9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - ஆகுபெயர்

  Play Audio

1. ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றோன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது?

Answer: ஆகுபெயர்

2. ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும்?

Answer: 16வகைப்படும்

3. "முலையை தொடுத்தாள்"என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: பொருளாகுபெயர் (முதலாகுபெயர்)

4. "வகுப்பறை சிரித்தது"என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: இடவாகுபெயர்

5. "கார் அறுத்தான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: காலவாகுபெயர்

6. "மருக்கொழுந்து நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: சினையாகுபெயர்

7. "மன்சள் பூசினான், என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: பண்பாகுபெயர்

8. "வற்றல் தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: தொழிலாகுபெயர்

9. "வானொலி கேட்டு மகிழ்ந்தனர் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: கருவியாகுபெயர்

10. "பைங்கூல் வளர்ந்தது என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: காரியவாகுபெயர்

11. 'அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: கருத்தாவாகுபெயர்

12. "ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: எண்ணலளவை ஆகுபெயர்

13. அரை லிட்டர் வாங்கு"என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: முகத்தலளவை ஆகுபெயர்

14. ஐந்து மீட்டர் வெட்டினான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

Answer: நீட்டலளவை ஆகுபெயர்

15. இந்திய தேசிய இராணுவத்தின் ----- இன் தலைமையில் ----- உருவாக்கினார்?

Answer: மோகன்சிங், ஜப்பானியர்

16. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

Answer: அள்ளல் - சேறு

17. இளங்களுக்கு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக?

Answer: பண்புத்தொகை, வினைத்தொகை

18. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே?

Answer: சேர, நாடு. சோழ நாடு

19. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

Answer: மனம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்