6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தொழில்-வணிகம் - இயல் ஆறு - கூடித்-தொழில்-செய் - வளரும்-வணிகம்

  Play Audio

1. பொருள்களை விற்பவர் யார்?

Answer: வணிகர்

2. பொருள்களை வாங்குபவர் யார்?

Answer: நுகர்வோர்

3. பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது?

Answer: பண்டமாற்று வணிகம்

4. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதை பெற்றனர்?

Answer: உப்பு

5. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதை பெற்றனர்?

Answer: தானியம்

6. வணிகம் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு (தரைவழி வணிகம், நீர்வழி வணிகம்)

7. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: நற்றிணை 183

8. "பாலொடு வந்து கூழோடு பெயரும் ……" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: குறுந்தொகை 23

9. "பொன்னொடு வந்து கறியோடு பெயரும் ……"என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: அகநானூறு 149

10. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் குழுவாக செல்வார்கள். இக்குழுவின் பெயர் என்ன?

Answer: வணிகச்சாத்து

1

11. கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள்?

Answer: துறைமுகங்கள்

12. துறைமுக நகரங்கள் ----- என்றும் ----- என்றும் குறிக்கப்பட்டன?

Answer: பட்டினம், பாக்கம்

13. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் ----- விளங்கியது?

Answer: பூம்புகார்

14. வணிகத்தைத் ----- , ----- வணிகம் என்றும் பிரிக்கலாம்?

Answer: தனிநபர் வணிகம், நிறுவன வணிகம்

15. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது?

Answer: நிறுவன வணிகம்

16. நம் அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள்?

Answer: சிறு வணிகர்கள்

17. நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்பவர்கள்?

Answer: சிறு வணிகர்கள்

18. பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது?

Answer: பெருவணிகம்

19. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது?

Answer: ஏற்றுமதி

20. பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது?

Answer: இறக்குமதி

2

21. தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை?

Answer: தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு

22. சீனத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் எவை?

Answer: கண்ணாடி, கற்பூரம், பட்டு

23. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் எது?

Answer: குதிரைகள்

24. "வாணிகம் செய்வோர்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம் போல் செயின்" என்று வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறும் நூல்?

Answer: திருக்குறள் - 120

25. “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று கூறும் நூல் எது?

Answer: பட்டினப்பாலை

26. கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு உதவுவது எது?

Answer: இணையவழி வணிகம்

27. வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று ----- செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளள்ளது?

Answer: மின்னணுப் பரிமாற்றம்

28. "கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: பட்டினப்பாலை

29. "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்எது?

Answer: திருக்குறள்

30. வீட்டுப் பயன்பாட்டிற்ககாப் பொருள் வாங்குபவர்?

Answer: நுகர்வோர்

3

31. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: வணிகச்சாத்து

32. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: பண்டமாற்று

33. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: மின் + அணு

34. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: விரிவு + அடைந்த

35. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக: கரன்சி நோட்

Answer: பணத்தாள்

36. பேங்க்

Answer: வங்கி

37. செக்

Answer: காசோலை

38. டிமாண்ட் டிராஃப்ட்

Answer: வரைவோலை

39. டிஜிட்டல்

Answer: மின்னணு மயம்

40. டெபிட் கார்டு

Answer: பற்று அட்டை

41. கிரெடிட் கார்டு

Answer: கடன் அட்டை

42. ஆன்லைன் ஷாப்பிங்

Answer: இணையதள வணிகம்

43. ஈ - காமர்ஸ்

Answer: மின்னணு வணிகம்

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்