11 ஆம் வகுப்பு - செய்யுள் - மனிதம்-ஆளுமை - இயல் பத்து - யாரையும்-மதித்து-வாழ் - மனோன்மணீயம்

  Play Audio

1. மனோன்மணீயம் எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது?

Answer: 19ம் நூற்றாண்டு

2. நாடகத் துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல் எது?

Answer: மனோன்மணீயம்

3. மனோன்மணீய நாடகத்தில் சுந்தர முன்வர சுரங்கம் அமைக்கும் பணியை யாருக்கு அளித்திருந்தார்?

Answer: நடராஜர்

4. சொல்லும் பொருளும்: - கடிநகர் -

Answer: காவல் உடைய நகரம்

5. காண்டி -

Answer: காண்க

6. பூம்பராகம் -

Answer: பூவில் உள்ள மகரந்தம்

7. ஆசு இலா -

Answer: குற்றம் இலாத

8. தோட்டி -

Answer: துறட்டி

9. அயம் -

Answer: ஆடு, குதிரை

10. புக்கவிட்டு -

Answer: போகவிட்டு

1

11. சீரிய துளி -

Answer: நுண்ணிய மணல்

12. சிறுகால் -

Answer: வாய்க்கால்

13. பரல் -

Answer: கல்

14. முந்நீர் மடு -

Answer: கடலாகிய நீர் நிலை

15. அண்டயோனி -

Answer: ஞாயிறு

16. சாடு -

Answer: பாய்

17. ஈட்டியது -

Answer: சேகரித்து

18. எழிலி -

Answer: மேகம்

19. நாங்கூல்புழு -

Answer: மண்புழு

20. பாடு -

Answer: உழைப்பு

2

21. ஓவா -

Answer: ஓயாத

22. வேதித்து -

Answer: மாற்றி

23. இலக்கண குறிப்பு: - கடிநகர், சாலத் தகும் -

Answer: உரிச்சொற்றொடர்கள்

24. உருட்டி -

Answer: வினையெச்சங்கள்

25. பின்னிய, முளைத்த -

Answer: பெயரெச்சங்கள்

26. இளமுகம், நல்லூன், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் -

Answer: பண்புத்தொகை

27. பூக்குலை -

Answer: இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்க தொகை

28. தேன்துளி -

Answer: இருபெயரொட்டு பண்புத்தொகை

29. ஆசிலா, ஓவா -

Answer: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

30. ஏகுமின் -

Answer: ஏவல் பன்மை வினைமுற்று

3

31. பார்த்து பார்த்து, நில் நில், உழுதுழுது -

Answer: அடுக்குத்தொடர்கள்

32. வாய்க்கால் -

Answer: இலக்கண போலி

33. செய்தொழில், அலைகடல், வீழருவி -

Answer: வினைத்தொகை

34. மலையலை, குகைமுகம் -

Answer: உவமைத்தொகை

35. நெறுநெறு -

Answer: இரட்டைக்கிளவி

36. புல்புழு, இராப்பகல் -

Answer: உம்மைத்தொகை

37. காலத்தச்சன் -

Answer: உருவகம்

38. ஏகுதி -

Answer: ஏவல் ஒருமை வினைமுற்று

39. புழுக்களும் பூச்சியும் -

Answer: எண்ணும்மை

40. தங்குதல் -

Answer: தொழிற்பெயர்

4

41. பிரித்து எழுதுக: - காலத்தச்சன் -

Answer: காலம் + தச்சன்

42. உழுதுழுது -

Answer: உழுது + உழுது

43. பேரக்குழு -

Answer: பெருமை + அழுகு

44. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?

Answer: மனோன்மணீயம்

45. ஆங்கிலத்தில் 'இரகசிய வழி' என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: லிட்டன் பிரபு

46. 1891ஆண்டு 'இரகசிய வழி' என்ற நூலை தழுவி மனோன்மியத்தை இயற்றியவர் யார்?

Answer: பேராசிரியர் சுந்தரனார்

47. மனோன்மணீயம் எப்பாவகையால் பாடப்பட்டுள்ளது?

Answer: ஆசிரியப்பா

48. மனோன்மணீயம் எத்தனை அங்கங்களை கொண்டது?

Answer: ஐந்து

49. மனோன்மணீயம் எத்தனை காலங்களை கொண்டது?

Answer: இருபது

50. தஹத்தை வாழ்த்து பாடல் எந்த நூலில் அமைந்து உள்ளது?

Answer: மனோன்மணீயம்

5

51. மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதைகள் எது?

Answer: சிவகாமியின் சரிதம்

52. பேராசிரியர் எங்கு பிறந்தார்?

Answer: ஆலப்புழையில்

53. திருவனந்தபுரம் அரசுக்கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணியாற்றியவர் யார்?

Answer: பேராசிரியர் சுந்தரனார்

54. சென்னை மாகாண அரசு யாருக்கு 'ராவ்பகதூர்' என்னும் பட்டம் வழங்கியது?

Answer: பேராசிரியர் சுந்தரனார்

55. தமிழக அரசு சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகத்தை எந்த மாவட்டத்தில் நிறுவி உள்ளது?

Answer: திருநெல்வேலியில்

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்