10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - மணற்கேணி - திருவிளையாடற்-புராணம்

  Play Audio

1. "நுண்ணிய கேள்வி யாரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தனிந்தது என்னா" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: திருவிளையாடற் புராணம்

2. பாண்டி நாட்டை ஆட்சி புரிந்தமன்னன் யார்?

Answer: குசேலப்பாண்டியன்

3. கபிலரின் நண்பர் யார்?

Answer: இடைக்காடனார்

4. யாரை குசேலப்பாண்டியன் அவமதித்தான்?

Answer: இடைக்காடனார்

5. மனம் வருந்திய இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார்?

Answer: இறைவனிடம்

6. இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு எங்கு சென்று தங்கினார்?

Answer: வைத்திரு ஆலவாயில்

7. கேண்மையினான் என்பதன் பொருள் என்ன?

Answer: நட்பினன்

8. கேள்வியினால் என்பதன் பொருள் என்ன?

Answer: நூல் வல்லான்

9. தார் என்பதன் பொருள் என்ன?

Answer: மாலை

10. முனிவு என்பதன் பொருள் என்ன?

Answer: சினம்

1

11. தமர் என்பதன் பொருள் என்ன?

Answer: உறவினர்

12. அகத்து உவகை என்பதன் பொருள் என்ன?

Answer: மனமகிழ்ச்சி

13. நீபவனம் என்பதன் பொருள் என்ன?

Answer: கடம்பவனம்

14. மீனவன் என்பதன் பொருள் என்ன?

Answer: பாண்டிய மன்னன்

15. கவரி என்பதன் பொருள் என்ன?

Answer: சாமரை

16. நுவன்ற என்பதன் பொருள் என்ன?

Answer: சொல்லிய

17. ஏன்னா என்பதன் பொருள் என்ன?

Answer: அசைச் சொல்

18. பாண்டிய மன்னன் அணிந்திருந்த மாலை என்ன?

Answer: வேப்பம் பூ மாலை

19. கேள்வியினான் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினையாலணையும் பெயர்

20. காடனுக்கும் கபிலனுக்கும் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: எண்ணும்மை

2

21. பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை. சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையும், சொல்லின் வடிவாக உன் இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியையும் இகழ்ந்து விட்டான் என்று சினத்துடன் கூறியவர் யார்?

Answer: இடைக்காடனார்

22. இறைவன் யாருக்கு மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்?

Answer: கபிலருக்கும், இடைக்காடனாருக்கும்

23. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்?

Answer: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

24. மாசற வசித்த வார்புறு வள்பின் என்ற புறநானூறு வரியை பாடியவர் யார்?

Answer: மோசிகீரனார்

25. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?

Answer: பரஞ்சோதி முனிவர்

26. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

Answer: 3 (மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாயக் காண்டம்)

27. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?

Answer: 64

28. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

Answer: திருமறைக்காடு (வேதாரண்யம்)

29. பரஞ்சோதி முனிவர் காலம் என்ன?

Answer: 17ஆம் நூற்றாண்டு

30. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை?

Answer: வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா

31. மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் யார்?

Answer: பரஞ்சோதி முனிவர்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்