9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - சந்தை

  Play Audio

1. பகலில் நடைபெறும் கடைவீதியின் பெயர்?

Answer: நாளங்காடி

2. இரவில் செயல்படும் கடைவீதியின் பெயர்?

Answer: அல்லங்காடி

3. மதுரைப்பக்கம் கால்நடைச் சந்தையை எவ்வாறு கூறுவர்?

Answer: மாட்டுத்தாவணி

4. மக்களின் நாகரீகம் வேரூன்றிய இடம்?

Answer: குறின்சி

5. மக்களின் நாகரீகம் வளர்ந்த இடம்?

Answer: முல்லை

6. மக்களின் நாகரிகம் முழுமையும் வளமையும் அடைந்த இடம்?

Answer: மருதம்

7. தாவணி என்பதன் பொருள் என்ன?

Answer: சந்தை

8. 125ஆண்டு பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: கிருஷ்ணகிரி மாவட்டம்

9. மணப்பாறை எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

Answer: மாட்டுச்சந்தை

10. அய்யலூர் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

Answer: ஆட்டுச்சந்தைக்கு

11. ஒட்டன்சந்திரம் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

Answer: காய்கறிச் சந்தை

12. நாகர்கோவில் தோவாளைன்னா எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

Answer: பூச்சந்தை

13. ஈரோடு எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

Answer: ஜவுளிச் சந்தை

14. கடலூருக்குப் பக்கமா இருக்கிற காராமணி குப்பம் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

Answer: கருவாடு சந்தை

15. நாகப்பட்டினம் எந்த சந்தைக்கு பெயர்பெற்றது?

Answer: மீன் சந்தை

16. "பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே"எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

Answer: மருதகாசி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்