10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - அகப்பொருள்-இலக்கணம்

  Play Audio

1. தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை எவ்வாறு பிரிந்தனர்?

Answer: அகம், புறம்

2. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது?

Answer: அகத்திணை எனப்படும்

3. அகத்திணை வகைகள் எத்தனை?

Answer: 7 வகை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை)

4. ஐந்து திணைகளுக்கு உரியன யாவை?

Answer: முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.

5. முதற்பொருள் என்பது எதனைக் குறிக்கும்?

Answer: நிலம், பொழுது

6. நிலம் எத்தனை வகைப்படும்?

Answer: ஐந்து வகை

7. பொழுது எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு வகை (பெரும்பொழுது, சிறும்பொழுது)

8. நம் முன்னோர்கள் பெரும்பொழுதை ஓராண்டில் எத்தனை கூறுகளாக பிரித்துள்ளனர்?

Answer: ஆறு

9. ஒரு நாளில் எத்தனை கூறுகள் சிறும்பொழுது என்று பிரித்துள்ளனர்?

Answer: ஆறு

10. எல் + பாடு சேர்த்து எழுதுக?

Answer: ஏற்பாடு

11. எல் என்பது எதைக் குறிக்கும்?

Answer: ஞாயிறு

12. பாடு என்பது எதைக் குறிக்கும்?

Answer: மறையும் நேரம்

1

13. கருப்பொருள் என்றால் என்ன?

Answer: ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு, இவையெல்லாம் கருப்பொருள் ஆகும்.

14. குளிர்காலத்தைக் பொழுதாக கொண்ட நிலங்கள் எது?

Answer: குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

15. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரில் செயப்பாட்டு வினை தொடர் எது?

Answer: ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

16. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

Answer: அங்கு வறுமை இல்லாததால்

17. சிறு நண்டு மணல் மீது படம்மென்று கீறும் - என்ற வரியை பாடியது யார்?

Answer: மகாகவி (இலங்கை)

18. தேன்மழை என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer: சுரதா

19. "திருக்குறள் நீதி இலக்கியம்" என்ற நூலை எழுதியவர் யார்?

Answer: க. த. திருநாவுக்கரசு

20. நாட்டார் கலைகள் என்னும் நூலை எழுதியர் யார்?

Answer: அ. க. பெருமாள்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்