10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - மணற்கேணி - நீதி-வெண்பா

  Play Audio

1. "அருளை பெருக்கி அறிவை திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: கா. ப. செய்குத்தம்பிப் பாவலர்

2. கற்றவர் வழி அரசு செல்லும் என்ற கருத்தைக் கூறிய இலக்கியம் எது?

Answer: சங்கஇலக்கியம்

3. தோன்றும் அளவு ஊரும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறிய நூல் எது?

Answer: திருக்குறள்

4. சத்தம் என்பதன் பொருள் என்ன?

Answer: நூறு

5. ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் ----- எனப்படும்?

Answer: சதாவதானம்

6. உயிருக்கு அரிய துணையாய் இருப்பது எது?

Answer: கல்வி

7. செய்குத்தம்பிப் பாவலரின் காலம் என்ன?

Answer: 1874 முதல் 1950 வரை

8. செய்குத்தம்பிப் பாவலர் எங்கு பிறந்தார்?

Answer: இடலாக்குடி, கன்னியாகுமரி

9. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?

Answer: செய்குத்தம்பிப் பாவலர்

10. செய்குத்தம்பிப் பாவலர் எந்த வயதில் செய்யும் ஆற்றல் பெற்றார்?

Answer: 15 ஆம் வயதில்

1

11. சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர் யார்?

Answer: செய்குத்தம்பிப் பாவலர்

12. செய்குத்தம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி சதாவதானி என்ற பாராட்டைப் பெற்றார்?

Answer: 1907 மார்ச் - 10

13. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும், பள்ளியும் எங்கே உள்ளது?

Answer: இடலாக்குடி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்