11 ஆம் வகுப்பு - செய்யுள் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - இனியொரு-விதி-செய்வோம் - நீலகேசி

  Play Audio

1. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று?

Answer: நீலகேசி

2. "யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: நீலகேசி

3. மாழ்கி என்பதன் பொருள்?

Answer: தொட்டால் சுருங்கி எனும் தாவரம்

4. மாழ்குதல் என்பதன் பொருள்?

Answer: மயங்குதல்

5. சேதனை என்பதன் பொருள்?

Answer: அறிவு

6. அரும்புதல் என்பதன் பொருள்?

Answer: பருத்தல்

7. இயைபு \இல் என்பதன் பொருள்?

Answer: பொருத்தமற்றது

8. ஆக்கம் என்ற சொல்லின் பொருள்?

Answer: உயிருடைத்து

9. அறிவியல் உலகில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர்?

Answer: ஜகதீச சந்திரபோஸ்

10. ஜகதீச சந்திரபோஸ் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

Answer: 19ம் நூற்றாண்டு

1

11. கற்றிலை என்பதன் பொருள்?

Answer: அறியவில்லை

12. பெருத்தவத்தாய் என்பதன் பொருள்?

Answer: பெரிய தவமுடையவர்

13. "உற்றில் வாய்ஒலி கொள்ளும் செவியென ஒதுக்குகின்றாய்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

Answer: நீலகேசி

14. வாய்த்துரை என்பதன் பொருள்?

Answer: பொருத்தமான உரை

15. வாமன் என்பதன் பொருள்?

Answer: அருகன்

16. தேறு என்பதன் பொருள்?

Answer: தெளிவாக

17. ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்?

Answer: ரோமர்

18. ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்?

Answer: பியரி கேசன்டி

19. ஒலியின் திசைவேகம் என்ன?

Answer: 331மீ/வி

2

20. இலக்கணக்குறிப்பு: - அன்பும் மலரும் -

Answer: எண்ணும்மை

21. அரும்பிணி -

Answer: பண்புத்தொகை

22. வெப்பம் குளிர் -

Answer: உம்மைத்தொகை

23. கொளல் -

Answer: தொழிற்பெயர்

24. மன்னுயிர் என்பதனை பிரித்து எழுதுக?

Answer: மன் + உயிர்

25. நீலகேசி எப்பவையால் ஆனது?

Answer: விருத்தப்பாவால்

26. நீலகேசிக்கு மற்றொரு பெயர்?

Answer: நீலகேசி தெருட்டு

27. நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது?

Answer: குண்டலகேசி

28. நீலகேசி என்ற பெண் எம்மதத்தை சேர்ந்தவர்?

Answer: சமண சமயம்

29. தமிழில் எழுதப்பட்ட முதல் தருக்க நூல்?

Answer: நீலகேசி

3

30. நீலகேசியில் எத்தனை பகுதிகள் உள்ளன?

Answer: பதினொரு பகுதி

31. நீலகேசியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

Answer: 894

32. நீலகேசி காப்பியத்தின் ஆசிரியர்?

Answer: பெயர் தெரியவில்லை

33. நீலகேசியின் உரை ஆசிரியர் யார்?

Answer: திவாகர வாமன முனிவர்

34. மொக்கலவாத சருக்கம், புத்தவாத சருக்கங்கள் இடம்பெற்றுள்ள நூல்?

Answer: நீலகேசி

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்