6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - எந்திரஉலகம் - ஒளி-பிறந்தது

  Play Audio

1. அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் எது?

Answer: திருக்குறள்

2. "அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்" என்ற குரல் யார் வாழ்க்கைக்கு வலு சேர்த்தது?

Answer: அப்துல்கலாம்

3. பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் 300 கிராம் எடை உள்ள செயற்கைக் கால்கள் எதைக் கொண்டு உருவாக்கப்பட்டன?

Answer: கார்பன் இழையை

4. பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் பெயர்கள் என்ன?

Answer: அக்னி மற்றும் பிரித்வி

5. அப்துல்கலாம் அவர்களுக்கு ‘லிலியன் வாட்சன்’ எழுதிய எந்த நூல் மிகவும் பிடிக்கும்?

Answer: விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps)

6. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அப்துல்கலாமின் மூன்று பதில்கள் எவை?

Answer: 1. நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை, 2. நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக் கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும், 3. செவ்வாய் கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.

7. இந்தியா நிலவுக்கு அனுப்பிய செயற்கைகோளின் எடை எவ்வளவு?

Answer: 525 கிலோ

8. உலகின் முதல் விஞ்ஞானிகள் என்று யாரைக் அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்?

Answer: குழந்தைகள்

9. வெற்றி பெற குழந்தைகளுக்கு இரண்டு வழிகள் உண்டு என்று அப்துல்கலாமின் அறிவுரை என்ன?

Answer: 1. அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள் 2. வியர்வை! வியர்வை! வியர்வை

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்