிந்து ஒழுகுதல் - தமிழர்-பெருவிழா

  Play Audio

1. இயற்கையோடு இணைந்து வாழ்வதே ----- வாழ்க்கைமுறை ஆகும்?

Answer: தமிழரின்

2. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா எவ்விழா?

Answer: பொங்கல் விழா

3. உழவர்கள் ----- திங்களில் விதைத்து ----- திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர்?

Answer: ஆடித்திங்கள், தைத்திங்கள்

4. ----- திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்?

Answer: தைத்திங்கள்

5. "தமிழர் திருநாள்" என்று போற்றப்படும் விழா எவ்விழா?

Answer: பொங்கல் விழா

6. "அறுவடைத்திருவிழா" என்று போற்றப்படும் விழா எவ்விழா?

Answer: பொங்கல் விழா

7. உழவர் திருநாள் என்று போற்றப்படும் விழா எவ்விழா?

Answer: பொங்கல் விழா

8. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: நன்னூல் நூற்பா 462

9. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் எது?

Answer: போகித் திருநாள்

1

10. மார்கழி மாதத்தின் இறுதி நாள் கொண்டாடப்படும் விழா எவ்விழா?

Answer: போகித் திருநாள்

11. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை ----- விழாவாகக் கொண்டாடப்பட்டது?

Answer: இந்திரவிழா

12. பொங்கல் என்பதற்குப் ----- என்று பொருள்?

Answer: பொங்கிப்பெருகி வருவது

13. தை முதல் நாளில் ----- தொடங்குகிறது?

Answer: திருவள்ளுவராண்டு

14. தை இரண்டாம் நாள் ----- நாளாக கொண்டாடப்படுகிறது?

Answer: திருவள்ளுவர் நாள்

15. பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டப்படுவது எவ்விழா?

Answer: மாட்டுப்பொங்கல்

16. மாடு என்ற சொல்லுக்குச் ----- என்னும் பொருளும் உண்டு?

Answer: செல்வம்

17. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக ----- விளங்குகின்றன?

Answer: மாடுகள்

18. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?

Answer: கி. மு31

19. மஞ்சுவிரட்டு என்பது என்ன?

Answer: மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு

2

20. மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர் என்ன?

Answer: மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல்

21. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் விழா எவ்விழா?

Answer: காணும் பொங்கல்

22. இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழா எது?

Answer: பொங்கல் விழா

23. அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது?

Answer: மகரசங்கராந்தி

24. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் ----- என்று கொண்டாடப்படுகிறது?

Answer: லோரி

25. அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் ----- என்று கொண்டாடப்படுகிறது?

Answer: உத்தராயன்

26. கதிர் முற்றியதும் ----- செய்வர்?

Answer: அறுவடை

27. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ----- கட்டுவர்?

Answer: தோரணம்

28. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: பொங்கலன்று

29. போகிபண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: போகி + பண்டிகை

30. பழையன கழிதலும் ----- புகுதலும்?

Answer: புதியன

31. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண ----- தரும்?

Answer: இன்பம்

32. பட்டுப் போன மரத்தைக் காண ----- தரும்?

Answer: துன்பம்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்