6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தொழில்-வணிகம் - இயல் ஆறு - கூடித்-தொழில்-செய் - கடலோடு-விளையாடு

  Play Audio

1. கதிர்ச்சுடர் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: கதிரவனின் ஒளி

2. மின்னல்வரி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: மின்னல் கோடு

3. அரிச்சுவடிஎன்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: அகரவரிசை எழுத்துகள்

4. மீனவர்களின் வாழ்கை முறையை அவர்களின் வாழ்விடத்தோடு ஒப்பிடுக?

Answer: மீன் பிடிக்க கடலுக்குச் செல்பவர்கள் - மீனவர்கள் விண்மீன்கள் - விளக்குகள்; விரிந்த கடல் - பள்ளிக்கூடம்; கடல் அலையே - தோழன்; மேகம் - குடை; வண்மையான மணலே - பஞ்சுமெத்தை; விண்ணில் இடி - அவர்கள் காணும் கூத்து; சீறிவரும் புயலே - விளையாடும் ஊஞ்சல்; பனிமூட்டம் - உடலைச் சுற்றும் போர்வை; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் - மேற்கூறை; கட்டுமரம் - அவர்கள் வாழும் வீடு; மின்னல் கோடுகளே - அடிப்படையான பாடம்; வலைவீசி பிடிக்கும் மீன்களே - அவர்களது செல்வம்; முழு நிலவுதான் - அவர்கள் கண்ணாடி; மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே - அவர்கள் செய்யும் தவம்; வானமே - அவர்கள் வணங்கும் தலைவன்

5. நெய்தல் திணையின் நிலம் எது?

Answer: கடலும் கடல் சார்ந்த இடமும்

6. நெய்தல் திணையின் மக்கள் யார்?

Answer: பரதவர், பரத்தியர்

7. நெய்தல் திணையின் தொழில் எது?

Answer: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

8. நெய்தல் திணையின் பூ எது?

Answer: தாழம்பூ

9. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடல் எது?

Answer: நாட்டுப்புறப் பாடல்

10. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் நாட்டுப்புறப் பாடலை எவ்வாறும் அழைப்பர்?

Answer: வாய்மொழி இலக்கியம் என்பர்

1

11. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலானவை?

Answer: தொழில்ழிபாடல்கள்

12. விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் ----- பாடல்களுள் அடங்கும்?

Answer: நாட்டுப்புறப் பாடல்கள்

13. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் யார்?

Answer: சு. சக்திவேல்

14. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: கதிர் + சுடர்

15. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: மூச்சு + அடக்கி

16. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: பெருவானம்

17. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: அடிக்குமலை

18. பொருத்துக: விடிவெள்ளி

Answer: விளக்கு

19. மணல்

Answer: பஞ்சுமெத்தை

20. புயல்

Answer: ஊஞ்சல்

21. பனிமூட்டம்

Answer: போர்வை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்