8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம் - இயல் ஏழு - பாருக்குள்ளே-நல்ல-நாடு - விடுதலைத்-திருநாள்

  Play Audio

1. "முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது என்று முழங்கி நின்றது எந்த நாளோ அந்த நாள் இது"என்று பாடல்வரியை இயற்றியவர் யார்?

Answer: மீரா

2. சீவன் என்பதன் பொருள் என்ன?

Answer: உயிர்

3. சத்தியம் என்பதன் பொருள் என்ன?

Answer: உண்மை

4. ஆனந்த தரிசனம் என்பதன் பொருள் என்ன?

Answer: மகிழ்வான காட்சி

5. வையம் என்பதன் பொருள் என்ன?

Answer: உலகம்

6. சபதம் என்பதன் பொருள் என்ன?

Answer: சூளுரை

7. மோகித்து என்பதன் பொருள் என்ன?

Answer: விரும்பி

8. மீராவின் இயற்பெயர் என்ன?

Answer: மீ. இராஜேந்திரன்

9. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்?

Answer: மீரா

10. மீரா அவர்கள் என்ன பணியாற்றினார்?

Answer: கல்லூரி பேராசிரியர்

1

11. ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்?

Answer: மீரா

12. விடுதலை திருநாள் எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: கோடையும் வசந்தமும்

13. கோடையும் வசந்தமும் என்ற நூலினை எழுதியவர்?

Answer: மீரா

14. விடுதலை திருநாள் கவிதையில் இடம்பெறும் விடுதலை வீரர் யார்?

Answer: பகத்சிங்

15. வானில் முழுநிலவு அழகாகத் ----- அளித்தது?

Answer: தரிசனம்

16. இந்த ----- முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு?

Answer: வையம்

17. சீவனில்லாமல்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: சீவன் + இல்லாமல்

18. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: விலங்கு + ஒடித்து

19. காட்டை + எரித்து என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: காட்டையெறித்து

20. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: இதந்தரும்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்