6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - எந்திரஉலகம் - கணியனின்-நண்பன்

  Play Audio

1. காரல் கபெக் என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர்?

Answer: செக் நாடு

2. "ரோபோ” என்னும் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் யார்?

Answer: காரல் கபெக்

3. எந்த ஆண்டு காரல் கபெக் நாடகத்தில் "ரோபோ” என்னும் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்?

Answer: 1920ஆம் ஆண்டு

4. "ரோபோ” என்னும் சொல்லின் பொருள்?

Answer: அடிமை

5. தானியங்கியின் செயலை எது கட்டுப்படுத்தும்?

Answer: கணினி

6. "தானியங்கி தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போலச் செயல்களை நிறைவேற்றும்” என்று எந்த கலைக்களஞ்சியம் விளக்கம் தருகிறது?

Answer: பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்

7. நுண்ணுணர்வுக் கருவிகள் என்பதற்கு இணையான ஆங்கில சொல் என்ன?

Answer: Sensors

8. 1997 - ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவை தோற்கடித்த மீத்திறன் கணினியின் பெயர் என்ன?

Answer: டீப் புளூ

9. டீப் புளூ மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?

Answer: ஐ. பி. எம் நிறுவனம்

10. உலகிலேயே முதன்முதலாக "சோபியா" என்ற ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு எது?

Answer: சவுதி அரேபியா

11. "சோபியா" என்ற ரோபோவிற்கு "புதுமைகளின் வெற்றியாளர்" என்ற பட்டத்தை வழங்கிய அமைப்பு எது?

Answer: ஐ. நா சபை

1

12. நுட்பமாகச் சிந்தித்து அறிவது என்பதன் பொருள் என்ன?

Answer: நுண்ணறிவு

13. தானே இயங்கும் எந்திரம் எது?

Answer: தானியங்கி

14. 'நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: நின்று + இருந்த

15. ’அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: அ + வுருவம்

16. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: மருத்துவத்துறை

17. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: செயலிழக்க

18. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

Answer: சேர்த்தல்

19. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

Answer: அரிது

20. மனிதன் தன் வேலைகளை எளிதாக்க கண்டுபிடித்தவை ----- ?

Answer: இயந்திரம்

21. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ----- ?

Answer: செயற்கை நுண்ணறிவு

22. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ----- ?

Answer: டீப் புளூ

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்