8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம் - இயல் ஏழு - பாருக்குள்ளே-நல்ல-நாடு - அறிவுசால்-ஔவையார்

  Play Audio

1. எந்த மன்னனின் அன்பினால் ஒளவையார் அரன்மண்ணையிலேயே தங்கிவிட்டார்?

Answer: அதியமான்

2. கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தவர்கள் யார்?

Answer: அதியமானின் முன்னோர்கள்

3. அதியமான் அறிய நெல்லிக்கனியை யாருக்கு வழங்கினார்?

Answer: ஒளவையார்

4. நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய நீ இதனை உண்ணாமல் எனக்கு கொடுத்துவிட்டாயே என்று ஒளவையர் யாரிடம் கூறினார்?

Answer: அதியமானிடம்

5. என்னைப்போன்று ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது எனக் ஒளவையாரிடம் கூறியவர்?

Answer: அதியமான்

6. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கி"என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Answer: ஒளவையார்

7. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்?

Answer: ஓளவையார்

8. தொண்டைமான் யார் மீது படையெடுக்க ஆயத்தமானான்?

Answer: அதியமான்

9. அதியமான் போரை ஏன் விரும்பவில்லை?

Answer: நிறைய மனித இழப்புகள் ஏற்படும்

10. தொண்டைமானிடம் பேசி போரை தடுத்து நிறுத்தியவர் யார்?

Answer: ஒளவையார்

11. தொண்டைமானிடம் படைக்கருவிகள் எவ்வாறு காட்சியளித்தன?

Answer: புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது

12. ஒளவையார் தொண்டைமானிடம் அதியமான் போர்க்கருவிகள் பற்றிக் கூறியது என்ன?

Answer: நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் இருக்கும் (அடிக்கடி போர் புரிவதால்)

13. ஒளவாரியாரின் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு போர் வேண்டாம் என்று முடிவு செய்தவன் யார்?

Answer: தொண்டைமான்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்